போட்டிபோட்டு வாங்குறாங்க.. iPhone 15 மீது ரூ.7500 தள்ளுபடி.. அதிரடியாய் iPhone 15 Plus மீதும் டிஸ்கவுண்ட்..
ஆப்பிள் (Apple) நிறுவனம் இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதத்தில் ஐபோன் 15 (iPhone 15) சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. 3 மாதத்திற்கு பிறகு, இப்போது ஐபோன் 15 (iPhone 15) சாதனத்தின் மீது அதிரடியாக ரூ.7,500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 15 (iPhone 15) மாடலை செப்டம்பரில் ரூ.79,900 என்ற விலையுடன் அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்தது. இப்போது, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் சாதனங்கள் மீது திடீரென விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்தியாவில் இப்போது ஐபோன் 15 ஸ்மார்ட்போனின் 128ஜிபி மாடல் வேரியண்ட் (iPhone 15 128GB Variant) ரூ.77,503 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 15 மீது அதிரடி விலை தள்ளுபடி (Exciting price discount on iPhone 15):
இந்த சலுகை இமேஜின் தளம் வழியாக இப்போது கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் சாதனங்களை ஸ்டோர் மூலம் மற்றும் ஆன்லைன் மூலம் இமேஜின் விற்பனை செய்கிறது. தற்போது ரூ.2,000 நிறுவனம் வழங்கும் தள்ளுபடியுடன், கூடுதலாக ரூ.5,000 மதிப்பிலான தள்ளுபடியும் கிடைக்கிறது. இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 15 சதந்தின் மீது முழுசாக ரூ.7,500 விலை தள்ளுபடி செய்யப்படுகிறது.
இந்த 5000 ரூபாய் சலுகை HDFC வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு 5000 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. இதனால் இறுதியில் ரூ.72,503 என்ற குறைந்த விலையில் உங்களால் இப்போது புதிய ஐபோன் 15 சாதனத்தை வாங்க இயலும். இதேபோல், ஐபோன் 15 பிளஸ் சாதனத்தின் மீதும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 15 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.89,900 என்ற விலையில் விற்பனைக்கு வந்தது. இப்போது இந்த சாதனம் ரூ.87,203 என்ற சலுகை விலையில் இமேஜின் தளம் வழியாக வாங்க கிடைக்கிறது. முன்பு சொன்னது போல், HDFC கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.5000 உடனடி தள்ளுபடி கிடைகிறது. இதன் மூலம் ஐபோன் 15 பிளஸ் சாதனத்தின் மீது முழுவதுமாக ரூ.7,797 தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த சலுகை இத்துடன் நின்றுவிடவில்லை.

ஐபோன் 15 பிளஸ் சலுகை விலை (iPhone 15 Plus Discount Price):
ஐபோன் 15 சீரிஸ் வரிசையில் உள்ள ப்ரோ மாடல்கள் மீதும் இந்த சலுகை கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடல் மீது HDFC நன்மையுடன் மொத்தமாக 6000 ரூபாய் வரை மொத்த சலுகை கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஐபோன் மாடலை நல்ல ரேட்டிற்கு வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள மக்கள் இந்த சலுகையை யோசிக்காமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதுவொரு குறுகிய கால சலுகை போல் தெரிவதனால் உடனே முந்திக்கொள்ளவும். ஐபோன் 15 சாதனம் பயோனிக் A16 சிப்செட் உடன் வருகிறது. இதே சிப்செட் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் 15 சாதனம் டைனமிக் ஐலேண்ட் அம்சத்துடன் வருகிறது. டைனமிக் ஐலேண்ட் அம்சத்தை பெரும் ப்ரோ அல்லாத ஒரே மாடல் இதுவாகும்.
ஐபோன் 14 ப்ரோ சாதனத்தில் வழங்கப்பட கேமராவை ஐபோன் 15 பெறுகிறது. இது iOS 17 இல் இயங்குகிறது. ஐபோன் 15 இன் பேட்டரி மிகவும் திறம்பட செயல்படுகிறது. இது டைப்-சி போர்ட் உடன் வருகிறது. இந்த சலுகையை மிஸ் செய்யாதீர்கள்.


Click it and Unblock the Notifications








