Home
News

டிஸ்கவுண்ட் னா.. இப்படி இருக்கணும்.. லேட்டஸ்ட் iPhone வாங்க மெகா சான்ஸ்.. Flipkart, Amazon ரெண்டிலுமே!

ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன்களில் ஒன்றான ஐபோன் 15 (iPhone 15) மாடலை வாங்க இதைவிட சிறப்பான வாய்ப்பு.. அடுத்த ஆண்டு ஐபோன் 16 சீரிஸ் அறிமுகமான பின்னரே கிடைக்கும் என்று கூறலாம். ஏனென்றால் கிட்டத்தட்ட எல்லா வலைத்தளங்களிலும் ஐபோன் 15 மீது அபாரமான டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் ( Amazon), குரோமா (Croma), விஜய் சேல்ஸ் (Vijay Sales) மற்றும் பிற இ-காமர்ஸ் தளங்களானது, ஆப்பிள் ஐபோன் 15 மீது போட்டிபோட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன. எந்தெந்த தளங்களில் என்னென்ன சலுகைகள், தள்ளுபடிகள் கிடைக்கிறது? இந்த டிஸ்கவுண்ட் இன்னும் எத்தனை நாட்களுக்கு கிடைக்கும்? இதோ விவரங்கள்:

செம்ம டிஸ்கவுண்ட்.. லேட்டஸ்ட் iPhone வாங்க மெகா சான்ஸ்!

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடந்து வரும் விற்பனையில் ஐபோன் 15 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.65,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் ஆப்பிள் ஐபோன் 15 மாடலின் மாடலின் அசல் வெளியீட்டு விலை ரூ.79,900 ஆகும்.

மற்றொரு இ-காமர்ஸ் தளமான அமேசான் இந்தியாவானது ஆப்பிள் ஐபோன் 15 மாடலின் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது குறிப்பிடத்தக்க தள்ளுபடியை வழங்குகிறது. இந்த வேரியண்ட் அதன் அசல் விலையான ரூ.89,900 க்கு பதிலாக, ரூ.8,910 என்கிற பிளாட் தள்ளுபடியை பெற்று ரூ.80,990 க்கு வாங்க கிடைக்கிறது.

குரோமா வழங்கும் தள்ளுபடியை பொறுத்தவரை, அதன் 'எவ்ரிதிங் ஆப்பிள் கேம்பேய்ன்' விற்பனையின் கீழ் ஐபோன் 15 மாடல் உட்பட பல ஆப்பிள் தயாரிப்புகளின் மீது அற்புதமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரோமா விற்பனையின் போது ஆப்பிள் ஐபோன் 15 மாடலை ரூ.65,000 பட்ஜெட்டில் வாங்கலாம். இந்த விற்பனை பிப்ரவரி 19-ம் தேதியுடன் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடததக்கது

விஜய் சேல்ஸ் சலுகைகளை பொறுத்தவரை ஐபோன் 15 மாடலின் 256 ஜிபி ஸ்டோரேஜை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அதை ரூ.71,155 என்கிற குறைந்த விலையில் சொந்தமாக்கி கொள்ள முடியும். மேலும் எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.6,000 கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

ஐபோன் 15 முக்கிய அம்சங்கள்: இது 2-மைக்ரான் குவாட் பிக்சல் சென்சார் மற்றும் 100 சதவிகித ஃபோகஸ் பிக்சல்களுடன் வரும் 48எம்பி மெயின் கேமராவை கொண்டுள்ளது. மேலும் ஐபோன் 14 ப்ரோவை இயக்கும் பயோனிக் ஏ16 சிப் உடன் வருகிறது. இந்த மாடல் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது: 128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி.

அறிமுகத்தின் போது ஐபோன் 15 மாடலின் இந்திய விலை நிர்ணயம் என்ன? 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 ரூ 79,900 க்கும், 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 ரூ.89,900 க்கும் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 ரூ.1,09,900 க்கும் அறிமுகமானது.

மறுகையில் உள்ள ஐபோன் 15 பிளஸ் மாடலின் 128 ஜிபி ஆப்ஷன் ரூ 89,900 க்கும், 256 ஜிபி ஆப்ஷன் ரூ.99,900 க்கும் மற்றும் 512 ஜிபி ஆப்ஷன் ரூ.1,19,900 க்கும் அறிமுகமானது. ஐபோன் 15 ப்ரோவை பொறுத்தவரை, 128ஜிபி ஆப்ஷன் ரூ.1,34,900 க்கும், 256 ஜிபி ஆப்ஷன் ரூ.1,44,900 க்கும், 512 ஜிபி ஆப்ஷன் ரூ.1,64,900 க்கும் மற்றும் 1டிபி ஆப்ஷன் ரூ.1,84,900 க்கும் அறிமுகமானது,'

கடைசியாக உள்ள ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் இந்திய விலை நிர்ணயம்: 256 ஜிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,59,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,79,900 க்கும் மற்றும் 1டிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,99,900 க்கும் வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
iPhone 15 Now Availabe Under Big Discount Price Check Flipkart Amazon Croma Vijay Sales Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X