iPhone 14-க்கு முன்னதாக iPhone 15, 16 பற்றி வெளியான ரிப்போர்ட்! இது ரொம்ப அட்வான்ஸா இருக்கே ஆப்பிள்?
உலக ஆப்பிள் ரசிகர்கள் அனைவரும் ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14) அறிமுகத்திற்காகக் காத்திருக்கும் இந்த வேளையில், ஒரு புதிய செய்தி அடுத்த ஆண்டில் வரவிருக்கும் புதிய ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15) பற்றிய சில சுவாரசியமான தகவலை வெளிப்படுத்தியுள்ளது. ஆப்பிள் ஐபோன் 14 ஐ எதிர்பார்த்துக் காத்திருக்கும் தீவிரமான ஆப்பிள் ரசிகர்களில் நீங்களும் ஒருவர் என்றால், ஐபோன் 15 இல் நிறுவனம் அட்வான்ஸாக என்ன செய்யவிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஐபோன் 15 சீரிஸ் மாடலில் வரவுள்ள அம்சம்
சமீபத்தில், ஆய்வாளர் மிங்-சி குவோ மூலம் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பின் படி, 2023 ஆம் ஆண்டில் வெளிவர தயாராகி வரும் ஐபோன் 15 சீரிஸ் மாடலில் உள்ள ஒரு முக்கியமான மாடலில் பெரிஸ்கோப் லென்ஸ் இடம் பெறும் என்று அவர் கூறியுள்ளார். பெரிஸ்கோப் லெஸ் உடன் வெளிவரும் ஒரே மாடலாக ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 15 Pro Max மாடல் இருக்கும் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் இவ்வளவு அதிக ஜூம்-ஆ!
இந்த ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 5x-6x ஆப்டிகல் ஜூம் இருக்கும் என்றும் கூறியுள்ளார். தற்போது, ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் டெலிஃபோட்டோ லென்ஸ் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 15x டிஜிட்டல் ஜூம் ஆகியவை இப்போது பயன்பாட்டில் கிடைக்கிறது. 2023 ஆம் ஆண்டில் வரவிருக்கும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் 5x ஆப்டிகல் ஜூம் வழங்கும் பெரிஸ்கோப் கேமராவுடன் வரும் என்று மற்றொரு அறிக்கை தகவல் கூட சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரிஸ்கோப் லென்ஸைப் பெறும் மாடல் இது மட்டும் தானா?
ஆப்பிள் ஐபோன் 14 மாடலை பொறுத்த வரையில், பின்புற கேமராக்கள் இதில் மேம்படுத்தப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 இல் வழங்கப்பட கேமரா அம்சத்தை விட பலமடங்கு அதிகமானது என்று கூறப்படுகிறது. குவோ பகிர்ந்த தகவலின்படி, வதந்தியான iPhone 15 Pro Max மட்டுமே அடுத்த ஆண்டு பெரிஸ்கோப் லென்ஸைப் பெறும் என்று கூறுகிறது. இருப்பினும், இன்னும் அட்வான்ஸாக முன்னோக்கிச் சென்று, ஐபோன் 16 பற்றிய சில விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max பற்றி வெளியான தகவல்
அடுத்து வரவிருக்கும் 2024 ஆம் ஆண்டில், iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max போன்ற டிவைஸ்களில் நிச்சயம் பெரிஸ்கோப் லென்ஸ் அம்சம் சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தையும் அவர் இப்போது வெளிப்படுத்தியுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தால் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் iPhone 15 மற்றும் iPhone 16 மாடல்களில் இடம்பெறும் பெரிஸ்கோப் லென்ஸின் முக்கிய விபரக்குறிப்புகள் ஒரே மாதிரியானதாக இருக்கக் கூடும்.

இரண்டும் ஒரே மாதிரி இருக்கிறதா?
இது 1/3 இன்ச் கொண்ட 12 மெகாபிக்சல் சென்சார் உடன் இயங்கும் f/2.8 அபெர்ச்சர் லென்ஸ், சென்சார் ஷிப்ட் ஆதரவு மற்றும் 5 - 6x ஆப்டிகல் ஜூம் போன்ற அம்சங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டில் iPhone 15 Pro மாடலில் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட பெரிஸ்கோப் லென்ஸ் இடம்பெறும் என்று கூறப்பட்ட முந்தைய அறிக்கையின் அடிப்படையில், இந்த வளர்ச்சி ஓரளவிற்கு ஒத்துப்போகிறது.

2023 இல் இருந்து ஆப்பிள் ரொம்ப அட்வான்ஸாகப் போகிறதா?
மற்றொரு அறிக்கை iPhone 15 தொடரின் அனைத்து மாடல்களும் 2023 இல் பெரிஸ்கோப் லென்ஸைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறது. ஆனால், இது எவ்வளவு நம்பகமான செய்தி என்பதை நாம் இப்போதே உறுதிப்படுத்த முடியாது. நம்முடைய கணிப்பின்படி பெரும்பாலும், ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் இந்த பெரிஸ்கோப் லென்ஸ் அம்சத்தை நாம் எதிர்பார்க்கலாம். சமீபத்திய தகவலின் படி 2023 இல் இவை உற்பத்திக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிஸ்கோப் லென்ஸ் மூலம் சாமர்த்தியமான உத்தியைப் பின்பற்றுகிறதா ஆப்பிள்?
இதை வைத்துப் பார்க்கையில், ஆப்பிள் அதன் ப்ரோ மற்றும் ப்ரோ அல்லாத மாடல்களில் வித்தியாசத்தை அதிகரிக்க ஒரு சாமர்த்தியமான உத்தியைப் பின்பற்றுவது போல் தெரிகிறது. பெரிஸ்கோப் லென்ஸைப் பற்றிய தகவலுடன், ஐபோன் பெரிஸ்கோப் லென்ஸ் அம்சத்தை ஏற்றுக்கொண்டதன் பயனாளிகளாக LG Innotek, Cowell, Jahwa, Largan மற்றும் Lante Optics போன்ற நிறுவனங்கள் இருக்கும் என்று குவோ சில நிறுவனங்களின் பெயரையும் பட்டியலிட்டுள்ளார்.

ஆப்பிள் ஐபோன் 14 விலை என்ன? என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?
ஆப்பிள் ஐபோன் 14 டிவைஸின் அறிமுகம் இந்த ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 14 வரிசையில், iPhone 14, iPhone 14 Pro, iPhone 14 Pro Max, and iPhone Max ஆகிய 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். இதன் அடிப்படை மாடல்களில் ஆப்பிள் ரசிகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பது இங்கே, இந்த சாதனம் 6.1 இன்ச் கொண்ட 1170 x 2532 பிக்சல் உடைய கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 4ஜிபி ரேம் முதல் மற்றும் 64ஜிபி, 256ஜிபி வரை கொண்ட ஸ்டோரேஜ் உடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய மதிப்பின் படி ரூ. 79,900 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications