Home
News

முன்பை விட மிக குறைந்த விலையில் iPhone 14.! அடேங்கப்பா.! எடுத்தவுடனே ரூ.11,400 தள்ளுபடியா?

ஒரு முறையாவது ஐபோனை (iPhone) சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது அனைவருக்கும் பக்கெட் லிஸ்டில் (Bucket List) இருக்கும் ஒரு ஆசையாக இருக்கும். ஏன்? சிலருக்கு ஐபோன் வாங்க வேண்டும் என்பது லட்சிய கனவாகக் கூட இருக்கலாம்..

காரணம் எதுவாக இருந்தாலும், ஒரு ஐபோனை சொந்தமாக்கிக்கொள்வது என்பது அவ்வளவு சுலபனதில்லை. ஏனெனில், இவை மிகவும் விலை உயர்ந்தவை. இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஐபோனுடைய மதிப்பு கொஞ்சம் கூட குறையவில்லை என்பதே உண்மை. இருப்பினும், இதை வாங்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இன்னும் மக்களுக்குக் குறைந்ததாக தெரியவில்லை.

முன்பை விட மிக குறைந்த விலையில் iPhone 14.! ரூ.11,400 தள்ளுபடியா?

iPhone 14 விலை அதிகமாக இருந்தாலும்.. மக்களின் ஆசை மட்டும் அடங்கலை.!

பலரும் ஐபோனை வாங்க விரும்புவதற்கான காரணம் அதன் தரம் தான். குறைவான விலைக்கு அவர்களது தயாரிப்புகளை விற்பனை செய்ய அதன் தரத்தைக் குறைக்க ஆப்பிள் நிறுவனம் முன் வரவில்லை. நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற தரமான பொருள் உங்களுக்கு கிடைக்கும் என்பதுதான் ஆப்பிளின் நிறுவனத்தின் தாரக மந்திரம்.

ஆப்பிளுடைய சமீபத்திய அறிமுகமான ஐபோன் 14 டிவைஸிற்கு உலகளவில் எவ்வளவு எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்தது என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. இந்த போனை வாங்க பலர் ஆசைப்பட்டாலும், இதன் விலை 72,500 ரூபாயிலிருந்து குறையாமல் நின்றது. விலை காரணமாகவே சிலர் இந்த ஆப்பிளின் ஐபோன் 14ஐ வாங்க தயக்கம் காட்டி வந்தனர்.

அப்படி தயக்கம் கொண்டவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த குட் நியூஸ் உங்களுக்கானது தான். பிளிப்கார்ட் (Flipkart) வழியாக இப்போது ஆப்பிள் ஐபோன் 14 மீது அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் ஐபோன் 14 பேசிக் வேரியண்ட் (Basic Variant) 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஸ்மார்ட்போனாது ப்ளிப்கார்ட் இணையதளத்தில் ரூபாய் 72,499 விலைக்கு விற்பனையாகி வருகிறது.

முன்பை விட மிக குறைந்த விலையில் iPhone 14.! ரூ.11,400 தள்ளுபடியா?

ஐபோன் 14 மீது மொத்தமா ரூ. 11,401 தள்ளுபடியா? நம்பவே முடியலை.!

இந்த நிலையில் ப்ளிப்கார்ட் பிரத்தியேகமாக ரூ. 7,401 அதிரடி தள்ளுபடியை ஐபோன் 14 ஸ்மார்ட்போன் மீது இப்போது அறிவித்துள்ளது. இத்துடன், உங்களிடம் ஹெச்டிஎஃப்சி வங்கியின் கார்டு (HDFC Bank Card) இருக்கும் பட்சத்தில் கூடுதலாக ரூபாய் 4,000 தள்ளுபடியும் கிடைக்கும். அந்த வகையில் மொத்தம் ரூ. 11,401 தள்ளுபடியுடன், சுமார் ரூ. 68,499 விலைக்கு புது ஐபோன் 14 ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க முடியும்.

மேம்பட்ட அம்சங்கள் கொண்ட ஐபோன் 14 128ஜிபி வேரியண்டை இத்தகைய தள்ளுபடி விலையில் வாங்குவது ஒரு சிறப்பான சலுகை என்றே கூறலாம். வெறும் ரூ.68,499 என்ற விலையில் இந்த ஐபோன் 14 சாதனத்தை வாங்குவது வொர்த்தா? இது ஒன்றும் குறைந்த தொகை இல்லையே..! அப்படி என்ன இருக்கிறது இந்த ஐபோன் 14ல்? என்று சில எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றினால், இந்த காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

முதலில் ஐபோன் 13ஐ விட இதில் கூடுதல் OS அப்டேட்கள் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி ஐபோன் 14 சீரிஸில் வரும் ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்தியேகமாக வீடியோ ரெக்கார்டிங்கில் (Video Recording) ஆக்சன் மோடு சப்போர்ட் (Action Mode Support) கொடுக்கப்படுகிறது. மேலும் ஐபோன் 14ல் மற்ற ஐபோன்களில் இல்லாத கிராஷ் டிடக்ஷன் சப்போர்ட் (Crash Detection Support) மற்றும் சாட்டிலைட் கனெக்டிவிட்டி (Satellite Connectivity) ஆகிய அம்சங்களும் உள்ளது.

முன்பை விட மிக குறைந்த விலையில் iPhone 14.! ரூ.11,400 தள்ளுபடியா?

இவ்வளவு அதிக பணம் கொடுத்து வாங்க iPhone 14 வொர்த்தா? அப்படி என்ன இருக்கு இந்த போன்ல?

இதுவே ஐபோன் 14ஐ மற்ற ஐபோன்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அதன் சிறப்பம்சங்களாகும். உங்களிடம் ஹெச்டிஎஃப்சி பேங்க் கார்டு இல்லாத பட்சத்தில், பிளிப்கார்ட்டின் ஆக்சிஸ் பேங்க் கார்டை (Axis Bank Card) பயன்படுத்தி 5% கேஷ் பேக் (Cash Back) பெற முடியும். இதுவும் ஐபோன் 14ஐ தள்ளுபடி வாங்க ஒரு நல்ல சலுகை என்றே கூறலாம். iPhone 14 மாடலின் 128ஜிபி வேரியண்டை தவிர்த்து 256ஜிபி மற்றும் 512ஜிபி சேமிப்பு அம்சங்கள் கொண்ட மேலும் இரண்டு வேரியண்டுகளும் ஐபோன் 14ல் உள்ளது.

இந்த இரண்டு வேரியண்டுகளும் முறையே ரூ. 82,499 மற்றும் ரூ.1,02,499 விலையில் பிளிப்கார்ட்டில் விற்பனையாகிறது. ஐபோன் 14ன் அனைத்து வேரியண்டுகளுக்கும் மேற்கூறிய சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் (Exchange) மூலம் மாற்றினால், புது ஐபோன் 14 இன் விலையை இன்னும் கணிசமாகக் குறைக்க முடியும்.

iPhone 14 வாங்க இதுதான் சரியான நேரம். நல்ல வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

Best Mobiles in India

English summary
iPhone 14 Gets Unbelievable Discount Of Rs 11401 Through Flipkart Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X