கொத்தா 9000 தள்ளுபடி.. iPhone 15 மற்றும் iPhone 14 வாங்க சரியான நேரம்.. டோன்ட் மிஸ் இட் டீல்..
ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 15 (iPhone 15) ஸ்மார்ட்போன் சாதனங்களை இப்போது மிகவும் குறைந்த விலையில் வாங்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ரூ.9000 வரை ஒவ்வொரு யூனிட்டின் மீதும் தள்ளுபடியை பெறக்கூடிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய சாதனமான ஐபோன் 15 (iPhone 15) சீரிஸ் இன்னும் புதியதாக இருப்பதால் இந்தச் சாதனங்களில் தள்ளுபடியைப் பெறுவது மிகவும் அரிதான ஒன்று. பிளாக் ஃப்ரைடே விற்பனை எல்லா பக்கமும் ஆரம்பமாகவிருப்பதினால் ஐபோன்கள் மீது அதிக சலுகை மற்றும் தள்ளுபடிகள் எதிர்க்கபார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, ரூ.8000 முதல் ரூ.9000 ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 மீது தள்ளுபடி பெற முடியும். ஐபோன் 15 (iPhone 15) இல் ரூ. 8,000 வரை தள்ளுபடியைப் பெறக்கூடிய ஒரு ஒப்பந்தம் உள்ளது. ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 (Apple Watch Series 9) ஆகியவற்றின் மீதும் சலுகைகள் கிடைக்கிறது.
ஐபோன் 15 பிளாக் ஃப்ரைடே தள்ளுபடி (iPhone 15 Black Friday Discount):
அங்கீகரிக்கப்பட்ட ஆப்பிள் மறுவிற்பனையாளரான iNvent ஸ்டோரில் iPhone 15 சாதனம் இப்போது ரூ. 3,000 மதிப்பிலான தள்ளுபடி உடன் கிடைக்கிறது. இத்துடன் ரூ.5,000 உடனடி கேஷ்பேக் நன்மையும் கிடைக்கிறது. இது ஐபோன் 15 மீது மொத்தமாக ரூ.8,000 தள்ளுபடியை பெறுகிறது. இது ஐபோன் 15 இன் விலையை ரூ.79,900 இருந்து ரூ.71,900 ஆகக் குறைக்கிறது.
ஐபோன் 14 பிளாக் ஃப்ரைடே தள்ளுபடி (iPhone 14 Black Friday Discount):
பிளாக் ஃபிரைடே சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக ஐபோன் 14 (iPhone 14) ரூ.9,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதுவும், iNvent ஸ்டோர் வழியாக ரூ. 5,000 உடனடி தள்ளுபடி மற்றும் ரூ. 4,000 உடனடி கேஷ்பேக் நன்மையை வழங்குகிறது. இந்த தள்ளுபடி iPhone 14 இன் 128GB மாடலுக்கு பொருந்தும். இது ரூ.69,900 இல் இருந்து இப்போது ரூ.60,900 விலைக்கு வாங்க கிடைக்கிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 பிளாக் ஃபிரைடே தள்ளுபடி (Apple Watch Series 9 Black Friday Discout):
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மீது இந்த பிளாக் ஃபிரைடே விற்பனையின் போது ரூ. 2,500 உடனடி கேஷ்பேக் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.41,900 ஆகும். ஆனால்ம் இப்போது ரூ.39,400 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 ஜிபிஎஸ் (GPS) அம்சத்துடன் வருகிறது. இதில் ஜிபிஎஸ் + செல்லுலார் மாறுபாடும் உள்ளது.
ஐபோன் இன் புதிய மாடலை வாங்க விருப்பம் இருப்பவர்கள் கட்டாயம் இந்த சலுகைகை நழுவவிடக்கூடாது. காரணம், இந்த ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டு சில மாதங்களே ஆகியுள்ளதினால் அதிகளவு சலுகையை நாம் பெற முடியாது. இந்த சலுகை மற்றும் தள்ளுபடியே ஆகச்சிறந்த சலுகை ஆகும். இந்த கேஷ்பேக்கை உங்களால் பெற முடிந்தால், இந்த iPhone 15 ஒப்பந்தம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications