Home
News

தீப்பிடித்து வெடித்த iPhone.. பழைய iPhone மாடல்லாம் இல்லை.. புது மாடலே வெடித்ததா? எந்த மாடல்? என்ன காரணம்?

என்னது? ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 14 Pro Max) வெடித்து சிதறியதா? இதனால், ஒரு பெண் பலத்த தீக்காயத்திற்கு ஆளாக்கப்பட்டாரா? என்ன காரணத்தினால், ஐபோன் 14 ப்ரோ திடீரென தீப்பிடித்து? என்ற முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். சான்சி மாநிலத்தில் ஒரு பெண், தனது ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும் போது தீப்பிடித்து வெடித்ததால் பலத்த காயங்களுடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

வழக்கம் போல் சார்ஜ்ஜிங்கில் இருந்த ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 14 Pro Max) ஸ்மார்ட்போன் சாதனம், திடீரென வெடித்ததற்கு என்ன காரணம் என்பது ஆராயப்பட்டுள்ளது. சான்சி மாநிலத்தில் உள்ள பெண் சார்ஜ் செய்த ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் வெடித்து சிதறிய பொழுது அருகில் இருந்த போர்வை மற்றும் சுவர்கள் கருகி கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. பெண்ணின் கை மற்றும் பின்புறம் முழுக்க தீக்காயம் ஆனது.

தீப்பிடித்து வெடித்த iPhone.. பழைய iPhone மாடல்லாம் இல்லை..

சான்சி டிவி சேனல் 'ஹுய் பாங் பாங்' நேரடி ஒளிபரப்பில் இந்த சம்பவம் காலை 6.30 மணிக்கு நடந்ததாக கூறப்பட்டுள்ளது. சான்சி தீயணைப்புத்துறையின் விசாரணையின்படி, சார்ஜ் செய்த போது பேட்டரி கோளாறு காரணமாக இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்திற்கு பிறகு ஏற்பட்ட அச்சத்திற்கு பதிலளித்து, ஆப்பிள் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய பாதுகாப்பு உறுதியை அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இனி கூடுதல் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாகவும், இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால், வாரண்டி இருந்தாலும் இல்லாவிட்டாலும், சாதனங்களை சரிபார்ப்புக்காக அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இது போன்ற பாதுகாப்பு பிரச்சினைகளை விரைவாக சரிசெய்யும் அவர்களின் உறுதிப்பாட்டை இது சுட்டி காட்டுகிறது. சான்சியில் மாநிலத்தில் நடந்தது மட்டுமல்லாமல், குவாங்டாங் மற்றும் ஹூனான் மாகாணங்களில் இருந்தும் மின்னணு சாதனங்கள் தீப்பிடித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிகழ்வுகள் அனைத்திலும் மொபைல் சாதனங்களை நீண்ட நேரம் சார்ஜ் செய்தது அல்லது சார்ஜர் கோளாறுகள் போன்ற பொதுவான காரணிகள் தான் முக்கியமான காரணமாக இருப்பதாக தெரிகிறது. இவை சொத்து சேதத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், பயனாளர்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற விபத்துகளைத் தடுக்க, நிபுணர்கள் பாதுகாப்பான சார்ஜிங் நடைமுறைகளை கடைபிடிக்க பரிந்துரைக்கின்றனர்.

குறிப்பாக இரவில் அல்லது அறைகள் காலியாக இருக்கும் போது நீண்ட நேரம் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனதும் சார்ஜரை துண்டிக்கவும். சாதனம் அதிக வெப்பமடைந்தாலோ அல்லது விசித்திரமான வாசனை வந்தாலோ உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்தி, உடனே அருகில் உள்ள சர்வீஸ் ஸ்டேஷன் இல் இருந்து ஆலோசனையைப் பெறவும். இந்த நிகழ்வுகள் பயத்தை ஏற்படுத்துகின்றன என்றாலும், இவை பெரும்பாலும் விதிவிலக்காகவே உள்ளன.

எனினும், மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும் போது எச்சரிக்கையாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நிகழ்வுகள் நமக்கு நினைவுபடுத்துகின்றன. பயனாளர்கள் தங்கள் நலன் மற்றும் சுற்றுப்புறத்தின் நலன் கருதி பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய மக்களை பொறுத்த வரையில், அதிக மக்களிடம் இரவு உறக்கத்தின் போது முழுமையாக சார்ஜ் செய்யும் பழக்கம் பெரும்பாலான அளவில் காணப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iPhone 14 Pro Max Explodes While Charging What's The Reason For Blast?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X