என்னப்பா இப்படி செஞ்சுட்டீங்க? iPhone 14 Pro பற்றி வெளியான லீக்.! ஷாக்கில் Apple.!

|

ஆப்பிள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்துவது போலப் பல செய்திகள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. சமீபத்தில் தான் ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய iPhone 14 சீரிஸ் மாடல்களின் அறிமுகம் நிகழ்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியாகி சில தினங்களே ஆனா நிலையில், இப்போது ஐபோன் 14 ப்ரோ மாடல் குறித்த புதிய லீக் வெளியாகியுள்ளது.

ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் எப்போது?

ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் எப்போது?

ஆப்பிள் தனது அடுத்த தலைமுறை ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் தனது Far Out என்ற அறிமுக நிகழ்வில் இந்த ஆண்டிற்கான புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. ஐபோன் 14 தொடரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ பற்றி வெளியான லீக் என்ன சொல்கிறது?

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ பற்றி வெளியான லீக் என்ன சொல்கிறது?

ஏற்கனவே ஆன்லைனில் சில லீக் தகவல்கள் வெளியாகி புதிய ஐபோன் 14 மாடல் பற்றிய பல விவரங்களை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் வெளியான சமீபத்திய லீக் தகவல் படி, ஸ்மார்ட்போனின் பல டம்மி மாடல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. வரவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மாடலுக்கான வண்ண விருப்பங்களை இந்த லீக் தகவல் வெளிப்படுத்தியுள்ளது.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

Apple iPhone 14 Pro கலர் விபரங்கள் கசிந்ததா?

Apple iPhone 14 Pro கலர் விபரங்கள் கசிந்ததா?

Weibo இல் வெளியான பதிவில், Apple iPhone 14 Pro மாடலின் டம்மி ஸ்மார்ட்போன் மாடல்கள் ஐந்து வண்ண விருப்பங்களில் காணப்பட்டுளள்து. இதில் நாம் ஏற்கனவே பார்த்த நிலையான கோல்டு, கிராஃபைட் மற்றும் சில்வர் வண்ணங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. இது தவிர, இன்னும் புதிதாக இரண்டு புதிய வண்ணங்களில் ஐபோன் 14 ப்ரோ மாடலின் டம்மிகள் காட்சியளித்துள்ளது.

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ இந்த புது கலரில் அறிமுகமா?

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ இந்த புது கலரில் அறிமுகமா?

இந்த வரிசையில், ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் ஒரு ப்ளூ வேரியண்ட் மற்றும் பர்பிள் நிற வேரியண்ட் மாடல்களில் வெளிவரலாம் என்பதை லீக் தகவல் வெளிப்படுத்தியுள்ளது. ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் புதிய பர்பிள் நிறத்தில் வழங்கப்படும் என்று கூறப்பட்ட முந்தைய லீக் தகவலுக்கு ஏற்ப இந்த ஆதாரம் காட்சியளிக்கிறது.

iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!

பர்பிள் நிற மாடலில் என்ன தனித்துவம் இருக்கிறது?

பர்பிள் நிற மாடலில் என்ன தனித்துவம் இருக்கிறது?

தற்போது, ​​புதிய வண்ண விருப்பமானது ப்ரோ மாடல்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி, பர்பிள் நிற ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் ஒரு தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இது ஒளி நிலைமைகளின் அடிப்படையில் வண்ணத்தை மாற்றுகிறது என்றும் சில லீக் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு கூட ஆப்பிள் பர்பிள் நிற மாடல்களை அறிமுகம் செய்ததா?

இதற்கு முன்பு கூட ஆப்பிள் பர்பிள் நிற மாடல்களை அறிமுகம் செய்ததா?

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிள் ஐபோன் 12 தொடர் மாடல்களில் பர்பிள் நிற மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது கவனிக்கத்தக்கது. ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 7 ஆம் தேதி அதன் வெளியீட்டு நிகழ்வை இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல்களுடன் அடுத்த தலைமுறை ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WiFi பாஸ்வோர்ட் மறந்து போச்சா? Android மற்றும் iOS டிவைஸில் எப்படி பாஸ்வோர்டை கண்டுபிடிப்பது?WiFi பாஸ்வோர்ட் மறந்து போச்சா? Android மற்றும் iOS டிவைஸில் எப்படி பாஸ்வோர்டை கண்டுபிடிப்பது?

செப்டெம்பர் தொடர்ந்து ஆக்டொபரில் மற்றொரு அறிமுக ஈவென்ட்டா?

செப்டெம்பர் தொடர்ந்து ஆக்டொபரில் மற்றொரு அறிமுக ஈவென்ட்டா?

அதேபோல், ஆப்பிள் நிறுவனம் அக்டோபரில் மற்றொரு நிகழ்வை நடத்தவும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் ஐபாட் மற்றும் M2-இயங்கும் iPad Pro மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 14 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் நேரத்தில் இந்தியாவில் ஐபோன் 13 சீரிஸ் மற்றும் முந்தைய ஐபோன் 12, 11 போன்ற சாதனங்களின் விலை வீழ்ச்சியடையும் என்பதை மறக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
iPhone 14 Pro Color Options Leaked Online Ahead Of Launch September 7th

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X