மொத்த பிளானும் சேஞ்.. iPhone 16 அறிமுக தேதி இதான்.. இந்த வருடம் ஐபோன் நிகழ்வு சும்மா ஜொலிக்க போகுது..
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் தேதியை செப்டம்பர் 9, 2024 என்று அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வருட நிகழ்வு ''இட்ஸ் க்ளோவ்டைம் (It's Glowtime)'' என்ற தலைப்புடன் நடத்தப்படவுள்ளது என்பதை ஆப்பிள் நிறுவனம் நேற்று நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆப்பிள் நிகழ்வு ET நேரப்படி மாலை 1 மணி அளவிலும், இந்திய நேரப்படி இரவு 10.30 மணி அளவிலும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய ஐபோன் 16 தொடரில் என்னென்ன புதுமைகளை நாம் பார்க்கலாம் என்பது இங்கே.
உலகமே அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் iPhone 16 நிகழ்வுக்கான தேதியை ஆப்பிள் நிறுவனம் இப்போது அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று, இந்திய நேரப்படி இரவு 10.30 மணி அளவில் இந்த ஆப்பிள் ஐபோன் 16 மாடலன் அறிமுக நிகழ்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, கலிபோர்னியாவின் க்யூபெர்டினோவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெறும். இந்த ஆண்டின் தலைப்பு "இட்ஸ் க்ளோவ்டைம்" என்பதாகும்.

ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) அறிமுக தேதி இதான்:
iPhone 16 வரிசையில் வரும் சிப்செட்டில் பல மேம்படுத்தல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கிய வன்பொருள் மாற்றங்களில் ஒன்றாகும். அனைத்து சாதனங்களிலும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸை (Apple Intelligence) ஆதரிக்க இந்த மேம்படுத்தல் மிகவும் முக்கியமானது. தற்போது, ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) மட்டுமே ஆப்பிள் இன்டெலிஜென்ஸிற்கு தேவையான செயலாக்க சக்தியைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஆப்பிள் சாதனங்களில் டிஸ்பிளே அளவுகளில் சிறிய மாற்றங்களை நம்மால் பார்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, அடிப்படை iPhone 16 இல் உள்ள கேமரா வடிவமைப்பை நிறுவனம் சதுர அமைப்பிலிருந்து செங்குத்து அமைப்பிற்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. எல்லா போன்களிலும் பல கேமரா மேம்படுத்தல்கள் இருக்க வாய்ப்புள்ளது. புதிய கேப்ச்சர் பட்டன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த அம்சம் அனைத்து மாதிரிகளிலும் இருக்குமா அல்லது ப்ரோ மாடல்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக வழங்கப்படுமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. iPhone 16 மற்றும் iPhone 16 Plus இல், மியூட் ஸ்விட்ச், iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max இல் உள்ளதைப் போன்ற ஒரு ஆக்ஷன் பட்டன் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஐபோன் நிகழ்வு சும்மா ஜொலிக்க போகுது:
வன்பொருள் மேம்படுத்தல்கள் குறிப்பிடத்தக்கவை என்றாலும், சாப்ட்வேர் மேம்படுத்தல்களும் முக்கியமானதாக இருக்கும். iOS 18, iPadOS 18, macOS Sequoia மற்றும் watchOS 11 போன்ற முக்கிய இயங்குதளங்களின் அப்டேட்களை நாம் இந்த ஆப்பிள் நிகழ்வில் எதிர்பார்க்கலாம். இருப்பினும், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களை பயன்படுத்த விரும்பும் பயனர்கள், iOS 18.1 வெளியீட்டிற்காக அக்டோபர் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
புதிய iPhones உடன் கூடுதலாக, இந்த நிகழ்வின் போது ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய Apple Watch மாதிரிகளை வெளியிடுகிறது. வரும் Apple Watch Series 10 (அல்லது Series X) செயல்திறன் மற்றும் மின்சார பயன்பாட்டை மேம்படுத்தும் புதிய சிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் புதுப்பிக்கப்பட்ட AirPods-ஐயும் ஆப்பிள் வெளியிடும் என்று வதந்திகள் வெளிவந்துள்ளன. புதிய ஐபோன் விற்பனை செப்டம்பர் 20 ஆம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








