படு ஜோர்.. iPhone 16 வரிசையில் இத்தனை மாடலா? நாளை அறிமுகமாகும் போனில் என்னெல்லாம் இருக்கும்? வெயிட்டிங் ஓவர்..
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 9, 2024 ஆம் தேதி (நாளை) அறிமுகம் செய்யவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்களை எதிர்பார்த்து மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஐபோன் வரிசையில் இந்த வருடம் எத்தனை போன்கள் வரும்? எந்த போன்கள் என்ன நிறங்களில் வெளிவரும்? என்னென்ன மாற்றங்களை இந்த வருட ஐபோன் 16 தொடரில் நாம் பார்க்கலாம் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
நீண்ட நாள் காத்திருப்பு ஒரு வழியாக முடிவிற்கு வரப்போகிறது. நாளை ஆப்பிள் நிறுவனம், நடத்தவுள்ள இட்ஸ் க்ளோவ்டைம் (Its Glowtime) என்ற நிகழ்வில், நிறுவனம் அதன் ஐபோன் 16 தொடர் ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. செப்டம்பர் 9, 2024 ஆம் தேதி ஐபோன் 16 சாதனங்கள் வெளிவர போகிறது.

ஐபோன் 16 வரிசையில் எதிர்பார்க்கப்படும் போன்கள் மொத்தம் எத்தனை? என்னென்ன மாடல்கள் தெரியுமா?
இந்த தொடரில் நாம் என்னன்னே ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கலாம் என்ற தகவலை முதலில் பார்க்கலாம். வழக்கம் போல ஆப்பிள் நிறுவனம் அதன் 4 மாடல்களை கொண்ட வரிசையை ஐபோன் 16 தொடரிலும் பின்பற்றும் என்று தெரிகிறது. இதில் வெண்ணிலா மாடலாக ஐபோன் 16 (iPhone 16) இடம்பெறும். ஐபோன் 16 சாதனமே பெரிய டிஸ்பிளேவுடன் ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) என்றொரு மாடலாக வெளியிடப்படும்.
இதுதவிர, ஆப்பிள் நிறுவனம் எப்போதும் அதன் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யும். அந்த வரிசையில், ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro), ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய 2 ப்ரோ வேரியண்ட் மாடல்களை அறிமுகம் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது. உறுதியாக, ஆப்பிள் நிறுவனம் இந்த வருடமும் நான்கு புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யுமென்று நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஐபோன் 16 வரிசையில் உள்ள சாதனங்களில் புதுப்பிக்கப்பட்ட கேமரா மாட்யூல், பெரிய டிஸ்ப்ளே மற்றும் புதிய சிப்செட் ஆகியவை குறிப்பிடத்தக்க மாற்றங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே தொடர்ச்சியாக வெளியான தகவல்களின் மூலம் இந்த மாற்றங்கள் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், தற்போது ஐபோன் 16 தொடரில் என்ன நிறங்கள் இருக்குமென்ற தகவல் லீக் ஆகியுள்ளது
iPhone 16 என்ன நிறங்களில் வெளிவர வாய்ப்புள்ளது? எந்த நிறம் இந்த ஆண்டு கிடைக் வாய்ப்பில்லை?
ஐபோன் 16 வரிசியில் கிடைக்கும் வண்ண விருப்பங்களை வெளிப்படுத்துகிறது. ஐபோன் 16 பிளாக், ப்ளூ, க்ரீன், பிங்க் மற்றும் வெள்ளை என ஐந்து வண்ண விருப்பங்கள் இருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த தொடரில் மஞ்சள் நிற விருப்பம் இல்லை என்பதை இந்த தகவல் தெரிவிக்கிறது.
புதிய ஐபோன் 16 தொடரில் கிளாசிக் மஞ்சள் நிற விருப்பம் இல்லாமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு நடுவே, மற்றொரு வீடியோவில், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) டெமோவில், இந்த சாதனம் டெசர்ட் டைட்டானியம் நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல், ப்ரோ மாடலைப் போன்ற மென்மையான மேற்பரப்பு மற்றும் குரோம் பூச்சுடன் வருகிறது. ஐபோன் 16 சாதனங்கள் எல்லாம் USB type-c போர்ட்களை பெரும் என்று கூறப்படுகிறது.
இது 6.9" இன்ச் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இது மெல்லிய பெசலை கொண்ட எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளேயை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் A18 பயோனிக் சிப்செட்டை கொண்டிருக்கலாம். ஐபோன் 16 மாடல்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அம்சங்களாக அதன் புதிய ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சம் இடம்பெறவிருக்கிறது. ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்பது ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான ஏஐ அம்சமாகும்.


Click it and Unblock the Notifications