iPhone 15 மீது நிறைஞ்சு தழும்புது தள்ளுபடி.. ரூ.12,000-திற்கு மேல் சலுகை.. உடனே வாங்க சூப்பர் சான்ஸ்..
அடடே இப்படி ஒரு நாளுக்காக தானே காத்திருந்தோம் என்று வியப்படையும் அளவிற்கு, ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15) மாடல் மீது நம்ப முடியாத அளவிற்கு முதல் முறையாக ரூ. 12,000-திற்கு மேல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. லேட்டஸ்ட் ஐபோன் மாடலான இந்த ஐபோன் 15 மாடல் சந்தைக்கு விற்பனைக்கு வந்து ஏறக்குறைய 1 வருடம் ஆக போகிறது. வருகின்ற செப்டெம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 16 (iPhone 16) மாடலை அறிமுகம் செய்யவிருக்கும் தருணத்தில், தற்போதைய லேட்டஸ்ட் மாடலான ஐபோன் 15 இன் விலை குறைந்துள்ளது.
நீண்ட காலமாக குறைந்த விலையில் ஐபோன் 15 வாங்க நல்ல நேரம் பார்த்து காத்துக்கிடந்தவர்களுக்கு இப்போது அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம். ஐபோன் 15 சாதனத்தை மிகமிக குறைந்த விலையில் வாங்க இப்போது தான் சிறந்த நேரம் என்று அமேசான் (Amazon) நிறுவனம் தெரிவித்துள்ளது. அமேசான் இந்த சமீபத்திய மாடலின் மீது குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

iPhone 15 மீது நிறைஞ்சு தழும்புது தள்ளுபடி.. ரூ.12,000 மேல் சலுகை:
அமேசான் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஐபோன் 15 மாடலின் மீது ரூ. 12,000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் கவர்ச்சிகரமான வங்கிச் சலுகைகள் மற்றும் வசதியான EMI விருப்பங்களையும் இப்போது இத்துடன் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் 15 சாதனத்தின் 128GB ஸ்டோரேஜ் மாடல் தற்போது அமேசான் தளத்தில் ரூ.79,600 விலைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக இதன் தள்ளுபடி விலை இப்போது ரூ. 71,290 ஆக மாறியுள்ளது. இது 11% சதவீத விலைக் குறைப்பைப் பிரதிபலிக்கிறது. அமேசான் அறிவித்துள்ள பிளாட் தள்ளுபடி மூலம் ஐபோன் 15 மாடல் மீது உங்களுக்கு ரூ.8,310 மிச்சமாகிறது. பிளாட் தள்ளுபடிக்கு கூடுதலாக, அமேசான் SBI கிரெடிட் கார்டு பயனர்களுக்கு வங்கி சலுகையையும் அமேசான் இப்போது வழங்குகிறது.
இதன் மூலம் ரூ. 4,000 மதிப்பிலான உடனடி தள்ளுபடியை நீங்கள் இப்போது அனுபவிக்க முடியும். இரண்டு தள்ளுபடிகளையும் இணைப்பதன் மூலம், iPhone 15 மீது மொத்தம் ரூ.12,310 தள்ளுபடியைப் பெறலாம். இது ஐபோன் 15 மாடலின் விலையை ரூ.67,290 ஆகக் குறைக்கிறது. உண்மையில் இதுவொரு அற்புதமான டீல் ஆக அமைகிறது. நீண்ட காலமாக ஐபோன் 15 வாங்க ஆசைப்பட்டவர்களுக்கு இந்த சலுகை ஒரு நல்ல வாய்ப்பு என்பதை மறக்கவேண்டாம்.
ஐபோன் 15 சிறப்பம்சம் (iPhone 15 Specifications):
ஐபோன் 15 ஆனது கிளாஸ் பேக் பின்புற பேனல் மற்றும் அலுமினிய சேஸிஸ் உடன் கூடிய நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் கூடுதல் பாதுகாப்பிற்காக செராமிக் ஷீல்ட் கிளாஸுடன் கூடிய பெரிய 6.1" இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது கிரிஸ்டல் கிளியர் விசுவலை (Visuals) வழங்குகிறது.
ஐபோன் 15 சக்தி வாய்ந்த செயல்திறனுக்காக A16 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 6ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவை வழங்குகிறது. புகைப்பட ஆர்வலர்களுக்கு, பின்புறத்தில் 48MP மற்றும் 12MP சென்சார்கள் கொண்ட ரியர் கேமராவை வழங்குகிறது. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 12MP முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.
ஐபோன் 15 சாதனம் 3349mAh அளவு கொண்ட கணிசமான பேட்டரி திறனைக் கொண்டுள்ளது. இது 15W உடன் பாஸ்ட் சார்ஜிங் செய்வதை ஆதரிக்கிறது. புதிதாக ஐபோன் வாங்க விரும்புவோர் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும், ஐபோன் 16 வெளிவர இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஐபோன் 15 மற்றும் 14 மாடல்களின் விலை இன்னும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications








