ஆரம்பமே அதிருது.. இரண்டு புதிய நிறங்களில் iPhone 16 Pro.. மொத்தம் 5 போன்.. என்னென்னெ மாடல்?
இந்த செப்டம்பரில் அறிமுகமாகவிருக்கும் ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் 2 புதிய நிறங்களில் வெளிவரும் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை வெளிவராத 2 புதிய நிறங்களை இது பெரும் என்று கூறப்பட்டுள்ளது.
iPhone 16 Pro: ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் சாதனமான ஐபோன் 16 வரிசை வரும் செப்டம்பர் மாதம் அல்லது அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்போதிலிருந்தே, வரவிருக்கும் ஐபோன் 16 சீரிஸ் சாதனங்கள் பற்றிய தகவல்கள் லீக் ஆகி வருகிறது. இந்த முறை நிறுவனம் 5 ஐபோன் 16 மாடல் சாதனங்களை அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது.

iPhone 16 சீரிஸ் மாடல்கள்: தெரியாதவர்களுக்கு ஐபோன் 16 SE (iPhone 16 SE), ஐபோன் 16 பிளஸ் SE (iPhone 16 Plus SE), ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 SE), ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய மாடல்களை ஆப்பிள் இந்த முறை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 16 இல் என்ன மாற்றங்கள்: இந்த முறை ஐபோன் 16 சாதனங்கள் பல வடிவமைப்பு மேம்படுத்தல்களை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐபோன் 16 சாதனங்கள் இந்த முறை வெர்டிகள் சிங்கிள் லைன் கேமரா மாட்யூல் அமைப்பை கொண்டிருக்கும் என்றும் வந்தந்திகள் வேகமாக பரவி வருகிறது. இதுபோல் பல தகவல்கள் சமீபத்தில் வெளியானது. சமீபத்தில் வெளியான மற்றொரு லீக் தகவல் புது ஹைப்பை உருவாக்கியுள்ளது.
2 புதிய நிறங்கள்: ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) சாதனம் 2 புதிய நிறங்களில் வெளிவரும் என்று சமீபத்திய தகவல் குறிப்பிட்டுள்ளது. இது என்ன நிறம்? இந்த நிறங்கள் பற்றி நமக்கு என்ன தெரியும் என்ற முழு விபரம் இதோ. ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனம் இந்த ஆண்டில் எல்லோவ் (Yellow) மற்றும் டைட்டானியம் க்ரேய் (Titanium Grey) நிறங்களில் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

டெசர்ட் எல்லோவ் | டெசர்ட் க்ரேய்: இதே நிறங்கள் ஏற்கனவே ஆப்பிள் ஐபோன்களில் காணப்பட்டது தானே என்று சிலர் கருதலாம். நிறங்களின் பெயர் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், இது டெசர்ட் எல்லோவ் (Desert Yellow) நிறத்திலும், டெசர்ட் க்ரேய் (Desert Grey) அல்லது சிமெண்ட் க்ரேய் (Cement Grey) அல்லது டைட்டானியம் க்ரேய் (Titanium Grey) என்ற பெயர்களில் வெளிவரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
பாலைவன மணல்: இந்த டெசர்ட் டோன் ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) சாதனத்தில் பார்க்கப்படும் தங்க நிறத்தை ஒத்ததாக விவரிக்கப்படுகிறது. ஆனால், ஐபோன் 16 ப்ரோவில் ஆழமான மற்றும் கனமான தோற்றத்துடன், பாலைவன மணலை நினைவூட்டும் வகையில் கண்களை ஈர்க்கும் தோற்றத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது என்று
கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன் இந்த நிறங்கள் இருந்ததா? டிப்ஸ்டரின் கூற்றுப்படி, புதிய க்ரேய் நிறம் ஐபோன் 6 இல் பயன்படுத்தப்பட்ட ஸ்பேஸ் கிரே நிறத்தை ஒத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் இந்த வண்ணங்களுக்கான பெயர்களை இறுதி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. எனவே ஒவ்வொன்றிற்கும் இரண்டு விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்னும் கூடுதல் நிறங்கள் இருக்கிறதா? இத்துடன் இன்னும் கூடுதல் வண்ண விருப்பங்களை சேர்க்க ஆப்பிள் விவாதம் செய்து வருவதாக கூறப்பட்டாலும், அவை இறுதி வரிசையில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கருதப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால், ஐபோன் 16 ப்ரோ இந்த முறை 2 புதிய நிறத்துடன், அல்லது அதற்கு மேற்பட்ட நிறங்களில் வெளிவர வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications