அவசரமா iPhone 15 Pro வாங்கிட்டு.. நிதானமா கதறும் பயனர்கள்? Apple எடுத்த அதிரடி முடிவு!
ஆப்பிளின் (Apple) லேட்டஸ்ட் மாடல்களாக ஐபோன் 15 சீரீஸ் கடந்த செப்டம்பர் மாதம் உலகளவில் அறிமுகமானது. இதன்கீழ் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகமாகின.
ஐபோன் 15 சீரிஸின் ப்ரோ மாடல்களை (அதாவது ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்) வாங்கிய வாடிக்கையாளர்கள் ஓவர்ஹீட்டிங் சிக்கல்களை (Overheating issues) சந்தித்தனர். ப்ரோ மாடல்களில் ஏற்படும் அசாதாரணமான ஓவர்ஹீட்டிங் தொடர்பாக பயனர்களிடமிருந்து பல அறிக்கைகள் மற்றும் புகார்கள் வெளிவந்தன.

ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் ஏற்பட்ட ஓவர்ஹீட்டிங் சிக்கலுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏ17 ப்ரோ சிப் (A17 Pro chip) காரணமாக இருக்கலாம் என்று முதலில் நம்பப்பட்டது. சிலர் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் உள்ள வெப்ப சிதறல் பகுதி (Heat dissipation area) சிறியதாக இருப்பதே இதற்கு காரணம் என்கின்றனர்.
சிலர் புதிய டைட்டானியம் ஃப்ரேம் (Titanium frame) தான் ஓவர் ஹீட்டிங் பிரச்சினைகளுக்கு உண்மையான காரணமாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். ஆனால் ஆப்பிள் நிறுவனமோ இதுவொரு மென்பொருள் சிக்கல் (Software issue) ஆகும், இது வன்பொருளுடன் (Hardwaree) முற்றிலும் தொடர்புடையது அல்ல என்று கூறி, ஐஓஎஸ் 17.0.3 அப்டேட்டை (iOS 17.0.3 Update) வெளியிட்டு, ஓவர் ஹீட்டிங் சிக்கல் தொடர்பான புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இருப்பினும் இந்த விஷயத்தை எளிதாக கடந்து செல்ல கூடாது என்பதற்காக ஆப்பிள் நிறுவனம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. மீண்டும் இதுபோன்ற ஓவர்ஹீட்டிங் சிக்கல்கள் அல்லது புகார்கள் எழக்கூடாது என்பதற்காக ஆப்பிள் நிறுவனம் ஒரு கிராபெனின் தெர்மல் சிஸ்டமில் (Graphene thermal system) வேலை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்கள் அதிகமாக வெப்பமடைவதை தடுக்க வரவிருக்கும் ஐபோன் 16 சீரிஸில் (iPhone 16 Series) புதிய வடிவமைப்பு மாற்றங்களை செய்து வருகிறது. இது தற்போது பயன்படுத்தப்படும் தாமிரத்தை (Copper) விட மிகவும் நம்பிக்கைக்குரிய பொருளாகும் என்றும், ஆப்பிளின் இந்த தெர்மல் சிஸ்டம் 2024 ஐபோன் மாடல்களில் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

ஐபோன் 16 சீரீஸ் எப்போது அறிமுகமாகும்? வழக்கம் போல ஆப்பிளின் 2024 ஆம் ஆண்டின்செப்டம்பர் மாதத்தில் தான் ஐபோன் 16 சீரிஸ் அறிமுகமாகும். இதன்கீழ் ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் 16 ப்ரோ மாடலில் சற்றே பெரிய 6.3-இன்ச் டிஸ்பிளே இடம்பெறலாம். ஹை-எண்ட் மாடலான ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆனது 6.9-இன்ச் டிஸ்பிளேவை பெறலாம். இதுதவிர்த்து வெண்ணிலா ஐபோன் 16 மாடலில் சில வடிவமைப்பு மாற்றங்களையும் நாம் எதிர்பார்க்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் (அதாவது ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்) மேம்படுத்தப்பட்ட 48எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராக்கள் பேக் செய்யப்படலாம். குறிப்பாக ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலில் சூப்பர் டெலிபோட்டோ பெரிஸ்கோப் கேமரா (Super telephoto periscope) இடம்பெறலாம்.
மேலும் ஐபோன் 16 சீரீஸின் 2 ப்ரோ மாடல்களிலுமே 5எக்ஸ் ஜூமிங் (5x Zooming) திறன் சேர்க்கப்படலாம். நினைவூட்டும் வண்ணம் தற்போது இந்த அம்சம் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் மட்டுமே உள்ளது. மேலும் அனைத்து ஐபோன் 16 சீரிஸ் மாடல்களிலுமே ஆக்ஷன் பட்டன் (Action Button) சேர்க்கப்படலாம். தற்போது இது ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் மட்டுமே உள்ளது.


Click it and Unblock the Notifications








