iPhone 15 Pro போனில் வரப்போகும் 10 அல்டிமேட் அம்சம் இது தான்! எல்லாமே ஜாஸ்தி!
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய வரவான ஐபோன் 15 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் புதிய iPhone 15 சாதனத்தின் விபரங்கள் இப்போதே இணையத்தில் லீக் ஆக துவங்கியுள்ளது.
இப்படி சமீபத்தில் லீக் ஆன ஒரு புதிய தகவலில், ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மாடல் ஸ்மார்ட்போனில் என்னென்ன டாப் 10 அம்சங்கள் அறிமுகம் செய்யப்படும் என்ற புது தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், செப்டம்பர், 2023 இல் அறிமுகமாகவிருக்கும் புதிய ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்ன-என்ன அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம் என்ற விபரம் இதோ.

1. iPhone 15 Pro சாதனம் 3 நானோமீட்டர் சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் ஐபோன் 15 ப்ரோ சாதனத்தின் பெர்ஃபார்மன்ஸ் திறனை 10% முதல் 15% வரை உயர்த்தும் என்று கூறப்படுகிறது. அதாவது, தற்போது விற்பனையில் உள்ள ஐபோன் 14 ப்ரோ சாதனத்தை விட 15% வரை அதிக திறன் கொண்டதாக iPhone 15 Pro இருக்கும் என்பது பொருளாகும்.
2. iPhone 15 Pro சாதனத்தில் WiFi 6E அம்சம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. WiFi 6E அம்சம் என்பது புதிய அதிவேக வைஃபை தொழில்நுட்ப அம்சமாகும். இது ஐபோனில் கிடைக்கும் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பதோடு, நிலையான வைஃபை நெட்வொர்க் தடையில்லாமல் கிடைப்பதையும் உறுதி செய்கிறது.
3. iPhone 15 Pro ஸ்மார்ட்போன் முதல் முறையாக USB டைப் C சார்ஜிங் போர்டை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. USB C போர்டின் வேகம் USB 2.0 வரை மட்டுமே இருக்கும் நிலையில், ஐபோன் 15 ப்ரோ சாதனத்தில் இதைவிட அதிவேகமான USB டைப் C போர்ட் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
4. ஐபோன் 15 ப்ரோ போனில் 48MP பிரைமரி கேமரா மற்றும் 12MP அல்ட்ரா வைடு கேமரா போன்ற கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இத்துடன், சூப்பர் போட்டோஸ் மற்றும் வீடியோ அம்சத்தை ஆதரிக்கும் மேம்படுத்தப்பட்ட ஆப்டிகல் ஜூம் மற்றும் கிரிஸ்டல் கிளியர் வீடியோ ரெக்கார்டிங் அம்சத்தை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.
5. வெளியான வதந்திகள் படி, iPhone 15 Pro சாதனம் இன்பில்ட் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் அம்சத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஐபோன் 15 ப்ரோ சாதனம் அண்டர் டிஸ்பிளே டச் ID சென்சார்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

6. iPhone 15 Pro சாதனம் 120 Hz ரெபிரஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்பிளே ஐபோன் 15 ப்ரோ பயனர்களுக்கு மிகவும் ஸ்மூத் ஆன மற்றும் சிறந்த அனிமேஷன் அம்சத்தை வழங்கும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது.
7. iPhone 14 Pro மாடலை விட ஐபோன் 15 ப்ரோ சாதனத்தில் வழங்கப்படவுள்ள பேட்டரி ஆயுள் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ஐபோன் 15 ப்ரோ போனில் பெரிய சைஸ் பேட்டரி வழங்கப்படலாம். அல்லது பேட்டரியின் திறன் மேம்படுத்தப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8. iPhone 15 Pro சாதனம் A15 பயோனிக் சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இது ஐபோன் 15 ப்ரோவின் செயல்திறன் மற்றும் வேகத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
9. ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் பற்றி பார்க்கையில், இது 128ஜிபி முதல் 1TB ஸ்டோரேஜ் வரையிலான மாடல்களை கொண்டிருக்கும் என்று வதந்திகள் பரிந்துரைக்கிறது.
10. இதுவரை இல்லாத அளவிற்கு மேம்படுத்தப்பட்ட பேஸ் ID அம்சத்தை ஐபோன் 15 ப்ரோ சாதனம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் பயனர்கள் மாஸ்க் அணிந்திருந்தால் கூட, பேஸ் அன்லாக் அம்சம் சிறப்பாக செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








