Home
News

ஆஃபர்னா இதான் ஆஃபர்? iPhone 15 Plus மீது மாபெரும் தள்ளுபடி.. ரூ.13600 மொத்தமா விலை குறைப்பு.. எங்கே வாங்கலாம்?

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடலான ஐபோன் 16 சீரிஸ் சாதனங்களின் வருகைக்கு இன்னும் 6 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தற்போது விற்பனையில் வாங்க கிடைக்கும் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) ஸ்மார்ட்போனின் மீது ஒரு மாபெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சலுகையுடன், ஐபோன் 15 பிளஸ் சாதனத்தின் மீது ரூ. 13,600 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம், முன்பை விட மிகவும் மலிவு விலையில் புதிய ஐபோன் 15 பிளஸ் வாங்கும் வாய்ப்பு இந்தியர்களுக்கு கிடைத்துள்ளது.

இந்த சலுகையை எங்கிருந்து பெறுவது? மற்றும் இன்றைய தருணத்தில் ஐபோன் 15 பிளஸ் வாங்குவது பெஸ்டான தேர்வா? இல்லையா? என்பதை விரிவாக பார்க்கலாம். பெரிய டிஸ்பிளேவுடன் குறைந்த விலையில் பபுதிய iPhone வாங்க திட்டமிட்டவர்களுக்கு iPhone 15 Plus ஒரு கவர்ச்சிகரமான தேர்வாகும். அடிப்படையில், இது நிலையான iPhone 15 போன்றது தான். ஆனால், இதன் டிஸ்பிளே மற்றும் பேட்டரி மட்டும் பெரியது.

ஆஃபர்னா இதான் ஆஃபர்? iPhone 15 Plus மீது மாபெரும் தள்ளுபடி..

iPhone 15 Plus மீது அபார சலுகை மற்றும் தள்ளுபடி:
டிஸ்பிளே அளவு மற்றும் பேட்டரி ஆயுளில் வேறுபாடுடன் இந்த போன் தற்போது ஃப்ளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ. 75,000 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இது ரூ. 13,600 தள்ளுபடிக்குப் பிறகு வரக்கூடிய விலை என்பது கவனிக்கத்தக்கது. முதல் முறையாக ஐபோன் 15 பிளஸ் சாதனத்தின் விலை இவ்வளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஃப்ளிப்கார்ட்டில், iPhone 15 Plus இன் அடிப்படை 128GB மாடல் ரூ. 75,000 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 15 பிளஸ் சாதனத்தின் அசல் விலை பற்றி பேசுகையில், பிளிப்கார்ட் தளத்தில் இந்த சாதனம் ரூ. 89,600 என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் மீது, பெடரல் வங்கி கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகள் ரூ. 1,500 தள்ளுபடியும், UPI பரிவர்த்தனைகள் ரூ. 1,000 கூடுதல் தள்ளுபடியையும் வாடிக்கையாளர்கள் இப்போது பெறுகிறார்கள். ஐபோன் 15 பிளஸ் 256GB மாடல் ரூ. 85,999 விலைக்கு கிடைக்கிறது.

இது அதன் அசல் விலையான ரூ. 99,600 -லிருந்து குறைக்கப்பட்டுள்ளது. டாப்-எண்ட் மாடலான ஐபோன் 15 பிளஸ் 1TB வேரியண்ட் மாடல் ரூ. 1,05,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இதன் அதன் அதிகாரப்பூர்வ விலையான ரூ. 1,19,600 லிருந்து தற்போது குறைக்கப்பட்டுள்ளது. சாதாரணமான வென்னிலா ஐபோன் 15 உடன் ஒப்பிடுகையில், ஐபோன் 15 பிளஸ் சிறந்த தேர்வாக தெரிகிறது.

ஐபோன் 15 பிளஸ் போனை இப்போது வாங்குவது நல்ல முடிவா?
iPhone 15 Plus சாதனம் USB Type-C சார்ஜிங் உடன் வருகிறது. இது டைனமிக் ஐலேண்ட் டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டுள்ளது. இதன் தனித்துவமான பண்பு அதன் பேட்டரி ஆயுள் ஆகும். இதுவரை உள்ள அனைத்து ஐபோன்களிலும் சிறந்ததாக திகழ்கிறது. பிரகாசமான டிஸ்பிளே மற்றும் மென்மையான செயல்திறன் ஆகியவற்றுடன் இணைந்து, இது ஒரு முழுமையான தொகுப்பை வழங்குகிறது.

செப்டம்பர் 9 ஆம் தேதி iPhone 16 தொடரின் வெளியீடு விரைவில் நெருங்கி வருவதால், iPhone 15 Plus ஐ வாங்குவதற்கு முன் காத்திருப்பது புத்திசாலித்தனமாக இருக்கலாம். காரணம் என்னவென்றால், ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாடலை அறிமுகம் செய்யும் பொழுது அதன் முந்தைய வெர்ஷன் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்து அறிவிக்கும். இதனுடன் பண்டிகை கால சிறப்பு விற்பனைகளும் நெருங்குவதால், பொறுத்திருந்து ஐபோன் 15 பிளஸ் வாங்குவது சிறப்பானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 15 Plus Gets Rs 13600 Discount In Flipkart Check New Price Is It Good To Buy This Phone Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X