Home
News

iPhone 15 Pro vs Xiaomi 14 Pro: யார் கெத்து? எந்த போன் சூப்பர் சாய்ஸ்? எந்த போன் வாங்கினால் பெஸ்ட்?

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) சாதனத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதற்கு போட்டியாக ஆண்ட்ராய்டு வரிசையில் எந்த மாடல் பெஸ்ட் ப்ரோ மாடல் போனாக இருக்குமென்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது.

ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) சாதனத்திற்கு நிகரான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்ற தேர்வில் சியோமி (Xiaomi) நிறுவனத்தின் சியோமி 14 ப்ரோ (Xiaomi 14 Pro) மாடல் தேர்வாகியுள்ளது. இந்த 2 ஸ்மார்ட்போன்களும் ப்ரோ வேரியண்ட் மாடல் என்பதனால் இதன் அம்சங்களை ஒப்பிட்டு, இந்த 2 போனில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

iPhone 15 Pro vs Xiaomi 14 Pro: யார் கெத்து? எந்த போன் சூப்பர் சாய்ஸ்?

1. ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ vs சியோமி 14 ப்ரோ (Apple iPhone 15 Pro vs Xiaomi 14 Pro) டிஸ்பிளே (Display):
ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ (Apple iPhone 15 Pro) சாதனம் 6.1 இன்ச் கொண்ட 1179 x 2556 பிக்சல்கள் (முழு HD+) சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவுடன் வருகிறது. சியோமி 14 ப்ரோ (Xiaomi 14 Pro) சாதனம் 6.73 இன்ச் கொண்ட 1440 x 3200 பிக்சல்கள் (குவாட் HD+) AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

2. சிப்செட் (Chipset):
ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ சாதனம் ஆப்பிள் ஏ17 ப்ரோ (Apple A17 Pro) ஆக்டா கோர் 3.78GHz (octa-core 3.78 GHz) சிப்செட்டை கொண்டுள்ளது. மறுபுறம் சியோமி 14 ப்ரோ சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட்டை கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் 3.3GHz (octa-core 3.3 GHz) திறனில் இயங்குகிறது.

3. ஸ்டோரேஜ் (Storage):
ஐபோன் 15 ப்ரோ சாதனம் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி, 8 ஜிபி ரேம் + 512 ஜிபி, 8 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் போன்ற விருப்பங்களில் வருகிறது. சியோமி 14 ப்ரோ சாதனம் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி வேரியண்ட் மாடல்களில் வருகிறது.

4. கேமரா (Camera):
iPhone 15 Pro ஸ்மார்ட்போன் சாதனம் டிரிபிள் கேமரா அம்சத்துடன் வருகிறது. இதில் 48 + 12 + 12 MP, f/1.8 + f/2.8 + f/2.2 பின்பக்க கேமரா மற்றும் டூயல் 12 MP + SL 3D f/1.9 முன்பக்க கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. Xiaomi 14 Pro மாடலில் 50 + 50 + 50 MP, f/1.4 - f/2.0 + f/2.0 + f/2.2 என்ற ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 32 MP முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

5. பேட்டரி (Battery):
ஐபோன் 15 ப்ரோ சாதனம் 3274mAh பேட்டரியை 27W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங்
அம்சத்துடன் கொண்டுவருகிறது. சியோமி 14 ப்ரோ சாதனம் 4880mAh பேட்டரியை 120W பாஸ்ட் சார்ஜிங் உடன், 50W பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் உடன் வருகிறது.

6. கூடுதல் அம்சம் (Other features):
ஐபோனில் 5G, இரட்டை சிம், IP68 சான்றிதழ், eSIM, MagSafe, ஃபேஸ் ஐடி போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சியோமி போனில் 5G, இரட்டை சிம், IP68 சான்றிதழ், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், eSIM, IR பிளாஸ்டர் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

7. சாப்ட்வேர் (Software):
ஐபோன் 15 ப்ரோ சாதனம் iOS 17 இயங்குதளத்தில் இயங்குகிறது. சியோமி 14 ப்ரோ சாதனம் ஆண்ட்ராய்டு 14 (android 14) ஹைப்பர்ஓஎஸ் (hyperOS) உடன் இயங்குகிறது.

முழு அம்சம் மற்றும் விலையை வைத்து பார்க்கையில், ஒட்டுமொத்தமாக சியோமி 14 ப்ரோ பல இடங்களில் நன்மதிப்பை பெற்றுள்ளது. ஐபோனை காட்டிலும் சியோமி சாதனம் பயனர்களின் தேவையை அதிக செலவின்றி நிறைவேற்றுகிறது.

Best Mobiles in India

English summary
iPhone 15 Pro Vs Xiaomi 14 Pro Specifications Compared Which Is a Best Smartphone To Buy Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X