ஷாக் கொடுத்த Apple.. ஐபோன் 16-ல 5 மாடலும் இப்படி தான் இருக்க போகுது.. லீக் தகவலால் பரபரப்பு..
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை ஐபோன் மாடலான ஐபோன் 16 (iPhone 16) மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஐபோன் 16 சீரிஸ் வரிசையில் உள்ள மொத்த போன்களின் டிசைன் பற்றிய விபரங்கள் இப்போது லீக் ஆகியுள்ளது.
மாஜின் பு (Majin Bu) வழியாக வெளியான லீக் தகவலில், ஐபோன் 16 சீரிஸ் வரிசையில் மொத்தம் 5 மாடல்கள் இந்த ஆண்டு இடம்பெற போகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. வரவிருக்கும் புதிய ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வழக்கமான ஹரிசாண்டல் கேமரா வடிவமைப்பை பெறாமல், புதிய வெர்டிகள் லைன் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்பதை காண்பித்துள்ளது.

ஐபோன் 16 (iPhone 16) வரிசையில் எத்தனை மாடல்களை எதிர்பார்க்கலாம்?
இதில் ஐபோன் 16 சீரிஸ் சாதனங்கள் ஒற்றை கேமரா, டூயல் கேமரா மற்றும் ட்ரிபிள் கேமரா அம்சத்துடன் வரும் என்பதையும் லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. இந்த வரிசையில், ஐபோன் 16 SE (iphone 16 SE), ஐபோன் 16 பிளஸ் SE (iPhone 16 Plus SE) என்ற பட்ஜெட் விலை பிரிவில் இரண்டு மாடல்களை நாம் எதிர்பார்க்கலாம்.
அதேபோல், ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) என்ற 3 மாடல்கள் வழக்கமான ஐபோன் சீரிஸ் இடங்களை நிரப்பும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 SE சாதனங்களை அதன் போர்ட்போலியோவில் இணைத்துள்ளது.
என்ட்ரியே அதிருது.. பட்ஜெட்டில் ஐபோன் 16:
இதற்கான முக்கிய காரணம், வெவ்வேறு விலை புள்ளிகளில் அதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விருப்பங்களை வழங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது என்று தெளிவாக காண்பித்துள்ளது. இந்த வருட என்ட்ரி-லெவல் சாதனமாக iPhone 16 SE மற்றும் 16 Plus SE ஆகியவை இருக்க போகிறது. இவை டைனமிக் ஐலேண்ட், ஒற்றை கேமரா அமைப்பு, 60Hz டிஸ்ப்ளே மற்றும் சற்று குறைந்த பேட்டரி திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல்கள் பட்ஜெட் ஆப்பிள் ரசிகர்களை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் ஐபோன் 16 மாடல் 120Hz டிஸ்ப்ளே, டூயல்-கேமரா சிஸ்டம் மற்றும் மேம்பட்ட பேட்டரி ஆயுள் ஆகியவற்றுடன் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் அம்சங்களுடன் வெளிவரும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது. இது பட்ஜெட் சந்தைக்கு ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக அமைந்துள்ளது.
ஹை-எண்டு மாடல்களான ப்ரோ சீரிஸ் வரிசையில் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் பிரீமியம் அம்சங்களை உள்ளடக்கியுள்ள. ஆப்பிளின் இந்த ஐபோன் 16 ஸ்மார்ட்போன் சாதனங்கள் சிறந்த செயல்திறன் மற்றும் புதுமைக்கான புதிய வரையறைகளை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாடல்களும் (SE மாடல்கள் தவிர) இந்த முறை பெரிய பேட்டரிகளுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் பல ஆண்டுகளாக அதே ஐபோன் வடிவமைப்பை எந்த குறிப்பிடத்தக்க புதுப்பிப்பும் இல்லாமல் வழங்கி வருகிறது. இது கடந்த ஆண்டு அறிமுகத்தின் போது, ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. உலகளாவிய விற்பனை அதிகரித்து வருவதால், ஆப்பிள் புதிய வடிவமைப்பை வெளியிடுவதற்கான ஒரு சிறந்த தருணமாக இப்போது கருதுகிறது.
இது ஐபோனா இல்லை ஆண்ட்ராய்டு போனா? கலாய்க்கும் ஆண்ட்ராய்டு ரசிகர்கள்:
இந்த நடவடிக்கை நுகர்வோர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் மேலும் வருவாய் வளர்ச்சியையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது. இருப்பினும், இப்போது ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியுள்ள ஐபோன் 16 வடிவமைப்பு ஏறக்குறைய ஆண்ட்ராய்டு போன்களின் வடிவமைப்பை போல் உள்ளது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது என்று கலாய்க்கின்றனர் ஆண்ட்ராய்டு போன் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications








