Home
News

iPhone 13-ஐ கம்மி விலையில் வாங்க நெருங்கும் வாய்ப்பு! iPhone 14 ரிலீஸ்க்கு முன் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

ஆப்பிள் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'அந்த' நேரம், இப்போது மிக அருகில் நெருங்கி வந்துவிட்டது. ஆம், ஆப்பிள் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆப்பிள் ஐபோன் 14 சாதனத்தின் அறிமுகம் குறித்த தகவல்கள், இப்போது தேதியுடன் இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் வெளியான அறிக்கைகள் மற்றும் வதந்திகள் உண்மையாக இருந்தால், இந்த ஆண்டிற்கான புதிய Apple iPhone 14 தொடர் மாடல்கள் வரும் செப்டம்பர் 13, 2022 அன்று லைவ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் புது டிவைஸ் விரைவில் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் புது டிவைஸ் விரைவில் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் எப்போதும் தனது புதிய ஐபோன் மாடல் சீரிஸ்களை செப்டம்பர் மாதத்தில் மட்டுமே அறிமுகம் செய்கிறது. இருப்பினும், ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை கடந்த 2020 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட தாமதம் தான் காரணமாக, இந்த முறை ஆப்பிள் நிறுவனம் அதன் வெளியீட்டு நிகழ்வை பெரும்பாலும் செப்டம்பர் மாதத்திலேயே நடத்தவுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் ரிலீஸ் நெருங்குகிறதா?

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் ரிலீஸ் நெருங்குகிறதா?

இந்த செப்டம்பர் மாத ஆப்பிள் நிகழ்வின் போது, ஆப்பிள் நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்யும். வரவிருக்கும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில் பல புதிய அற்புதமான அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நாம் அந்த விஷயங்களைப் பற்றி இங்குப் பேசப் போவதில்லை. புதிய ஐபோன் 13 சீரிஸ் சாதனத்தை வாங்க இது சரியான நேரமா என்பதைப் பற்றித் தான் நாம் இங்குப் பேசப்போகிறோம்.

ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸை இப்போது வாங்கலாமா? எது சரியான நேரம்?

ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸை இப்போது வாங்கலாமா? எது சரியான நேரம்?

ஒருவேளை, உங்களுக்கு இப்போது புதிதாக ஒரு ஐபோன் மாடலை வாங்கத் திட்டமிருந்தால், கொஞ்சம் இதைப் படித்து முடித்துவிட்டு உங்கள் முடிவைத் தீர்மானியுங்கள். ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும், அது இப்போதும் விலை உயர்ந்த ஆப்பிள் போனாகவே இருக்கிறது. நீங்கள் ஐபோன் 13 இன் அடிப்படை மாடல் அல்லது ப்ரோ மாடல்களுக்குச் சென்றாலும், உங்களுடைய செலவு அதிகமாகவே இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் ஐபோன்கள் விலை உயர்ந்ததாகவே இருக்கிறது.

ஐபோன் 13 சீரிஸ் மீது பெரிய விலை குறைப்பை எதிர்பார்க்கலாமா?

ஐபோன் 13 சீரிஸ் மீது பெரிய விலை குறைப்பை எதிர்பார்க்கலாமா?

ஆனால், வழக்கம் போல ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் சாதனம் அறிமுகமாகும் நேரத்தில், அதற்கு முந்தைய மாடல்களின் விலையை நிறுவனம் குறைக்கிறது. இதை ஆப்பிள் ஒரு பழக்கமாகவே வைத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஆண்டிற்கான புதிய வரவான ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் வந்தவுடன், ஐபோன் 13 சீரிஸின் அதிகாரப்பூர்வ விலையில் பெரிய விலைக் குறைப்பை நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

ஆப்பிள் நிறுவனம் இதற்கு முன்னாள் கூட இதை செய்தது

ஆப்பிள் நிறுவனம் இதற்கு முன்னாள் கூட இதை செய்தது

ஆப்பிள் ஒரு புதிய ஐபோன் தொடரை அறிமுகப்படுத்திய போது இதற்கு முன் கூட இப்படி நடந்தது என்பது கவனிக்கத்தக்கது. இந்த விஷயத்தை ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சாதனத்துடன் நிச்சயமாக இந்த ஆண்டிலும் செய்யுமா என்பதில் எந்த உறுதியும் இல்லை என்றாலும், இது நிச்சயமாகச் சாத்தியமாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 தொடர், குறிப்பாக இந்தியாவில் இன்றும் மிகவும் விலை உயர்ந்த டிவைஸாகவே திகழ்கிறது.

ஐபோன் 14 அறிமுகம் மிக அருகில் உள்ளது

ஐபோன் 14 அறிமுகம் மிக அருகில் உள்ளது

ஒருவேளை, உங்களுக்கு இப்போது ஐபோன் 13 மாடலை வாங்க முடிந்தாலும், ஒரு மாதத்திற்கு முன்பே எதிர்பார்க்கப்படும் விலைக் குறைப்புக்குப் பிறகு அதைக் குறைந்த விலையில் வாங்குவது தானே அதிக அர்த்தமுள்ள சிறந்த முடிவாக இருக்கும். நாம் இப்போதே ஆகஸ்ட் மாதத்திற்குள் அடியெடுத்து வைக்கப் போகிறோம் என்பதனால், ஆப்பிள் iPhone 14 தொடரின் வெளியீட்டிற்கு இன்னும் அதிக தூரமில்லை. சமீபத்தில் வெளியான தகவலின் படி, ஐபோன் 14 டிவைஸின் அறிமுகம் மிக அருகில் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

கம்மி விலையில் ஐபோன் வாங்க 'இதை' கவனிக்க மறக்காதீர்கள்

கம்மி விலையில் ஐபோன் வாங்க 'இதை' கவனிக்க மறக்காதீர்கள்

இதுமட்டுமின்றி, நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் இங்கு இருக்கிறது, அது என்னவென்றால், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் பண்டிகை காலம் என்பதனால் நிச்சயமாகப் பல சலுகைகளை நீங்கள் பெற வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில், ஐபோன்களின் விலையில் ஒரு பெரிய விலைக் குறைப்பைப் பெறவும் அதிக வாய்ப்புள்ளது என்பதை மறக்காதீர்கள். பண்டிகை கால சலுகைகள் நிச்சயமாக உங்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆப்பிள் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 இல் மும்முரம்

ஆப்பிள் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 இல் மும்முரம்

எனவே, ஐபோன் 14 சீரிஸ் வெளியான பிறகு, ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸுக்கு விலைக் குறைப்பு அறிவித்த பிறகு காத்திருந்து ஐபோன் 13 மாடல்களை வாங்குவதே சிறப்பானதாகும். தெரியாதவர்களுக்கு, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யத் தயாராகி வரும் இந்த நேரத்தில், நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகத்திற்கு ரெடியாகி வருகிறது. ஆம், ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை உருவாக்கி நிறுவனம் சோதனை செய்து வருகிறது. அதேபோல், நிறுவனம் ஐபோன் 16 டிவைஸின் உருவாக்கத்தையும் துவங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
iPhone 14 Series Launch Is Nearby Wait To Buy iPhone 13 Series At Low Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X