Home
News

iPhone 15 சீரிஸ் போன்ல் இப்படி ஒரு அம்சம் வரப்போகுதா? குஷியில் வாடிக்கையாளர்கள்! ஏன் தெரியுமா?

ஆப்பிளின் வரவிருக்கும் ஐபோன் 15 (iPhone 15) மற்றும் 15 ப்ரோ (iPhone 15 Pro) சாதனங்களில் லைட்னிங் போர்ட்டுக்கு பதிலாக யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டுடன் வரலாம் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு போன்களும் இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்படலாம்.

9to5Mac இன் புதிய அறிக்கையின்படி, ஆப்பிளின் iPhone 15 மற்றும் iPhone 15 Pro ஆகியவை USB Type-C போர்ட்டுடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் இன்னும் சார்ஜிங் சிஸ்டத்தில் சில கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது என்றும் அறிக்கை கூறுகிறது. யூ.எஸ்.பி டைப்-சி கேபிளுக்கு மாறுவது, வரவிருக்கும் ஐபோன்களுக்கான சார்ஜிங் வேகத்தை அதிகரிக்கும்.

iPhone 15 சீரிஸ் போன்ல் இப்படி ஒரு அம்சம் வரப்போகுதா? குஷியில் மக்கள்!

தற்போது, ​​iPhone 15 மற்றும் iPhone 15 Pro முறையே 20W மற்றும் 27W வரை சார்ஜிங் வேகத்தை ஆதரிக்கிறது. iPhone 15 மற்றும் iPhone 15 Pro ஆனது யூனிவேர்சல் USB Type-C கேபிள் மூலமாகவும் சார்ஜ் செய்வதை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நிறுவனம் அதிவேக தரவு பரிமாற்றம் அல்லது பாஸ்ட் சார்ஜ்ஜிங் செய்தல் போன்ற சில அம்சங்களை ஆப்பிள் சான்றளிக்கப்பட்ட பாகங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த அம்சங்களில் ஆப்பிள் நிறுவனம் சில மாற்றங்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் அதன் டைப்-சி போர்ட்டுடன் புதிய பாகங்கள் கொண்டு வரலாம் என்று முந்தைய அறிக்கை கூறியது. இந்த பட்டியலில், அடுத்தபடியாக ஆப்பிள் ஏர்போட்ஸ் சார்ஜிங் கேஸ்கள், மேக்சேஃப் பேட்டரி பேக் மற்றும் மேஜிக் கீபோர்டு, டிராக்பேட், மவுஸ் ட்ரையோ போன்ற பிற பாகங்களும் எதிர்காலத்தில் USB-C போர்ட் அம்சத்திற்கு மாறும் என்று ஆப்பிள் ஆய்வாளர் கூறியிருந்தார்.

MacRumors இன் அறிக்கையின் படி, iPhone 15 மற்றும் iPhone 15 Plus ஆனது 48 MP கேமரா சென்சாருடன் வெளி வரும் என்று கூறப்படுகிறது. தற்போதுள்ள ஐபோன் வரிசையுடன் ஒப்பிடும்போது, ​​மேம்படுத்தப்பட்ட படத் தரத்திற்காக அதிக ஒளியைப் பிடிக்கக்கூடிய மூன்று-அடுக்கு சென்சார் இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் A15 பயோனிக் சிப்செட் மூலம் இயங்கும் என்று கூறப்படுகிறது.

iPhone 15 சீரிஸ் போன்ல் இப்படி ஒரு அம்சம் வரப்போகுதா? குஷியில் மக்கள்!

இது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்படலாம். சுவாரஸ்யமாக, TrendForce இன் படி, 2023 ஐபோன் சீரிஸ் போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, டாடா குழுமத்தால் அசெம்பிள் செய்யப்படலாம் என்று அறிக்கை கூறுகிறது. சமீபத்தில், டாடா நிறுவனம் இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் உரிமத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கை உண்மையாக மாறினால், ஃபாக்ஸ்கான், லக்ஸ்ஷேர் மற்றும் பெகாட்ரானுக்குப் பிறகு இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்யும் 4வது நிறுவனமாக டாடா குழுமம் மாறும் என்று கூறப்படுகிறது. இதேபோல், வரவிருக்கும் ஐபோன் 15 சீரிஸ் வரிசையில், நிறுவனம் இன்னும் பல எதிர்பார்த்திடாத புதிய மாற்றங்களை அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் இந்த சீரிஸ் உலகளவில் அறிமுகம் செய்யப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 15 and 15 pro could come with a USB Type-C port instead of the Lightning port
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X