Home
News

iPhone 14 மீது ரவுண்டா.. முழுசா ரூ.15,000 தள்ளுபடி! இந்த லக்கி சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க!

ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 13 (iPhone 13) மீது அதிரடியாக ஒரு நம்ப முடியாத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில், ஐபோன் 14 மீது ரூ.15,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை எப்படி பெறுவது?

iPhone 14 என்பது சமீபத்தில் நிறுவனம் அறிமுகம் செய்த புத்தம் புது சீரிஸ் மாடலாகும். அதேபோல், கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சீரிஸ் தான் ஐபோன் 13 மாடல்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம். ஐபோன் 14 மற்றும் ஐபோன் 13 ஆகிய இரண்டு போன்கள் மீதும் இப்போது அளவுக்கு அதிகமான சலுகையும், தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி பிளிப்கார்ட் தளத்தில் மட்டுமே கிடைக்கிறது.

iPhone 14 மீது ரவுண்டா.. முழுசா ரூ.15,000 தள்ளுபடி! இதான் லக்கி சான்ஸ்

ஆம், ஐபோன் 14 மீது ஃப்ளிப்கார்ட் தளம் தான் மிகப் பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. ஐபோன் 14 சாதனம் அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் இருந்து, இதுவரை இத்தகைய தள்ளுபடியை யாரும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தள்ளுபடியின் மூலம் iPhone 14 இப்போது குறைந்த விலையில் கிடைக்கிறது. உண்மையை சொல்ல போனால் ஐபோன் 14 இப்போது முந்தைய ஃபிளாக்ஷிப் போன் ஆன iPhone 13 விலையில் கிடைக்கிறது.

நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த சமீபத்திய தள்ளுபடி சலுகைகளுடன், இந்த இரண்டு ஐபோன்களுக்கும் இடையே வெறும் ரூ.3,000 மட்டுமே இடைவெளி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்ட் 2022 ஐபோன்களுக்கு ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. iPhone 14 வாங்க உங்களுக்கு திட்டம் இருந்தால், இந்த சலுகையை எப்படி முழுமையாக பெறுவது என்பதை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

iPhone 14 தற்போது ஈ-காமர்ஸ் தளத்தில் 68,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது அதன் அசல் விலையான 79,999 ரூபாயில் இருந்து குறைந்துள்ளது. இதன் அடிப்படையில் ஃப்ளிப்கார்ட் இந்த ஐபோனின் மீது ரூ.11,000 பிளாட் தள்ளுபடியாக நேரடியாகவே குறைத்து வழங்கியுள்ளது. ஆனால், இது உங்கள் இறுதி சலுகை இல்லை என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் கொஞ்சம் சாமர்த்தியமாக செயல்பட்டால் விலையை ரூ.15,000 வரை கொண்டு செல்லலாம்.

iPhone 14 மீது ரவுண்டா.. முழுசா ரூ.15,000 தள்ளுபடி! இதான் லக்கி சான்ஸ்

இதை செய்ய, நீங்கள் பணம் செலுத்துவதற்கு HDFC வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்த வேண்டும். HDFC கார்டு மூலம் ஐபோன் 14 வாங்கும் நபர்களுக்கு இறுதி விலை ரூ.64,999 ஆக குறைக்கப்படும். இந்த வங்கி அட்டையின் மூலம் உங்களுக்கு கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடி சலுகையை பெற வாய்ப்புள்ளது. இது விலையை பெரிய அளவில் குறைக்கிறது. இருப்பினும், இந்த சலுகை ஐபோன் 14 இன் தயாரிப்பு ரெட் மாடல் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மற்ற வண்ண வகைகள் வெவ்வேறு விலையில் விற்கப்படுகின்றன. குறிப்பிடப்பட்ட சலுகை 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். iPhone 13 இந்தியாவில் ரூ.61,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வருகிறது. ஆப்பிள் தனது ஆன்லைன் ஸ்டோர் மூலம் அதே ஐபோனை ரூ.69,999-க்கு விற்பனை செய்கிறது. எனவே, இந்த சாதனத்தின் மீதும் வாடிக்கையாளர்களுக்கு பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. எந்த போனை தேர்வு செய்வதென்பது உங்கள் விருப்பமே.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 14 Gets Rs 15000 Direct Discount Offer On Flipkart Final Price Goes Down Upto Rs 64999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X