Home
News

ஆப்பிள் சைலெண்டாக செய்யும் வேலை.. ஒரே ஒரு ஸ்டிக்கர் மூலம் அம்பலம்.. iPhone 16 Pro இந்தியாவில் தயாராகிறதா?

ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் அடுத்த புது வரவு ஸ்மார்ட்போன் மாடலான ஐபோன் 16 (iPhone 16) சீரிஸ் வரிசை மாடல்களை வரும் செப்டம்பர் 10, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro), மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய மாடல்களை கொண்டிருக்கும். இதில் இருக்கும் ப்ரோ மாடல்களை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அசெம்பிள் செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபோகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இணையத்தில் லீக் ஆன புதிய புகைப்படம் ஒன்றில், காணப்படும் ஐபோன் பாக்ஸ் லேபிள் அடையாளங்களில் "மேட் இன் இந்தியா (Made In India)" என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டுள்ளதை நாம் பார்க்க முடிகிறது. ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) மாடல்களை மட்டுமே அசெம்பிள் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் சைலெண்டாக செய்யும் வேலை.. ஒரே ஒரு ஸ்டிக்கர் மூலம் அம்பலம்..

ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max):

இதில் டிஸைண்டு பை ஆப்பிள் இன் கலிபோர்னியா "Designed by Apple in California" என்றும் அச்சிடப்பட்டுள்ளது. ஆப்பிளின் நிலையான iPhone 16 மற்றும் iPhone 16 Plus போன்ற மாடல்களை நிறுவனம் உள்நாட்டில் உற்பத்தி செய்யாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், இந்த புதிய மாடல்களுக்கான தேவை ஏற்றுமதி மூலம் பூர்த்தி செய்யப்படும். உள்ளூர் உற்பத்தி அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்திய ஐபோன் தொழிற்சாலைகளில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபாக்ஸ்கான் தவிர, இந்தியாவில் உள்ள பிற ஆப்பிள் கூட்டாளர்களான பெகாட்ரான் மற்றும் டாடா குரூப் போன்றவையும் விரைவில் ஐபோன் 16 ப்ரோ மாடல்களை தயாரிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கம் இந்தியாவில் உற்பத்திக்கான பரந்த அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்வதில் ஆப்பிளின் முதல் முயற்சி இதுவல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, கடந்த ஆண்டு,ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனமான ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்யத் தொடங்கியது. சமீபத்திய ஐபோன்களின் விலை உயர்வால், இந்தியாவில் தேவை குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட புதிய iPhone 16 Pro மற்றும் Pro Max மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா போன்ற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐபோன் 17 தயாராகுமா?

ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் போன்ற உயர்நிலை மாடல்களின் உள்ளூர் அசெம்பிளியை நோக்கிய மாற்றம், இந்தியாவின் உற்பத்தித் திறன்களில் ஆப்பிளின் வளர்ந்து வரும் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த வளர்ச்சி உள்நாட்டில் இன்னும் மேம்பட்ட உற்பத்தி நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு லீக் தகவலின் படி, ஆப்பிள் நிறுவனம் இதற்கு அடுத்தபடியாக ஐபோன் 17 சாதனங்களை இந்தியாவில் தயாரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் உற்பத்தித் தடத்தை விரிவுபடுத்தி வருவதால், ஆரம்ப ஏற்றுமதிக் கட்டத்தைத் தொடர்ந்து உள்ளூர் உற்பத்தி விரைவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு வலுவான உள்ளூர் விநியோகச் சங்கிலியை ஆப்பிள் நிறுவும் அதே வேளையில், உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 16 Pro and iPhone 16 Pro Max Smartphone Made In India Label Goes Viral Internet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X