Just In
- 7 hrs ago
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- 7 hrs ago
ஒரு நாள் மட்டும் காத்திருங்கள் போதும்! ரூ.10,000க்குள் அறிமுகமாகும் பக்கா ஸ்மார்ட்போன்!
- 7 hrs ago
பிப்ரவரி 7-வரை எந்த ஸ்மார்ட் டிவியும் வாங்காதீங்க: ஏனெனில் வருகிறது புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.!
- 7 hrs ago
அப்படி போடு! புதுச்சேரி, ஈரோடு, தர்மபுரியில் அறிமுகமான Jio 5G.. வெறும் ரூ.61-க்கு ரீசார்ஜ் செஞ்சா போதும்!
Don't Miss
- News
குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள எகிப்து அதிபர் அல் சிசி வருகை! டெல்லியில் உற்சாக வரவேற்பு
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Automobiles
டொயோட்டாவுக்கு ஏழரை சனி! காரை நம்பி வாங்கியவர்கள் அதிர்ச்சி! பிரச்னைக்கு மேல பிரச்னையா வந்துகிட்டு இருக்கு!
- Movies
உடல்நிலை தேறியுள்ளது.. கைவிரலை உயர்த்திக் காட்டி ரசிகர்களுக்கு அப்டேட் சொன்ன விஜய் ஆண்டனி!
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
இதுதாங்க iPhone.! கார் விபத்தில் சிக்கிய மனைவி: சட்டென ஐபோன் செய்த நல்ல காரியம்: நெகிழ்ந்த கணவர்.!
உலகம் முழுவதும் ஐபோன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஆண்ட்ராண்டு ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான வடிவமைப்பு, தரமான மென்பொருள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் ஆப்பிள் ஐபோன்களை அறிமுகம் செய்யப்படுகின்றன. எனவே தான் இந்நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ஐபோன் 14 மாடலில் உள்ள ஒரு அதிநவீன தொழில்நுட்பம் ஒருவரின் உயிரை காப்பாற்றியுள்ளது. ஐபோனில் 14 மாடலில் உள்ள கிராஷ் டிடெக்ஷன் தொழில்நுட்ப வசதியானது நபர் ஒருவருக்குத் தனது மனைவி விபத்தில் சிக்கியதாகத் தகவல் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து சரியான நேரத்தில் அந்த நபர் விபத்து நடந்து பகுதிக்கு விரைந்ததால் மனைவி உயிர்பிழைத்தார்.

குறிப்பாக இதுபற்றிய தகவல் ரெடிட் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதாவது கடைவீதிக்குச் சென்றிருந்த மனைவி, காரில் வீடு திரும்பிக் கொண்டிந்த போது தனது கணவருடன் போனில் பேசிக் கொண்டே வந்திருக்கிறார். அந்த சமயம் கார் தீடிரென விபத்தில் சிக்கி இருக்கிறது. குறிப்பாக போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி விபத்தி சிக்கியதால் அலறி இருக்கிறார். அப்போதே அவரின் போன் இணைப்பு கூட துண்டிக்கப்பட்டு விட்டது.
மேலும் போன் அழைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சில நொடிகளில் கணவருக்கு மனைவியின் ஐபோனில் இருந்து நோட்டிஃபிகேஷன் ஒன்று வந்துள்ளது. பின்பு அவருக்கு வந்த நோட்டிஃபிகேஷனில் மனைவி இருக்கும் இடத்தின் சரியான லொகேஷன் இடம்பெற்றிருந்து என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த நோட்டிஃபிகேஷனை பார்த்து விபத்து பகுதிக்குக் கணவர் விரைந்து சென்றிருக்கிறார்.
குறிப்பாக ஆம்புலன்ஸ் வரும் முன்பே அந்த விபத்து நடந்த இடத்திற்குக் கணவர் விரைந்து சென்றிருக்கிறார். அதேபோல் கிராஷ் டிடெக்ஷன் தொழில்நுட்ப வசதியானது எமர்ஜன்சி SOS மூலம் முதலில் தொடர்பு கொள்ளப்பட வேண்டியவருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்பிள் ஐபோன் பயனர்கள் ஹெல்த் ஆப்-க்குள் எமர்ஜன்சி காண்டாக்ட்களை சேர்க்க முடியும்.

குறிப்பாக ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா, ஆப்பிள் வாட் சீரிஸ் 8 போன்ற சாதனங்களில் கிராஷ் டிடெக்ஷன் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த சென்சார்கள் சாதனத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களை கொண்டு பயனருக்கு ஏற்படும் ஆபத்துகளைக் கண்டறிந்து செயல்படுகிறது என்பது தான் உண்மை. அதேபோல் ஆப்பிள் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் தற்போது சீனாவில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் அங்கு ஐபோன் உற்பத்தியானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது உலகம் முழுக்க பற்றாக்குறையைத் தூண்டியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியில் பாதிக்கும் மேல் சீனாவில் செய்யப்பட்டு வந்தது. தற்போது சீனாவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்ற நிலையில் தான் இந்தியாவில் தனது உற்பத்தியினை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் சீரிஸ் 14ஐ இந்தியாவில் உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தமிழக மக்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியைக் கூறியுள்ளது. அதாவது தமிழகத்தின் ஓசூர் அருகில் பிரம்மாண்ட ஆலை அமையவுள்ளதாகவும், இதன் மூலம் 60,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக ஓசூர் அருகில் மிகப்பெரிய ஐபோன்கள் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு மொத்தம் 60,000 பணியமர்த்தப்படவுள்ளனர். இதில் முதல் 6000 பணியாளர்கள் ராஞ்சி மற்றும் ஹஜாரிபாக் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஆவார்கள். இவர்களுக்கு இதற்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் தெரிவித்தார்அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். குறிப்பாக ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான பணியை, டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த ஆலை தான் ஓசூரில் உள்ளது. அதேபோல் இந்தியாவில் ஏற்கனவே ஐபோன் உற்பத்தியானது விஸ்ட்ரான், பாக்ஸ்கான், பெகட்ரான் நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470