ஆண்ட்ராய்டு போன் விலையில் iPhone 14 வாங்கலாம்: 2023ஐ ஐபோன் உடன் தொடங்குவோம்!

|

விஜய் சேல்ஸ் தளத்தில் புதிய ஆப்பிள் டேஸ் விற்பனை நடந்து வருகிறது. நீங்கள் ப்ரீமியம் ஆண்ட்ராய்டு போனை வாங்கும் விலைக்கு புதிய iPhone 14 மாடலை வாங்கலாம்.

ஆப்பிள் டேஸ் விற்பனை

ஆப்பிள் டேஸ் விற்பனை

ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை பல்வேறு விலைப் பிரிவில் அறிமுகம் செய்து வருகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பல இ-காமர்ஸ் வலைதளங்கள் ஆப்பிள் டேஸ் விற்பனை நடத்தத் தொடங்கி இருக்கிறது.

விஜய் சேல்ஸ் விற்பனை

விஜய் சேல்ஸ் விற்பனை

ஆப்பிள் தயாரிப்புகளுக்கான விற்பனையை பிளிப்கார்ட் தொடங்கி நடத்தி வரும் அதே வேலையில் விஜய் சேல்ஸ்-ம் தற்போது இதுபோன்ற விற்பனையை அறிவித்திருக்கிறது. இதில் ஐபோன்கள், மேக்புக்ஸ் மற்றும் பிற ஆப்பிள் சாதனங்களில் தள்ளுபடி வழங்கப்பட்டிகிறது. தள்ளுபடியில் விலையில் ஐபோன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

கூடுதல் தள்ளுபடி விவரங்கள்

கூடுதல் தள்ளுபடி விவரங்கள்

ஐபோன் 13, ஐபோன் 14 உள்ளிட்ட பிற ஐபோன்களும் விஜய் விற்பனையில் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த விற்பனையில் ஐபோன் 14 இன் விலை ஆனது ரூ.74,900 என தொடங்குகிறது. இதன் அசல் விலை ரூ.79,900 ஆகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. ஐபோன் 14 ப்ளஸ் மாடலை விஜய் சேல்ஸ் தளத்தில் ரூ.83,699 என வாங்கலாம். இரண்டு ஐபோன்களையும் HDFC வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.5000 தள்ளுபடி கிடைக்கிறது.

ரூ.11,201 வரை தள்ளுபடி

ரூ.11,201 வரை தள்ளுபடி

இதன்மூலம் நீங்கள் ஐபோன் 14ஐ ரூ.69,900க்கும் ஐபோன் 14 ப்ளஸை ரூ.78,699க்கும் வாங்கலாம். வங்கி சலுகைகளுடன் ஐபோன் 14 ப்ளஸ் மாடலை ரூ.11,201 என்ற தள்ளுபடியுடன் வாங்கலாம். அதேபோல் ஐபோன் 14 மாடலை ரூ.10,000 தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த விலையில் தான் சாம்சங், ஒன்பிளஸ், சியோமி போன்கள் கிடைக்கிறது. ஐபோன் 14 ப்ளஸ் மாடலானது இந்தியாவில் ரூ.89,900 என அறிமுகம் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இரண்டு மாடல்களுக்கு தள்ளுபடி கிடையாது

இரண்டு மாடல்களுக்கு தள்ளுபடி கிடையாது

ஐபோன் 14 சீரிஸ் இல் இருக்கும் பிற மாடல்களுக்கு கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்து பார்க்கலாம். ஐபோன் 14 சீரிஸ் இல் மற்ற இரண்டு மாடல்களாக ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் இருக்கிறது. ஐபோன் 14 ப்ரோ விஜய் விற்பனையில் ரூ.1,26,100க்கு பட்டியலிடப்பட்டுள்ளது, அதேபோல் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆனது ரூ.1,35,800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல் ஐபோன்களுக்கும் விஜய் சேல்ஸ் தளத்தில் தள்ளுபடிகள் வழங்கப்படவில்லை.

ரூ.3000 உடனடி தள்ளுபடி

ரூ.3000 உடனடி தள்ளுபடி

அதேபோல் பிற மாடல் ஆப்பிள் ஐபோன்கள் குறித்து பார்க்கையில், ஐபோன் 12 ஆனது ரூ.55,900 என விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஐபோன் 13 ஆனது ரூ.65,900 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாடல் ஐபோன்களுக்கு உடனடி வங்கித் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அதாவது HDFC வங்கி கார்டுகள் மூலம் இந்த மாடல் ஐபோன்களை வாங்கினால் ரூ.3000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.

iPhone 14 முக்கிய அம்சங்கள்

iPhone 14 முக்கிய அம்சங்கள்

ஐபோன் 14 இன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த மாடல் ஐபோனில் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் இருக்கிறது. அதாவது 12 எம்பி + 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் இதில் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல் இந்த ஐபோனில் 12 எம்பி ட்ரூடெப்த் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. A15 பயோனிக் சிப்செட் மூலம் இந்த ஐபோன் இயக்கப்படுகிறது. 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு இதில் இருக்கிறது.

iPhone 14 Pro முக்கிய அம்சங்கள்

iPhone 14 Pro முக்கிய அம்சங்கள்

iPhone 14 Pro முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ரோமோஷன் டெக்னாலஜி ஆதரவுடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் இதில் உள்ளது. 48 எம்பி + 12 எம்பி அல்ட்ரா வைட் + 12 எம்பி டெலிபோட்டோ சென்சார் என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இருக்கிறது. 12 எம்பி ட்ரூடெப்த் செல்பி கேமரா உள்ளது. A16 பயோனிக் சிப்செட் மூலம் இந்த ஐபோன் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iPhone 14 Available at Android Phone Price: Apple iPhone Gets Huge Discount on Vijay Sales

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X