ஆப்பிள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. iPhone 16 வரிசையில் 4 இல்லை மொத்தம் 6 புது மாடலா? என்னென்ன எதிர்பார்க்கலாம்?
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் புதிய ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 series) மாடலை வரும் செப்டம்பர் 10, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஐபோன் 16 சீரிஸ் வரிசையில் மொத்தம் 4 மாடல்கள் இந்த ஆண்டு இடம்பெற போகிறது என்பதை முந்தைய லீக் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆனால், யாரும் எதிர்பார்த்திடாத தற்போதைய புதிய லீக் தகவல் படி, ஐபோன் 16 வரிசையில் 6 போன்கள் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. என்னது 6 போன்களா? உண்மையாவா என்று நீங்கள் கேட்கலாம். வாருங்கள் உண்மையை தெரிந்துகொள்ளலாம்.
இதுவரை நமக்கு கிடைத்த தகவல் படி, ஆப்பிள் நிறுவனம் அதன் 16 சீரிஸ் வரிசையில் ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) என்ற 4 மாடல்களை நிறுவனம் செப்டம்பர் 10, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது.

ஆப்பிள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. iPhone 16 வரிசையில் 4 இல்லை மொத்தம் 6 புது மாடலா?
இவை வழக்கமான ஐபோன் சீரிஸ் இடங்களை நிரப்பும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 16 வரிசையில் புதிதாக ஐபோன் 16 SE சாதனங்களை அதன் போர்ட்போலியோவில் இணைத்துள்ளது என்று சமீபத்திய லீக் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஐபோன் 16 SE (iphone 16 SE) மற்றும் ஐபோன் 16 பிளஸ் SE (iPhone 16 Plus SE) என்ற இரண்டு பட்ஜெட் மாடல்களை நாம் எதிர்பார்க்கலாம்.
வரவிருக்கும் புதிய ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வழக்கமான ஹரிசாண்டல் கேமரா வடிவமைப்பை பெறாமல், புதிய வெர்டிகள் லைன் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்பதை லீக் தகவல் காண்பித்துள்ளது. இதில் ஐபோன் 16 சீரிஸ் சாதனங்கள் ஒற்றை கேமரா, டூயல் கேமரா மற்றும் ட்ரிபிள் கேமரா அம்சத்துடன் வரும் என்பதையும் லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது.
பட்ஜெட் விருப்பமாக ஐபோன் 16 SE (iphone 16 SE) மற்றும் ஐபோன் 16 பிளஸ் SE (iPhone 16 Plus SE) வெளிவருதனால், இதன் அறிமுகம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. முதற்கட்டமாக, ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய போன்களை நிறுவனம் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது.
iPhone 16 தொடரில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?
இவற்றின் விற்பனை இந்தியாவை பொறுத்தவரையில், செப்டம்பர் 20, 2024 ஆம் தேதி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் 4 போன் மாடல்களை மட்டுமே எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு, ஐபோன் 16 SE ஒரு எதிர்பாராத சப்ரைஸ் ஆக இருக்குமென்று கூறப்படுகிறது. இந்த வருட என்ட்ரி-லெவல் சாதனமாக iPhone 16 SE மற்றும் 16 Plus SE ஆகியவை இருக்க போகிறது.
இவை டைனமிக் ஐலேண்ட், ஒற்றை கேமரா அமைப்பு, 60Hz டிஸ்ப்ளே மற்றும் சற்று குறைந்த பேட்டரி திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்கள் பட்ஜெட் ஆப்பிள் ரசிகர்களை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் ஐபோன் 16 மாடல் 120Hz டிஸ்ப்ளே, டூயல்-கேமரா சிஸ்டம் மற்றும் மேம்பட்ட பேட்டரி ஆயுள் ஆகியவற்றுடன் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் அம்சங்களுடன் வெளிவரும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது.
இது பட்ஜெட் சந்தைக்கு ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக அமைந்துள்ளது. ஹை-எண்டு மாடல்களான ப்ரோ சீரிஸ் வரிசையில் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் பிரீமியம் அம்சங்களை உள்ளடக்கியுள்ள. ஆப்பிளின் இந்த ஐபோன் 16 ஸ்மார்ட்போன் சாதனங்கள் சிறந்த செயல்திறன் மற்றும் புதுமைக்கான புதிய வரையறைகளை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாடல்களும் (SE மாடல்கள் தவிர) இந்த முறை பெரிய பேட்டரிகளுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








