iPhone 13 விலையில் iPhone 14 அறிமுகமா? நாசுக்காக வேலை செய்கிறதா Apple?
ஆப்பிள் மற்றும் ஐபோன் ரசிகர்களுக்கு இந்த புதிய தகவல் கண்டிப்பாக மகிழ்ச்சியளிக்கப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காரணம், இந்த ஆண்டிற்கான புதிய ஐபோன் 14 (iPhone 14) டிவைஸை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. அறிமுகத்திற்கு முன்னதாக, வரவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 14 மாடலின் விலை பற்றி தகவல் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன் விலை என்ன? ஏன் ஆப்பிள் ரசிகர்கள் இந்த தகவலால் ஹேப்பி என்பதை இப்போது பார்க்கலாம்.

புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல் விலை என்ன?
சமீபத்தில் வெளியான ஒரு அறிவிப்பின் படி, வரவிருக்கும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல் போன்கள் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஐபோன் 14 சீரிஸ் வரிசையில், ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது. இப்போது வெளியான தகவலின் படி, ஐபோன் 13 விலையில் புதிய ஐபோன் 14 மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது என்று கூறப்படுகிறது.

ஐபோன் 13 மாடலை உங்களுக்கு நினைவிருக்கிறது தானே?
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 மாடலை உங்களுக்கு நினைவிருக்கிறது தானே, எப்படி இல்லாமல் போகும், இன்று இந்தியாவில் விற்பனை செய்யப்படும் லேட்டஸ்ட் ஐபோன் மாடல் இது தானே. சரி விஷயத்திற்கு வருவோம், ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு முதன்முதலில் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்த அதே விலையில், இந்த ஆண்டு அதன் ஐபோன் 14 செரிஸ் மாடல்களை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. காரணம், ஆப்பிள் நிறுவனத்தின் சூழ்நிலை அப்படி இருக்கிறது.

ஐபோன் 14 மாடலில் சில மாடல் A15 சிப்செட் உடன் வருமா?
ஸ்மார்ட்போன் சந்தையில் இப்போது விநியோகச் சங்கிலி சிக்கல்கள் மற்றும் விலை உயர்வுகள் இருந்தபோதிலும், "ஆப்பிளின் மூத்த நிர்வாகிகளால்" இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சமீபத்திய தகவல் குறிப்பிடுகிறது. புதிய செல்லுலார் மோடம் மற்றும் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 மேக்ஸின் புதுப்பிக்கப்பட்ட உள் வடிவமைப்பு, A15 Bionic சிப்செட் உடன் வெளிவரும் என்றும் சில வதந்திகள் பரவியுள்ளது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 13 மாடல்களில் A15 Bionic சிப்செட்களை வழங்கியிருந்தது.

அப்படியானால் எந்த மாடலின் A16 Bionic சிப்செட் எதிர்பார்க்கப்படுகிறது?
விநியோக சங்கிலி சிக்கல்கள் மற்றும் உபகரணங்களின் விலை உயர்வு காரணமாக ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 மேக்ஸ் மாடல்களில் இந்த மாற்றங்களைச் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், வரவிருக்கும் ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் A16 Bionic சிப்செட்கள் காணப்படுவதாக சமீபத்திய லீக் தகவல் குறிப்பிடுகிறது. ஒருவேளை, ஆப்பிள் நிறுவனம் அதன் ப்ரோ வேரியண்ட் மாடல்களில் மட்டும் A16 பயோனிக் சிப்செட்களை வழங்குகிறதா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஐபோன் 13 விலையில் புதிய ஐபோன் 14 அறிமுகமா?
சரி, இந்த வருடம் அறிமுகம் செய்யப்படவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 14 மாடலின் விலை என்னவாக இருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம். MacRumors கண்டுபிடித்த தகவலின் படி, iPhone 14 இன் ஆரம்ப விலை $799 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 63,200 என வதந்தி பரவியுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 கடந்த ஆண்டு செப்டம்பரில் இதே விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்வது அவசியம். மீண்டும் நிறுவனம் அதே பழைய விலையில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்யவிருக்கிறது.

அடிப்படை மாடலின் விலை நிலையானதாக இருக்குமா?
தொடர்ச்சியான பணவீக்கம் மற்றும் விநியோகச் சங்கிலி கவலைகள் இருந்தபோதிலும், ஆப்பிள் நிறுவனத்தின் "மூத்த நிர்வாகிகளால்" இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, பெயரிடப்படாத ஒரு பெரிய அமெரிக்க நிதி நிறுவனத்தை மேற்கோள் காட்டியுள்ளது. தேவை சரிவு மற்றும் உலகளாவிய ஸ்மார்ட்போன் துறையில் தேக்கநிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விலையை உயர்த்தக்கூடிய கூறுகள் இருந்தாலும், அடிப்படை மாடலின் விலை நிலையானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

A15 பயோனிக் சிப்செட் எந்த மாடல்களில் எதிர்பார்க்கப்படுகிறது?
வதந்தியான iPhone 14 தொடரின் விலை உட்பட எந்த தகவலையும் ஆப்பிள் இன்னும் முறையாக வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 மேக்ஸிற்கான புதுப்பிக்கப்பட்ட உள் வடிவமைப்பு மற்றும் புதிய செல்லுலார் மோடம் ஆகியவை ஒட்டுமொத்த செயல்திறன் ஆதாயங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட A15 பயோனிக் சிப்செட் ஆனது ப்ரோ அல்லாத இரண்டு மாடல்களையும் இயக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐபோன் 14 மாடல்களில் என்னென்ன புதிய விஷயங்கள் இருக்கும்?
அதே நேரத்தில் A16 பயோனிக் சிப்செட் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 மேக்ஸ் ப்ரோவை இயக்கும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 14 இன் பின்புற கேமரா லென்ஸ்களிலும் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தகவல்களின்படி, ஐடி பெஹிமோத் கேமரா லென்ஸ்களை ஜீனியஸ் என்ற நிறுவனத்திடமிருந்து நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்த முறை ஐபோன் 14 மாடல்களில் என்ன புதிய விஷயங்களைக் கொண்டுவரவிருக்கிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications