உறைபனி நீரில் சிக்கிய மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய ஐபோன் 14: நடந்தது இதுதான்.!
உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் புதுமையான தொழில்நுட்பம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் இந்த ஐபோன்கள் வெளிவருகின்றன. எனவே தான் ஆப்பிள் ஐபோன்கள் உலகம் முழுவதும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் வெறும் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் இல்லாமல் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு உதவியாகப் பல நன்மைகளைச் செய்கின்றன.. குறிப்பாக சில நேரங்களில் மனித உயிர்களைக் காப்பாற்றி உள்ளன ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள். இதற்கு முன்பு ஐபோன், ஆப்பிள் வாட்ச் உதவியுடன் சில உயிர் பிழைத்த செய்திகளைப் பார்த்திருப்போம்.

அதேபோல் தற்போது அமெரிக்காவின் யூட்டா எனும் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் உறைபனி நீரில் சிக்கிய மூன்று மாணவர்களின் உயிரை ஐபோன் 14 காப்பாற்றி உள்ளது. அதாவது இந்த ஐபோன் 14 மாடலில் உள்ள ஒரு முக்கியமான அம்சம் தான் மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. இப்போது நடந்தது என்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 மாடலில் செயற்கைக்கோள் வழியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் அவசரக்கால SOS-ஐ அறிமுகம் செய்திருந்தது. குறிப்பாக இதன் மூலம் செல்போன் சிக்னல் கிடைக்காத இடங்களில் செயற்கைக்கோள் இணைப்பைப் பயன்படுத்தி செய்திகளை அனுப்பவோ அல்லது அழைக்கவோ எஸ்ஒஎஸ் (SOS) அம்சம் பயனர்களை அனுமதிக்கிறது. மேலும் இந்த அதிநவீன தொழில்நுட்ப அம்சம் அறிமுகம் செய்யப்பட்டத்தில் இருந்தே பலரைக் காப்பாற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள், அமெரிக்காவில் இருக்கும் யூட்டா பள்ளத்தாக்கு பகுதியில் சென்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த ஆய்வின் போது அவர்கள் எதிர்பாராத விதமாக அவர்கள் ஆழமான குளிர்ந்த நீரில் சிக்கியுள்ளனர். அதாவது வெப்பநிலை இயல்பைவிடக் குறைந்து உறைபனி நிலைக்கு வந்த காரணத்தால் அதில் இருவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் இருந்த இடத்தில் செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்த காரணத்தால் வெளி உலக உதவியை அவர்களால் பெறமுடியவில்லை. பின்பு நேரம் செல்ல செல்ல உறைபனி அதிகமாகி தண்ணீரை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு அவர்கள் சிக்கியுள்ளனர்.
அப்போது தான் அந்த மாணவர்களில் ஒருவர் ஐபோன் 14 மாடலை பயன்படுத்தி வந்துள்ளார். குறிப்பாக அந்த போனில் மொபைல் நெட்வொர்க் மற்றும் வைஃபை இல்லாத சமயத்தில் சாட்டிலைட் உதவியுடன் அவரச உதவியை வேண்டும் எஸ்ஒஸ் (SOS) தொடர்பை மேற்கொள்ள இயலும். எனவே இந்த அம்சத்தின் உதவியுடன் அந்த மாணவர் அமெரிக்காவின் 911 எண்ணுக்கு உதவி வேண்டி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். மேலும் தங்கள் எப்படிப்பட்ட ஆபத்தில் சிக்கி உள்ளோம் என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.

அதன்பின்பு அரிசோனாவில் இருந்து மீட்புக் குழுவினர் அந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் விரைந்து வந்து உடனடியாக மாணவர்களைக் காப்பாற்றினர். குறிப்பாக இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் மக்களின் பாதுகாப்பு அம்சத்திற்கு அதிக கவனம் செலுத்துகிறது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications








