உலகத்தில யாருமே அடுத்த 25 நாளுக்கு iPhone 14 Pro / Max வாங்கவே முடியாதா? என்ன சொல்றீங்க.!

|

ஆப்பிள் புதிதாக அறிமுகம் செய்த ஐபோன் 14 (iPhone 14) சீரிஸ் வரிசையில் இருக்கும் ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) சாதனங்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்ததா?

அப்படியானால், உங்களுக்கான வாய்ப்பை நீங்கள் தவறவிட்டுவிட்டீர்கள்.! ஆம், இனி அடுத்த 25 நாட்களுக்கு உலகத்தில் இருக்கும் யாருமே ஐபோன் 14 ப்ரோ மாடல்களை வாங்க முடியாது.!

உலகம் முழுக்க ஐபோன் 14 ப்ரோ மாடலுக்கு இப்படி ஒரு நிலையா?

உலகம் முழுக்க ஐபோன் 14 ப்ரோ மாடலுக்கு இப்படி ஒரு நிலையா?

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ உலகம் முழுவதும் உள்ள கடைகளில் இருக்கும் ஸ்டாக் தீர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர்களில் கூட இந்த ப்ரோ மாடல்களை பார்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஐபோன் 14 ப்ரோ மாடல்களுக்கான தேவை, போனின் உற்பத்தித் திறனை விட அதிகமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த 25 நாட்களுக்கு iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max வாங்க முடியாதா?

அடுத்த 25 நாட்களுக்கு iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max வாங்க முடியாதா?

இதனால், உலகளவில் எதிர்பார்த்திடாத அளவிற்கு புதிய டிமாண்ட் உருவாகியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max போனுக்கான வெயிட்டிங் டைம் என்று சொல்லப்படும் காத்திருப்பு நேரம் 25 நாட்கள் அதிகரித்துள்ளது.

ஆம், அடுத்த 25 நாட்களுக்கு பிறகு தான் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது என்று சந்தேகத்துடன் கூறப்பட்டுள்ளது.

அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!

30 நாடுகளிலும் இதே நிலை தானா?

30 நாடுகளிலும் இதே நிலை தானா?

Apple Insider இன் கூற்றுப்படி, முதலீட்டு வங்கியான UBS இன் ஆய்வாளர் டேவிட் வோக்ட் 30 நாடுகளில் iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max இன் கிடைக்கும் தன்மை பற்றி சோதனை செய்து பார்த்திருக்கிறார்.

30 நாடுகளிலும் இந்த ஐபோன் ப்ரோ மாடல்கள் அவுட் ஆப் ஸ்டாக்கில் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார். அதேபோல், இவற்றின் காத்திருப்பு நேரமும் 30 நாடுகளில் அதிகமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

5 முதல் 25 நாட்கள் வரை வெயிட்டிங் டைம் -ஆ!

5 முதல் 25 நாட்கள் வரை வெயிட்டிங் டைம் -ஆ!

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸிற்கான காத்திருப்பு நேரம் ஒவ்வொன்றும் 5 முதல் 25 நாட்கள் வரை அதிகரித்துள்ளதாக யுபிஎஸ் டிராக்கர் தகவல் வெளிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, டெல்லியில் உள்ள கடைகளில் ஐபோன் 14 ப்ரோ பற்றாக்குறை குறித்து ஆப்பிள் நிறுவனத்துடன் பேசியதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

இந்தியாவில் ஐபோன் 14 அசெம்பிள் செய்யப்படுகிறதா?

இந்தியாவில் ஐபோன் 14 அசெம்பிள் செய்யப்படுகிறதா?

ஆப்பிள் விநியோக தடைகளை நிவர்த்தி செய்து வருவதாகவும் அவர் வெளிப்படுத்தினார். குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவில் மூன்று சப்ளையர்களுடன், ஆப்பிள் ஐபோன் 13, ஐபோன் 12 மற்றும் ஐபோன் 11 ஆகியவற்றை நாட்டில் உற்பத்தி செய்கிறது.

இந்த பட்டியலில் ஐபோன் 14 மாடலும் சேர்க்கப்பட்டுள்ளது. ப்ளூம்பெர்க் செய்தியின்படி, ஆப்பிளின் தைவானிய ஒப்பந்த உற்பத்தியாளர் பெகாட்ரான் கார்ப் இந்தியாவில் ஐபோன் 14 ஐ அசெம்பிள் செய்யத் தொடங்கியுள்ளது.

வாஷிங்டன் - பெய்ஜிங் வர்த்தகப் போர் காரணமா?

வாஷிங்டன் - பெய்ஜிங் வர்த்தகப் போர் காரணமா?

மறுபுறம், புரோ மாடல்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான செய்திகளில், வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போர் காரணமாக, ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து உற்பத்தி மையங்களை மாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், உற்பத்தியைச் சீனாவிற்கு வெளியே மாற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல என்று தெரிகிறது.

1 இல்ல தினமும் 2 ஜிபி தராங்க.! Jio-ல அதிகமா ரீசார்ஜ் செய்யப்பட்ட ரீசார்ஜ் பிளான்.! உடனே பாருங்க.!1 இல்ல தினமும் 2 ஜிபி தராங்க.! Jio-ல அதிகமா ரீசார்ஜ் செய்யப்பட்ட ரீசார்ஜ் பிளான்.! உடனே பாருங்க.!

iPhone 14 pro மற்றும் iPhone 14 pro max வாங்க ஏறக்குறைய 1 மாத தடை ஏற்பட்டுள்ளது

iPhone 14 pro மற்றும் iPhone 14 pro max வாங்க ஏறக்குறைய 1 மாத தடை ஏற்பட்டுள்ளது

காரணம் என்னவென்றால், பெரும்பாலான ஐபோன் கூறுகள் சீனா நாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று கவுண்டர்பாயிண்ட் மூத்த ஆய்வாளர் இவான் லாம் கூறினார். திடீரெனெ ஏற்பட்ட இந்த டிமாண்ட் காரணமாக உலகளவில் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் டிவைஸ்களை வாங்குவதில் ஏறக்குறைய 1 மாத தடை ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iPhone 14 Pro and iPhone 14 Pro Max waiting time has increased by 5 to 25 days each

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X