Home
News

காற்றில் கண்துடைக்கிறதா Apple? புது பொலிவுடன் iPhone 16 ரெடியா? இதுதான் உங்க புது டிசைன்-ஆ? நல்லா பாருங்க..

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் சமீபத்திய ஐபோன் மாடலான ஐபோன் 15 (iPhone 15) வருகையை தொடர்ந்து, நிறுவனம் இப்போது ஐபோன் 16 (iPhone 16) மாடலில் மும்முரமாக வேலை செய்து வருகிறது. ஐபோன் 16 டிசைன் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் வரிசையில் ஐபோன் 15 (iPhone 15) தற்போதைய லேட்டஸ்ட் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐபோன் 15 டிசைன் (iPhone 15 design) பற்றி பேசுகையில், இதன் முன்னோடி மாடலான ஐபோன் 14 (iPhone 14) சீரிஸ் போன்களுடன் ஒப்பிடுகையில், இது அவ்வளவு பெரிய மாற்றத்தை பெற்றிருக்கவில்லை என்பதே உண்மையாகும்.

காற்றில் கண்துடைக்கிறதா Apple? புது பொலிவுடன் iPhone 16 ரெடியா?

ஐபோன் 16 டிசைன் லீக் ஆனது (iPhone 16 Design Leaks):

இரண்டு போன்களுக்கும் இடையில் உள்ள டிசைன் வேறுபாடுகளை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே ஒருவரால் அது எந்த மாடல் என்பதை சுட்டிக் காண்பிக்க முடியும். இது ஆப்பிள் ரசிகர்களை (Apple fans) சோர்வடைய செய்துள்ளது. பல காலமாக ஐபோன்கள் (iPhone) ஒரே மாதிரியான அடிப்படை டிஸைனுடன் சிறிய-சிறிய மாற்றங்களை மட்டும் பெற்றுக்கொண்டு வேறுபாட்டை காண்பிக்கின்றன.

இதை ஆப்பிள் ஐபோன் ரசிகர்கள் (Apple iPhone Fans) விரும்பவில்லை. அதிகப்படியான ஆப்பிள் ரசிகர்களால் இது ஒரு குறைபாடாகவே பார்க்கப்படுவதாக ஆப்பிளுடன் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகையால், ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த புதுவரவான ஐபோன் 16 (iPhone 16) வடிவமைப்பில் கண்களுக்கு எளிதாக புலப்படும் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஒரு லீக் (iPhone 16 leaks) தகவல் பரிந்துரைத்துள்ளது.

சமீபத்தில் மேக்ரூமர்ஸ் (Macrumours) மூலம் வெளியான புகைப்பட தகவலில், புதிய ஐபோன் 16 மாடலின் மூன்று ப்ரோடோடைப் (iPhone 16 prototype models) மாடல்களின் வடிவமைப்புகள் காண்பிக்கப்பட்டுள்ளன. இவை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளிவரவிருக்கும் ஐபோன் 16 ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் டிசைனிங் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஐபோன் 16 ப்ரோடோடைப் மாடலில் அமைக்கப்பட்டுள்ள கேமரா பம்ப் (camera bump) வித்தியாசமானதாக தெரிகிறது.

ஐபோன் 15 சாதனங்களில் வழங்கப்பட்டுள்ள கிராஸ் கேமரா மாட்யூல் (cross camera module) போல் இல்லாமல் இதில், கேமராக்கள் நேரடியாக ஒன்றின் பின் ஒன்றாக செங்குத்தாக நேர்கோட்டில் (vertical camera bump) அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஐபோன் 16 சாதனத்தில் இடம்பெற போகும் வால்யூம் ராக்கர் பட்டன் (Volume rocker button) மற்றும் ஆக்ஷன் பட்டன்களின் இடங்களும் வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மேக்ரூமர்ஸ் புகைப்படம் 3 நிறங்களில் ஐபோன் 16 ப்ரோடோடைப் மாடலை காண்பித்துள்ளது.

காற்றில் கண்துடைக்கிறதா Apple? புது பொலிவுடன் iPhone 16 ரெடியா?

ஐபோன் 16 இல் இடம்பெறப்போகும் மாற்றங்கள் என்னென்ன? (What are the changes coming to iPhone 16?):

இதில் எல்லோவ் (Yellow) அல்லது மஞ்சள், பிங்க் (Pink), மிட்நைட் பிளாக் (Midnight black) நிறங்களில் ஐபோன் 16 காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நிறங்களையும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 இன் வடிவமைப்பின் போதும் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மஞ்சள் நிறத்தில் உள்ள ஐபோன் 16 மாடலின் டிசைன் (iPhone 16 design) தான் முதலாவதாக வடிவமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

இதில் ஒற்றை வால்யூம் ராக்கர், "ஆக்ஷன்" பட்டன் (Action buttuon) மற்றும் ஐபோன் எக்ஸ் (iPhone X) மாடலை நினைவூட்டும் கேமரா பம்ப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிங்க் நிறத்தில் தனி வால்யூம் ராக்கர் பட்டன், தனி ஆக்ஷன் பட்டன் மற்றும் கேமரா உள்ளது. ஐபோன் 12 (iPhone 12) போன்ற பம்ப் டிசைனை கொண்டுள்ளது. இதை வைத்து பார்க்கையில், ஆப்பிள் மீண்டும் அதன் பழைய டிசைனை புதிது போல காண்பிக்க பார்க்கிறது என்பது தெளிவாகிறது.

இறுதியாக மிட்நைட் ஐபோன் 16 மாடல், ஒரு பெரிய ஆக்ஷன் பட்டன் மற்றும் புதிய "கேப்ச்சர் (Capture)" பட்டனை பெறுகிறது. இந்த மிட்நைட் பிளாக் ஐபோன் 16 தான் இறுதி வடிவமைப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தில் ஐபோன் 16 சாதனம் 6.3'' இன்ச் கொண்ட டிஸ்பிளேவை ஐலேண்ட் நாட்ச் உடன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

ஐபோன் 15 சாதனம் 6.1" இன்ச் டிஸ்பிளேவுடன் (display) வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஐபோன் 16 டிசைன் படி, ஐபோன் 16 அதன் முன்னோடியை விட சற்று பெரிசா டிஸ்பிளேவை பெறுகிறது என்பது உறுதியாகியுள்ளது. இது கண்கவர் டிசைன்னா அல்லது கண்துடைப்பு டிசைன்னா என்று, உங்கள் கருத்துகளை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 16 renders shows possible of getting vertical camera layout design change with volume rocker
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X