Home
News

iPhone 16 வாங்க திருவிழா கூட்டம் போல் திரண்ட Apple வெறியர்கள்.. முதல் நாளே இவ்வளவு கூட்டமா? சலுகை எவ்வளவு?

ஆப்பிள் (Apple) நிறுவனம் இன்று அதன் ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய 4 ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் காலை 8 மணி முதல் துவங்கியது. ஆப்பிள் சாக்கெட் (Apple Saket) மற்றும் ஆப்பிள் பிகேசி (Apple BKC) கடைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர் கடைகள் வழியாக முன்பதிவு செய்யப்பட்ட ஐபோன் 16 மாடல்களுடன் இன்று விற்பனை செய்யப்பட்டது.

தெரியாதவர்களுக்கு, ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) போன்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 13, 2024 ஆம் தேதி முதல் துவங்கியது. புதிய ஐபோன் 16 மாடல்களை வாங்க ஆப்பிள் ரசிகர்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தெல்லாம் முக்கிய நகரங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களை (Apple Stores) நோக்கி இன்று படையெடுத்துள்ளனர். இவர்களை ஆப்பிள் ரசிகர்கள் என்று சொல்வதை விட, ஆப்பிள் வெறியர்கள் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்.

iPhone 16 வாங்க திருவிழா கூட்டம் போல் திரண்ட Apple வெறியர்கள்..

iPhone 16 வாங்க திருவிழா கூட்டம் போல் திரண்ட Apple வெறியர்கள்:

நேற்று நள்ளிரவு முதல் நடைபெற்ற சில விசித்திரமான நிகழ்வுகளை வைத்து தான், நாம் இவர்களை ஆப்பிள் வெறியர்கள் என்று குறிப்பிடுகிறோம். நேற்று நள்ளிரவு முதலே பல ஆப்பிள் வெறியர்கள் நீண்ட வரிசையில் இரவு முழுக்க காத்திருந்து, ஆப்பிள் கடை வாசல்களில் பெரிய வரிசையை உருவாக்கி கடை திறக்கும் வரை காத்திருக்கிந்துள்ளனர். ஆப்பிள் வெறியர்களின் எண்ணிக்கை இன்று காலை 08:00 மணிக்கு மேல் கட்டுக்கடங்காமல் திருவிழா கூட்டம் போல் மாறியதாக கூறப்படுகிறது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது என்று ஆப்பிள் இந்தியா தெரிவித்துள்ளது. ஐபோன் 16சாதனத்தின் 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 79,900 முதல் துவங்குகிறது. அதேபோல், ஐபோன் 16 பிளஸ் சாதனத்தின் 128GB மாடல் ரூ. 89,900 முதல் இன்று வாங்க கிடைக்கிறது. இவை 256GB மற்றும் 512GB ஸ்டோரேஜ் மாடல்களிலும் Black, Pink, Teal, Ultramarine, White நிறங்களிலும் இப்போது வாங்க கிடைக்கின்றன.

ஐபோன் 16 ப்ரோ சாதனத்தின் 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 1,19,900 என்ற விலை முதல் வாங்க கிடைக்கிறது. அதேபோல், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் சாதனத்தின் 256GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 1,44,900 விலை முதல் வாங்க கிடைக்கிறது. இந்த மாடல்கள் 512GB மற்றும் 1TB ஸ்டோரேஜ் விருப்பதிலும் வாங்க கிடைக்கின்றன. இவை Black Titanium, Desert Titanium, Natural Titanium, White Titanium நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

முதல் நாளே இவ்வளவு கூட்டமா? iPhone 16 மாடல்கள் மீது சலுகை எவ்வளவு?

நீங்கள் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நேரடியாக புதிய iPhone 16 சீரிஸ் மாடல்களில் ஏதேனும் ஒன்றை வாங்கினால், உங்களுக்கு உடனடியாக ரூ. 5000 மதிப்பிலான தள்ளுபடி கிடைக்கிறது. இது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளின் பயனர்களுக்கு மட்டும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் 16 டிவைஸை இப்போது 3 அல்லது 6 மாதங்களுக்கு கட்டணமில்லா EMI உடன் வாங்கலாம். கூடுதலாக, ரூ. 67,500 வரை எக்ஸ்சேஞ் விருப்பமும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
iPhone 16 iPhone 16 Plus iPhone 16 Pro iPhone 16 Pro Max 128GB 256GB 512GB 1TB Goes Sale Offer Price in Apple Stores
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X