என்னது! iPhone 15 அறிமுகம் லேட் ஆகிறதா? அதிர்ச்சியில் Apple ரசிகர்கள்.. காரணம் இது தானா?
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதுவரவு மாடலான ஐபோன் 15 சீரிஸ் (iPhone 15) மாடலை வரவேற்க மக்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வழக்கம் போல ஆப்பிள் நிறுவனம் இந்த புதிய ஐபோன் சாதனத்தை செப்டம்பர் மாதத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சமீபத்தில் வெளியான தகவலின் படி, புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டில் சில பின்னடைவுகளை ரசிகர்கள் சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, ஐபோன் 15 சாதனத்தின் அறிமுகம் மற்றும் அதன் விற்பனையில் ஆப்பிள் ரசிகர்கள் தாமதத்தை சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான காரணமும் விளக்கப்பட்டுள்ளது.

ஆப்பிளின் ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு தாமதத்துடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஆப்பிள் வழக்கமாக செப்டம்பரில் அதன் புதிய ஐபோன் தலைமுறையை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. அதேபோல், அதே மாதத்தில் சில நாட்களுக்குப் பிறகு அவற்றை விற்பனைக்கு களமிறக்கும் பழக்கத்தையும் ஆப்பிள் நிறுவனம் நீண்ட காலமாக பின்பற்றி வருகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, ஐபோன் 12 தொடர் வழக்கத்தை விட தாமதமாக வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு, ஆப்பிளின் வரவிருக்கும் ஐபோன் 15 சீரிஸ் சாதனங்களும் இதேபோன்ற தாமதத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை காரணம் கொவிட் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
பாங்க் ஆஃப் அமெரிக்கா (BoA) ஆய்வாளர் வெளியிட்ட தகவலின் படி, ஐபோன் 15 சீரிஸ் செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வருவதை விட அக்டோபரில் தான் சந்தைகளில் கிடைக்க முடியும் என்று கூறியிருக்கிறார். ஐபோன் 15 வெளியீட்டின் தாமதம் ஆப்பிளின் செப்டம்பர் காலாண்டையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

டிஸ்பிளே உற்பத்தி சிக்கல்கள் காரணமாக ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் போது பற்றாக்குறையாக இருக்கும் என்றும் மற்றொரு அறிக்கை கூறுகிறது. இதை வைத்து பார்க்கையில், ஐபோன் 15 இன் வெளியீடு சில வாரங்கள் தாமதமாகலாம், இது அடுத்த தலைமுறை ஐபோன்களின் அறிமுகத்தை டிசம்பர் காலாண்டிற்குள் தள்ளும் என்று கூறுகிறார்.
2020 இல் iPhone 12 அறிமுகம் குறித்து இந்த நபர் வெளியிட்ட தகவல்கள் மிகவும் துல்லியமான கணிப்பைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விநியோகச் சங்கிலியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, iPhone 12 Pro இன் ஷிப்பிங் அக்டோபர் பிற்பகுதிக்கு தள்ளப்பட்டது மற்றும் iPhone 12 mini மற்றும் iPhone 12 Pro Max இன் ஷிப்பிங் நவம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்பட்டது.
இதேபோல், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவை செப்டம்பரில் அதிகாரப்பூர்வமாக இருக்கும், ஆனால் டிஸ்பிளே உற்பத்தியில் உள்ள சிக்கல்கள் காரணமாக, இவை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கு என்று இவர் கூறியுள்ளார்.
ஆப்பிளின் டிஸ்ப்ளே சப்ளையர்கள் பெசல்களின் அகலத்தைக் குறைக்க புரோ மாடல்களுக்கான புதிய உற்பத்தி செயல்முறையைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இது ஐபோன் 15 ப்ரோ மாடல்களை முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும்போது சற்று பெரிய டிஸ்பிளே அளவை பெற அனுமதிக்கிறது. ப்ரோ மாடல்களின் மெட்டல் ஷெல்லுடன் இணைக்கப்படும் போது நம்பகத்தன்மை சோதனையில் திரைகள் தோல்வியடைவதால் LG டிஸ்ப்ளே உற்பத்தி செயல்பாட்டில் சிக்கல்களை எதிர்கொள்கிறது. இதனால் தாமதம் ஏற்பட வாய்ப்பு அதிகமாகவுள்ளது.


Click it and Unblock the Notifications








