அறிவிப்பு வந்தாச்சு.. அடுத்த 6 நாளுக்கு லேட்டஸ்ட் iPhone-கள் மீது ஆஃபர் மழை.. Apple Days-ஐ மிஸ் பண்ணிடாதீங்க!
அடுத்த 6 நாட்களுக்கு, ஆப்பிள் டேஸ் சேல் (Apple Days Sale) என்கிற சிறப்பு விற்பனை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை எங்கு நடக்கிறது? என்னென்ன ஐபோன் (iPhone) மாடல்கள் மீது என்னென்ன சலுகைகள் (Offers) கிடைக்கும்? இதோ விவரங்கள்:
ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள இந்த ஆப்பிள் டேஸ் விற்பனையானது மே 4 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனையானது, ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ரீசெல்லர் (Authorized Reseller) ஆன விஜய் சேல்ஸ் (Vijay Sales) வழியாக மட்டுமே அணுக கிடைக்கும்.

வருகிற மே 5 ஆம் தேதி முதல், பிரபல இகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) அதன் பிக் சேவிங் டேஸ் (Big Saving Days) விற்பனையை நடத்தவுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த விற்பனையிலும் கூட ஆப்பிள் ஐபோன்கள் மீது அட்டகாசமான ஆஃபர்கள் அறிவிக்கப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
குறிப்பாக ஐபோன் 13 (iPhone 13) மிகப்பெரிய தள்ளுபடி கிடைக்குமென்று பிளிப்கார்ட் ஏற்கனவே உறுதியளித்துள்ளது. குறிப்பிட்ட மாடல் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.61,999 க்கு விற்கப்படுகிறது. வரும் நாட்களில் (இன்னும் குறிப்பிட்டு சொன்னால் மே மாத தொடக்கத்தில்) ஐபோன் 13 மீது மேலும் பல சலுகைகள் அறிவிக்கப்படும்.
விஜய் சேல்ஸ் அறிவித்துள்ள ஆப்பிள் டேஸ் விற்பனைக்கு வரும்போது, லேட்டஸ்ட் ஐபோன்கள் மட்டுமின்றி மேக்புக் (MacBook), ஏர்போட்ஸ் (AirPods), ஆப்பிள் வாட்ச் (Apple Watch) மற்றும் பிற ஆப்பிள் தயாரிப்புகளின் மீது ஃபிளாட் ஆஃபர்களும் (Flat Offers), வங்கி சலுகைகளும் (Bank Offers) அணுக கிடைக்கிறது.
இந்த சிறப்பு விற்பனையின் போது ஐபோன் 14 (iPhone 14) மாடலானது ரூ.66,990 க்கும், ஐபோன் 14 பிளஸ் மாடலானது ரூ.76,490 க்கும், ஐபோன் 14 ப்ரோ மாடலானது ரூ.1,17,990 க்கும் வாங்க கிடைக்கும். இந்த சீரிஸின் ஹை-எண்ட் மாடலான ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் வங்கி சலுகைகள் உட்பட ரூ.1,28,490 க்கு வாங்க கிடைக்கும்.
ஒருவேளை நீங்கள் சற்றே பழைய ஐபோன் 13 (iPhone 13) மாடலை வாங்க விரும்பினால், அதன் மீதும் சலுகைகள் கிடைக்கும். விஜய் சேல்ஸின் ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 13 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் (அதாவது 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்) ரூ.59,490 க்கு வாங்க கிடைக்கும்.
ஆப்பிள் மேக்புக் மீதான சலுகைகளை பொறுத்தவரை, உங்களிடம் எச்டிஎப்சி பேங்க் கார்டுகள் இருந்தால் எம்1 சிப் கொண்ட மேக்புக் ஏர்-ஐ ரூ.77,900 க்கும், எம்2 சிப் உடன் வரும் மேக்புக் ஏர்-ஐ ரூ.1,02,790 க்கும், எம்2 சிப்களுடன் கூடிய மேக்புக் ப்ரோவை ரூ.1,11,900 க்கும், எம்2 ப்ரோ சிப் கொண்ட மேக்புக் ப்ரோவை ரூ.1,74,900 க்கும் வாங்கலாம்.
ஆப்பிள் வாட்ச் மீதான சலுகைகளை பொறுத்தவரை, எச்டிஎஃப்சி வங்கி சலுகைகளின் கீழ் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8-ஐ ரூ.39,990 க்கும், ஆப்பிள் வாட்ச் எஸ்இ (2வது ஜென்) மாடலை ரூ.25,990 க்கும் வாங்கலாம். கடைசியாக இந்த விஜய் சேல்ஸின் ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது மெக்சேஃப் சார்ஜிங் கேஸுடன் கூடிய ஏர்பாட்ஸ் ப்ரோவை (2nd Gen) ரூ.23,490 க்கு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications