Home
News

ஐபோன் 14 ப்ரோ மீது ரூ.61,000 தள்ளுபடியா? அமேசானில் சைலெண்டாக விற்பனை.. எப்போ வாங்கலாம்?

ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) ஸ்மார்ட்போனை ரூ.61,000 தள்ளுபடியுடன் வாங்க ஒரு அறிய வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. அமேசான் (Amazon) நிறுவனத்தின் சிறப்பு தள்ளுபடியுடன் ஐபோன் 14 ப்ரோவை வாங்க ஒரு அட்டகாசமான சான்ஸ் கிடைத்துள்ளது.

அமேசான் இந்தியாவில் (Amazon India) கூல் டீல்கள் இப்போது ஏராளமாகி அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அறிவிக்கப்பட்ட ஒரு சமீபத்திய டீல் பட்டியலில் புதிய ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro), ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி 23 அல்ட்ரா (Samsung Galaxy 23 Ultra) போன்ற சாதனங்கள் மீது அதிகப்படியான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 14 ப்ரோ மீது ரூ.61,000 தள்ளுபடியா? அமேசானில் சைலெண்டாக விற்பனை..

உதாரணமாக, இந்த சிறப்பு தள்ளுபடி மூலம், ரூ.61,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வேல்யூ கிடைக்கிறது. இந்த போன்களை எப்படி வங்கி தள்ளுபடியுடன் சேர்த்து, வாங்கலாம் என்பது இங்கே. பிரீமியம் வகை ஸ்மார்ட்போன்களை மலிவாக வாங்க கிடைக்கும் உங்களுக்கான சிறந்த வாய்ப்பு இது மட்டுமே. அமேசானின் 5வது கியர் ஸ்டோரில் வழங்கப்படும் டான்சு டீலில், ஒன்பிளஸ், சாம்சங் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களை MRP-இல் இருந்து மிக மலிவான விலையில் வழங்குகிறது.

இந்த ஒப்பந்தத்தில், இந்த மூன்று நிறுவனங்களின் போன்களையும் மிகக் குறைந்த விலையில் அபார எக்ஸ்சேஞ்ச் சலுகையில் வாங்கலாம். எனவே இந்த மூன்று முன்னணி நிறுவனங்களின் எந்தெந்த சாதனங்களில் Amazon என்ன வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro)
அமேசானில் 128ஜிபி ஃபோனின் டீப் பர்பிள் வேரியண்ட் மாடலின் எம்ஆர்பி ரூ.1,29,900 ஆகும். இது 8% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.1,19,999 விலைக்கு கிடைக்கிறது. வங்கி சலுகையில், இந்த போனின் விலையை மேலும் ரூ.3,000 குறைக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையில், இந்த போன் 61 ஆயிரம் ரூபாய் வரை மலிவானதாக இருக்கும்.

எக்ஸ்சேஞ்ச் சலுகையில் கிடைக்கும் தள்ளுபடி உங்கள் பழைய சாதனத்தின் நிலை மற்றும் அதன் பிராண்டின் நிலையைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளவும். அம்சங்களைப் பற்றி பேசுகையில், நிறுவனம் இந்த போனில் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவை வழங்கியுள்ளது. இந்த போனில் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவை நீங்கள் பார்க்கலாம்.

ஐபோன் 14 ப்ரோ மீது ரூ.61,000 தள்ளுபடியா? அமேசானில் சைலெண்டாக விற்பனை..

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G)
இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் விலை ரூ.39,999 ஆகும். விற்பனையின் போது ரூ.1,500 வரை வங்கி தள்ளுபடியுடன் வாங்கலாம். அமேசான் ஒப்பந்தத்தில் இந்த போனுக்கு ரூ.37,900 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்கப்படுகிறது. இந்த போனஸ் உங்கள் பழைய ஃபோனின் நிலை மற்றும் பிராண்டைப் பொறுத்தது.

அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போனில் 6.7 இன்ச் சூப்பர் ஃப்ளூயிட் AMOLED டிஸ்ப்ளே கிடைக்கும். இந்த ஃபோன் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 (Snapdragon 8+ Gen 1) சிப்செட் உடன் வருகிறது. இதன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 100W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S23 Ultra 5G)
இந்த பிரீமியம் சாம்சங் போன் ரூ.1,49,999 எம்ஆர்பி (MRP) உடன் வருகிறது. இதற்கு 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடிக்குப் பிறகு, அதன் விலை ரூ.1,04,950 ஆகக் குறைந்துள்ளது. வங்கி சலுகையில் அதன் விலையை ரூ.1500 வரை குறைக்கலாம். இந்த போனில் ரூ.61,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் நிறுவனம் வழங்குகிறது.

உங்கள் பழைய ஃபோனின் நிலை மற்றும் பிராண்டைப் பொறுத்து எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி இருக்கும். அம்சங்களைப் பற்றி பேசுகையில், அந்த போனில் கூல் டிஸ்ப்ளே மற்றும் கேமராவுடன் கூடிய சக்திவாய்ந்த செயலி கிடைக்கும். இந்த போன்களை மிகவும் குறைத்த விலையில் வாங்க இது பெஸ்ட் வாய்ப்பாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 14 Pro Gets Massive Discount Of Rs 61000 From Amazon India Dhansu Deal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X