Home
News

ரூ.71,900 மதிப்புள்ள iPhone 14 ரூ.27,098 கிடைச்சா விடுவீங்களா? பிளிப்கார்ட்டில் லிமிடெட் ஆஃபர்

நல்ல ஆஃபர் வந்தால் ஆப்பிள் (Apple) போன் வாங்கிவிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் (Flipkart) வியக்கத்தக்க ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் மூலம் ரூ.71,900 மதிப்புள்ள ஐபோன் 14 (iPhone 14) வெறும் ரூ.27,098-க்கு கிடைக்கிறது. இவ்வளவு குறைவான விலையில் எப்படி வாங்க முடியும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 128 ஜிபி வேரியண்ட் முதலில் ரூ.79,999-க்கு அறிமுகமானது. அதன்பின் அதிரடியாக விலைக் குறைக்கப்பட்டு, ரூ.71,999ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால், ஆப்பிள் பிரியர்கள், தங்களது பழைய போன்களை எக்சேன்ஜ் செய்துவிட்டு, ஐபோன் 14 வாங்கத் தொடங்கினர். அதன்பின் அமேசான் (Amazon), பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களிலும் ஐபோன் 14 அதிரடி தள்ளுபடி விலையில் விற்பனையானது.

ரூ.71,900 மதிப்புள்ள iPhone 14 ரூ.27,098 கிடைச்சா விடுவீங்களா?

இப்போது பாதிக்கும் மேலாக விலை குறைந்து பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலையை சொன்னால், உங்களால் நம்பவே முடியாது. அதாவது ரூ.71,900 மதிப்புள்ள ஐபோன் 14 வெறும் ரூ.27,098-க்கு கிடைக்கும் என்றால் நம்பவா முடிகிறது. இப்படிப்பட்ட ஆஃபர் பிளிப்கார்ட்டில் சில நாட்கள் மட்டுமே கிடைக்கும் என்பதால் ஐபோன் பிரியர்கள் உடனடியாக பயன்படுத்திக்கொள்வது நல்லது.

பிளிப்கார்ட் ஆஃபரை எப்படி பெறுவது?: ரூ.71,999 மதிப்புள்ள ஐபோன் 14 128 ஜிபி வேரியண்ட் மீது பிளிப்கார்ட்டில் ரூ.7,901 கேஷ்பேக் (Cash Back) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையோடு நீங்கள் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை (HDFC Bank Credit Card and Debit Card) பயன்படுத்தி கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடியை பெற்றுக்கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல் உங்களது பழைய ஐபோன்களுக்கு ரூ.33,000 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் (Exchange Bonus ) கிடைக்கிறது. இந்த மூன்று ஆஃபர்கள் மூலம் ரூ.27,098-க்கு ஐபோன் 14 வாங்கலாம். மேலும் நோ காஸ்ட் இஎம்ஐ (No cost EMI) மூலம் மாதம் வெறும் ரூ.3,000 செலுத்தியும் வாங்கிக் கொள்ளலாம். இதோடு பிளிப்கார்ட் பே லேட்டருக்கு ரூ.500 கேஷ் பேக் கிடைக்கிறது.

ஐபோன் 14 அம்சங்கள்: ஐபோன் 14 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ஏ15 பயோனிக் (A15 Bionic) சிப்செட் கொண்டுள்ளது. 12 எம்பி டூயல் ரியர் கேமரா உள்ளது. அதேபோல 12 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உடன் கிடைக்கிறது. 3279 mAh பேட்டரி 12.68 வாட்ஸ் வயர்டு மற்றும் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உடன் வருகிறது.

மிட்நையிட் (Midnight) , பர்பிள் (Outside) , ஸ்டார்லைட் Starlight) , ப்ளூ ( Blue), ரெட் ( Red ), யெல்லோ (Yellow) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. விலையை பொறுத்தவரையில் ஐபோன் 14 128 ஜிபி ரூ. 71.999 ஆகவும், 256 ஜிபி விலை ரூ. 81,999 ஆகவும், 512 ஜிபி விலை ரூ.101,999 ஆகவும் உள்ளது. இப்போது ஐபோன் 14 128 ஜிபி வேரியண்ட் பிளிப்கார்ட்டில் அதிரடி ஆஃபர்களில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 14 gets Rs 27098 on Flipkart, check out the deal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X