iPhone 16 வெறும் 8 அடி பாய்ந்தால்.. iPhone 17 சும்மா 12 அடி பாயுமாம்.. சைலன்ட் பிளானுடன் இயங்கும் Apple..
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் புதிய ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) ஸ்மார்ட்போன் சாதனங்களை வரும் செப்டம்பர் 9, 2024 ஆம் தேதி உலகத்திற்கு அறிமுகம் செய்யவுள்ளது. எந்த பக்கம் திரும்பினாலும், ஐபோன் 16 பற்றிய செய்திகளை தான் நம்மால் பார்க்க முடிகிறது. ஐபோன் 16 பற்றிய ஆரவாரமான பேச்சுக்கு மத்தியில், இப்போது அரசல்புரசலாக ஐபோன் 17 (iPhone 17) ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களும் வெளிவர துவங்கியுள்ளது. ஐபோன் 16 போன்களை காட்டிலும், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 சாதனங்களை வேறு லெவலில் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இதை நம்பும் விதமாக தற்போது இணையத்தில் ஒரு சுவாரசியமான தகவல் லீக் ஆகியுள்ளது. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். ஆப்பிள் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்பதை ஆப்பிள் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஐபோன் 16 போனை விட ஐபோன் 17 இல் மாபெரும் மாற்றம் வருகிறதா?
இந்த அறிமுக நிகழ்வை, ஆப்பிள் நிறுவனம் இந்த முறை "இட்ஸ் க்ளோவ்டைம் (Its Glowtime)" என்ற பெயருடன் நடத்தவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபோன் 16 சீரிஸ் வரிசையில், ஆப்பிள் நிறுவனம் இந்த முறை 4 ஐபோன் மாடல்களையும், ஒரு ஆப்பிள் வாட்ச் சாதனத்தையும், ஒரு புதிய ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது.
இதில் ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro), மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய மாடல்களை அறிமுகம் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியான லீக் தகவலில் ஐபோன் 16 பற்றிய தகவலை காட்டிலும் மிகவும் சுவாரசியமான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் மாடலான ஐபோன் 17 தொடர் சாதனங்கள் 12GB ரேம் கொண்ட அம்சத்தை கொண்டிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது, அறிமுகமாகவிருக்கும் ஐபோன் 16 தொடர் போன்களில் நிறுவனம் வெறும் 8GB ரேம் அம்சத்தை மட்டுமே வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஐபோன் 17 சாதனங்கள் மாபெரும் மாற்றத்தை பெறப்போவதாக லீக்கில் கூறப்பட்டுள்ளது.
iPhone 16 வெறும் 8 அடி பாய்ந்தால்.. iPhone 17 சும்மா 12 அடி பாயுமாம்:
இந்த மாபெரும் ரேம் அப்கிரேட் மாற்றத்திற்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான ஆப்பிள் இன்டலிஜென்ஸ் ஏஐ (Apple Intelligence AI) தான் காரணமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியுள்ள ஏஐ அம்சமானது கிளவுட் பேஸ்ட் அம்சமாக பயன்படுத்த கிடைக்கவிருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் இது முழுக்க-முழுக்க போனில் இன்பில்டாக வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏஐ அம்சங்களை ஸ்மூத்தாக இயக்க கட்டாயம் கூடுதல் மெமரி தேவைப்படும்.
இந்த காரணத்தினால், ஐபோன் 17 மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் கட்டாயம் 12GB ரேம் கொண்ட ஸ்டோரேஜ் மாடலக்ளை அறிமுகம் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்கு, ஆப்பிள் நிறுவனத்தின் போட்டியாளரான கூகுள் நிறுவனம் கூட, அதன் புதிய பிக்சல் 9 (Pixel 9) சாதனங்களில் அதன் சொந்த ஏஐ அம்சத்தை ஸ்மூத்தாக இயக்க தனியான ரேம் அம்சத்தை கொண்டுள்ளது.
ஆம், ஏஐ அம்சத்தை எந்தவொரு இடையூறும் இல்லாமல் திறம்பட இயக்க கூகுள் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்களில் பிரத்தியேகமான மற்றும் தனிப்பட்ட ரேம் அம்சத்தை வழங்கியுள்ளன. இதேபோல், ஆப்பிள் நிறுவனமும் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17 சாதனங்கள் வரும் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதை வைத்து பார்க்கையில், iPhone 16 8GB ரேம் உடன் வெறும் 8 அடி பாய்ந்தால், iPhone 17 டிவைஸ் 12GB ரேம் உடன் 12 அடி பாயும் போல் தெரிகிறது.


Click it and Unblock the Notifications








