கெத்து காட்டிட்டான்யா.. உருமாறும் iPhone 16 Pro.. வேற லெவலில் மாறும்.. அனல் பறக்கும் லீக்ஸ்..
அடுத்த தலைமுறை iPhone 16 மாடல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இருக்காது என்று பல அறிக்கைகள் இதற்கு முன் குறிப்பிட்டன. ஆனால், சமீபத்திய லீக் தகவல் ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடல்களில் வரப்போகும் மாற்றங்கள் குறித்து அறிவித்துள்ளன.
ஆப்பிள் (Apple) நிறுவனம் இந்த 2024 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யவிருக்கும் அதன் ஐபோன் 16 தொடரில் AI அம்சத்தை இணைப்பதில் கவனம் செலுத்தும் என்று முன்பு கூறப்பட்டு வந்தது. இப்போது, ஆப்பிள் ட்ராக் (AppleTrack) என்ற யூடியூப் (YouTube) சேனல் வழியாக வெளியான தகவலில் ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடல்களில் வரும் விரிவான மாற்றங்கள் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இத்துடன், கூடுதலாக, நம்பகமான ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சீ-குவோ (Ming-Chi Kuo) குறிப்பிட்ட iPhone 16 Pro மாறுபாட்டின் விவரங்களும், ஐபோன் 17 ஸ்மார்ட்போனில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்த தகவலும் இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளன. வெளியான புதிய தகவலின் படி, ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் சாதனங்களில் உள்ள டைனமிக் ஐலேண்ட் அளவை ஆப்பிள் குறைக்கலாம் என்று வீடியோ பரிந்துரைக்கிறது.
இது அதிக பாடி-டூ-பாடி விகிதத்தை வழங்கும். வீடியோவில் உள்ள ரெண்டர்களில் ஒன்று, ஐபோன் 16 ப்ரோவை மையமாக சீரமைக்கப்பட்ட பஞ்ச்-ஹோல் கட்அவுட்டுடன் காட்டுகிறது. ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் டைனமிக் ஐலேண்ட் அம்சத்தை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆப்பிள் நிறுவனம் டைனமிக் ஐலேண்ட் அம்சத்தை கைவிடுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
அதேபோல், ஆப்பிள் நிறுவனம் வரவிருக்கும் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் கூடுதல் சேர்ப்பாக, அதன் பவர் பட்டனுக்கு கீழே ஒரு பிரத்யேக கேப்ச்சர் (Capture) பட்டனை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்த திட்டத்தை மீண்டும் வலியுறுத்துகிறது என்று லீக் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டைனமிக் ஐலேண்ட் அம்சத்தை நிராகரிப்பதன் மூலம் ஐபோன் 16 ப்ரோவின் (iPhone 16 Pro) திரை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 16 ப்ரோ சாதனத்தின் டிஸ்பிளே (Display) அளவு 6.1" இன்ச் இலிருந்து 6.3" இன்ச் வரை அதிகரித்துளளது. அதேசமயம் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) சாதனத்தின் 6.7" இன்ச் டிஸ்ப்ளே, 6.9" இன்ச் ஆக உயர்ந்துள்ளது.
ஐபோன் 16 ப்ரோ சாதனம் 5x டெட்ராபிரிசம் ஆப்டிகல் ஜூம் கேமராவைக் கொண்டிருக்கும். இது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸுக்கு (iPhone 15 Pro Max) மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இரண்டு ப்ரோ மாடல்களிலும் உள்ள 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் யூனிட் 48MP 1/ 2.55-inch அளவிற்கு மேம்படுத்தப்படும் என்று ஆய்வாளர் மிங்-சீ-குவோ கூறியுள்ளார்.
இறுதியாக, இந்த ஐபோன் 16 ப்ரோ மாடல் சாதனங்கள் A18 ப்ரோ (A18 Pro) என அழைக்கப்படும் புதிய சிப்செட்டை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், மிங்-சீ-குவோ வெளியிட்ட மற்றொரு தகவலில், 2025 ஆம் ஆண்டில் வெளிவரும் ஐபோன் 17 (iPhone 17) வரிசையும் சில மேம்படுத்தலை பெரும்.
இதில் குறிப்பாக, ஐபோன் 17 சாதனங்களில் உள்ள முன்பக்க செல்ஃபி கேமரா 24MP சென்சார் (24MP selfie sensor) உடன் 6P லென்ஸ் சிஸ்டத்தை (6P lens system) ஆதரிக்கும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








