Home
News

எது! iPhone 14 தான் ஆப்பிள் வரிசையிலேயே ரொம்ப மொக்கை போனா? உண்மை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

என்னது புதுசா ரிலீஸ் செய்த ஐபோன் 14 (iPhone 14) மொக்கை போன்னா? ஐபோன் வரிசையிலேயே இப்படி ஒரு குறைந்த ரேட்டிங்கை இதுவரைக்கும் வேறு எந்த போனும் பெறவில்லையா? என்னய்யா சொல்றீங்க? உண்மையாவா? என்று வயிற்றில் புளியை கரைக்கிறது சமீபத்திய செய்தி.

ஐபோன் 14 ஸ்மார்ட்போனை ஆசை-ஆசையாய் வாங்கியவர்களில் நீங்களும் ஒருவரா? அல்லது ஐபோன் 14 சாதனத்தை சொந்தமாக்கிக்கொள்ளலாம் என்ற கனவில் உலா வருபவரா நீங்கள்? அப்படியானால், காட்டாயம் இந்த பதிவை இறுதி வரை நீங்கள் படித்தாக வேண்டும். சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின் முடிவுகள், ஐபோன் 14 பயனர்களை கவலையடைய செய்துள்ளது.

எது! iPhone 14 தான் ஆப்பிள் வரிசையிலேயே ரொம்ப மொக்கை போனா? உண்மை என்ன?

ஆப்பிள் நிறுவனம் பல ஆண்டுகளாக அதன் ஐபோன் சாதனத்தின் பிரபலத்தை உலகம் முழுக்க ஒரே மாதிரியாக பராமரித்து வருகிறது. உலகளவில் நம்பகமான மற்றும் பிடித்த ஸ்மார்ட்போன் மாடலாக ஐபோன் சாதனம் மட்டுமே மக்களால் பெரிதும் விருப்பப்படுகிறது. அப்படி ஆப்பிள் ரசிகர்களின் மிகுந்த ஆதரவை பெற்ற ஸ்மார்ட்போனாக திகழ்வது தான் ஐபோன் 14 சாதனமாகும். உண்மையை சொல்ல போனால், ஆப்பிள் எதிர்பார்த்ததை விட இந்த சாதனம் குறைந்தளவு பிரபலமடைந்துள்ளதாம்.

iPhone 14 சாதனம் எதிர்பார்த்த அளவுக்கு பிரபலமடையவில்லை என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஆப்பிள் வரலாற்றில் எந்த ஒரு ஐபோன் சாதனமும் இவ்வளவு குறைந்த 5-நட்சத்திர மதிப்பீடுகளை பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஆப்பிளே ரசிகர்களால் குறைந்தளவு 5 ஸ்டார் ரேட்டிங் ஆப்பிள் ஐபோன் 14 மாடலுக்கு மட்டுமே கிடைத்துள்ளதாம். இது வெளிப்படையாக ஆப்பிளின் கணக்கெடுப்பு அல்ல என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால் 6,69,000 ஐபோன்களின் பயனர் உருவாக்கிய மதிப்புரைகளைக் கொண்டு, PerfectRec நடத்திய ஆய்வு இதுவாகும். கடந்த 2010 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 4 முதல் தொடங்கி, சமீபத்திய iPhone 14 வரை 13 ஆண்டுகால பயனர் உருவாக்கிய iPhone மதிப்பாய்வுகளை ஆய்வு செய்துள்ளனர். இது எல்லா ஐபோன்களின் அடிப்படை மாடலை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இத்தகைய 5-ஸ்டார் ரேட்டிங் சரிவை iPhone 5 பெற்றிருந்தது என்று கூறப்படுகிறது.

எது! iPhone 14 தான் ஆப்பிள் வரிசையிலேயே ரொம்ப மொக்கை போனா? உண்மை என்ன?

அதற்கு பின், ஐபோன் இன் 5 ஸ்டார் ரேட்டிங் ஒவ்வொரு வருடமும் மாடலுக்கு-மாடல் படிப்படியாக உயர்ந்துள்ளது என்று PerfectRec ஆய்வு தெளிவாக காண்பித்துள்ளது. ஆனால், ஐபோன் 6 முதல் ஐபோன் 13 வரை இது நல்ல வரவேற்பை பெற்று, 5 ஸ்டார் ரேட்டிங் கணிசமாக ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துள்ளது. ஐபோன் 13 சாதனம் இதுவரை 80 சதவீத 5-ஸ்டார் ரேட்டிங்களை பெற்றுள்ளது. ஆனால், ஐபோன் 14 இப்போது வரை வெறும் 72 சதவீத 5 ஸ்டார் ரேட்டிங்களை மட்டுமே பெற்று, பின்னடைவை சந்தித்துள்ளதாம்.

அடிப்படை வேரியண்ட் மாடலான ஐபோன் 14 மட்டுமல்லாமல், அதன் ப்ரோ மாடல்களும் 5 ஸ்டார் ரேட்டிங்கில் பின்னடைவை சந்தித்துள்ளன. ஐபோன் 13 ப்ரோ 5-ஸ்டார் ரேட்டிங்கில் 84 சதவீதத்தைக் கொண்டிருந்தது, ஐபோன் 14 ப்ரோ 76 சதவீதத்தைப் பெற்றுள்ளது. இதேபோல், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 5 ஸ்டார் ரேட்டிங் மதிப்பீடுகளில் 86 சதவீதத்தையும், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 80 சதவீதத்தையும் பெற்றுள்ளது.

ஐபோன் 14-க்கான 5 ஸ்டார் ரேட்டிங்களின் சரிவைப் பொறுத்தவரை, இதன் அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் வன்பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆப்பிள் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் வழங்காதது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பழைய A15 சிப்பை ஃபிளாக்ஷிப் மாடலில் மீண்டும் பயன்படுத்தியதும் காரணமாக இருக்கலாம். அல்லது ஐபோன் 14 இல் டைனமிக் ஐலேண்ட் இல்லாததும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 14 Is Not As Popular As Expected New Report Shows Smartphone With Less 5 Star Ratings
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X