ஒருபக்கம் புது அம்சத்துடன் மீண்டும் அறிமுகமாகும் iPhone 14; மறுபக்கம் ரூ.12000 விலை குறைப்பு! நம்பி வாங்கலாமா?
ஒட்டுமொத்த டெக் உலகமும் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் அறிமுகத்தின் மீது கண் வைத்துக்கொண்டிருக்கும் வேளையில், ஐபோன் 15 சீரீஸ் உடன் சேர்த்து ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்கள் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அறிமுகமாகி, ஓராண்டு பழைய மாடலாகிவிட்ட ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆனது ஏன் மீண்டும் அறிமுகமாகிறது என்கிற கேள்விக்கு பதில் - யூஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type C Port) தான். இனிவரும் ஐபோன்களில் லைட்னிங் போர்ட்டிற்கு பதிலாக யூஎஸ்பி டைப்-சி போர்ட் தான் இடம்பெற வேண்டும் என்பது கட்டாய சட்டமாக்கப்பட்டுள்ளது!

இதன்மூலம் வரவிருக்கும் புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் யூஎஸ்பி டைப்-சி போர்ட் இடம்பெற உள்ளது. இதனுடன் சேர்த்து யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை கொண்ட ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களும் அறிமுகமாகும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.
பொதுவாக புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகமானதும் பழைய ஐபோன் மாடல்களின் விலைகள் குறையும்; அவைகளின் விற்பனையும் சூடுபிடிக்கும். அந்த நேரத்தில் புதிய மாடல்கள் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உடனும், பழைய மாடல்கள் யூஎஸ்பி டைப்-சி போர்ட் இல்லாமலும் வாங்க கிடைத்தால் பயனர்கள் குழப்பமடையலாம்.
அந்த குழப்பத்தை சரி செய்யவே ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்கள் ஆனது யூஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் மீண்டும் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. இதற்கிடையில் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் ஐபோன் 14 மீது மாபெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
பிளிப்கார்ட் வலைத்தளமானது ஐபோன் 14 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் மீது நேரடியாக ரூ.11,901 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது ரூ.79,900 க்கு பதிலாக ரூ.67,999 க்கு வாங்க கிடைக்கிறது. போதாக்குறைக்கு நீங்கள் எச்டிஎஃப்சி பேங்க் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தினால் ஐபோன் 14-ன் விலையை மேலும் ரூ.4,000 குறைத்து அதை ரூ.63,999 க்கு வாங்கலாம்.
அதுமட்டுமல்ல, ஐபோன் 14 மீது எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் அணுக கிடைக்கிறது. இதன் கீழ் மேலும் ரூ.2,000 அல்லது ரூ.3,000-ஐ குறைக்கலாம். இந்த எக்ஸ்சேன்ஜ் வேல்யூ ஆனது நீங்கள் பரிமாற்றும் ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் அது வேலை செய்யும் நிலையை பொறுத்து வேறுபடும்.
மேற்கண்ட இதே சலுகைகள் ஐபோன் 14 மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கும் பொருந்தும். தற்போது இது ரூ.89,900 க்கு பதிலாக ரூ.77,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.97,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.1,09,900 ஆகும்.
யூஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் வரும் புதிய ஐபோன் 14 அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், யூஎஸ்பி டைப்-சி போர்ட் இல்லாத ஐபோன் 14-ஐ நம்பி வாங்கலாமா என்று கேட்டால்.. எங்களிடம் இரண்டு வகையான பதில்கள் உள்ளன. உங்களுக்கு சலுகையை விலையை விட சார்ஜிங் ஸ்பீட் தான் மிகவும் முக்கியம் என்றால்.. நீங்கள் ஐபோன் 14-ன் மறுஅறிமுகத்திற்கு காத்திருக்கலாம்.
ஏனென்றால் ஐபோன் மாடல்களில் இடம்பெறவுள்ள யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆனது ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்பீட்டை (Fast Charging Speed) செயல்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சான்றளிக்கப்பட்ட கேபிள்களை (Certified cables) பயன்படுத்தி சார்ஜ் செய்ய வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதுவொருபக்கம் இருக்க, இன்னும் சிறிதுகாலம் காத்திருந்தால், அதாவது தீபாவளி பண்டிகை கால சிறப்பு விற்பனைகள் தொடங்கும் காத்திருந்தால், ஐபோன் 14 மாடலின் விலை நிச்சயம் ரூ.60,000 க்கு கீழே வரும். ஆக நீங்கள் அக்டோபர் வரை காத்திருக்க முடிந்தால், இப்போது கிடைக்கும் ரூ.11,901 சலுகையை - கண்களை மூடிக்கொண்டு - புறக்கணித்து விடலாம்!


Click it and Unblock the Notifications








