அடடா! என்ன ஷேப்பு என்ன கலரு.. கண்ணுல ஒத்திக்கலாம் போலயே! புது பர்பிள் பியூட்டி iPhone 14 விலை என்ன?

|

ஆப்பிள் நிறுவனத்தின் தீவிரமான ரசிகரா நீங்கள்? அல்லது ஆப்பிள் ஐபோன்களின் மீது எப்போது உங்களுக்கு ஒரு கண் இருக்கிறதா? அவற்றின் விபரங்களை சைலெண்டாக ரசித்து வரும் மறைமுக ரசிகரா நீங்கள்? அப்போ, இந்த பதிவு உங்களுக்கான விருந்தாக அமையப்போகிறது. ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டு அறிமுகம் செய்யவிருக்கும் iPhone 14 இன் மூலம் அதன் ரசிகர்களுக்கு ஒரு மிகப் பெரிய ட்ரீட்டை வழங்கவிருக்கிறது.

iPhone 14 வரிசையில் இம்முறை என்னென்ன மாடல்கள் எதிர்பார்க்கப்படுகிறது?

iPhone 14 வரிசையில் இம்முறை என்னென்ன மாடல்கள் எதிர்பார்க்கப்படுகிறது?

ஆம், Apple நிறுவனம் அதன் ஐபோன் சீரிஸ் வரிசையில் அடுத்த மாதம் களமிறக்கத் தயாராக இருக்கும் புதிய ஐபோன் சீரிஸ் மாடல் தான் இந்த 'ஐபோன் 14' (iPhone 14). இந்த வரிசையில், ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்த ஆண்டிற்கான புதிய Apple iPhone 14 தொடர் மாடல்களை நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 14 மாடல்கள் இம்முறை பர்பிள் பியூட்டி நிறத்தை பெறுகிறதா?

ஆப்பிள் ஐபோன் 14 மாடல்கள் இம்முறை பர்பிள் பியூட்டி நிறத்தை பெறுகிறதா?

ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ டிவைஸ் பற்றிய கலர் விருப்பங்கள் ஆன்லைனில் லீக் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 14 மாடல் இந்த முறை ஆறு வண்ண விருப்பங்களுடன் வரும் என்றும், ஐபோன் 14 ப்ரோ மாடல் ஐந்து வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் ஒரு டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இந்த வெவ்வேறு நிறங்களில் ஒன்று 'பர்பிள்' (Purple) நிறமாக இருக்கும் என்றும் அந்த டிப்ஸ்டர் தெரிவித்திருக்கிறார்.

புதிய ஐபோன் 14 மாடல்களில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

புதிய ஐபோன் 14 மாடல்களில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

வரவிருக்கும் புதிய ஐபோன் 14 தொடர் 30W வயர்டு சார்ஜிங்குடன் வரும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த புதிய ஐபோன் 14 மாடல் சாதனங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய A16 பயோனிக் சிப்செட் உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த ஐபோனில் இருக்கும் ஹீட் மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே, ஐபோனில் பயன்படுத்தப்படும் பொருட்கள், Face ID தொழில்நுட்பம், Gorilla Glass Victus மற்றும் MagSafe பேட்டரி பற்றிய குறிப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளது.

காதலிக்காக 7 Smartphone உடன் லேடீஸ் பாத்ரூமிற்குள் பதுங்கிய காதலன்.. டிவிஸ்ட் 'இங்க' தான் இருந்துச்சா?காதலிக்காக 7 Smartphone உடன் லேடீஸ் பாத்ரூமிற்குள் பதுங்கிய காதலன்.. டிவிஸ்ட் 'இங்க' தான் இருந்துச்சா?

ஐபோன் 14 வரிசையில் எந்தெந்த மாடல்களில் இந்த நிறம் கிடைக்கும்?

ஐபோன் 14 வரிசையில் எந்தெந்த மாடல்களில் இந்த நிறம் கிடைக்கும்?

டிப்ஸ்டர் ஜியோரிகு வெளியிட்ட அறிவிப்பின் படி, ஐபோன் 14 ப்ளாக், ப்ளூ, பர்பிள், ரெட் மற்றும் வைட் வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன் வெளிவந்த ஐபோன் 13 இன் பிங்க் நிறம் இப்போது ஐபோன் 14 வரிசையில் பர்பிள் நிறமாக மாற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதேபோல் ஐபோன் 14 ப்ரோவைப் பொறுத்தவரை, இந்த போன் கோல்டு, கிராஃபைட், க்ரீன், பர்பிள் மற்றும் வைட் வண்ண விருப்பங்களில் வரும் என்றும் கூறியிருக்கிறார்.

ஐபோன் 14 சீரிஸ் பற்றிய லீக் தகவல் என்ன சொல்கிறது?

ஐபோன் 14 சீரிஸ் பற்றிய லீக் தகவல் என்ன சொல்கிறது?

இதற்கு முன் வந்த ஐபோன் 13 ப்ரோ மாடலில் வழங்கப்பட சியரா ப்ளூவின் இடத்தை நிறுவனம் பர்பிள் நிறம் கொண்டு ஐபோன் 14 மாடலில் மாற்றியுள்ளது. ஐபோன் ப்ரோ மாடலின் பர்பிள் வண்ண விருப்பமும் முன்பு கிராஃபிக் டிசைனர் இயன் ஜெல்போ (@ianzelbo) என்பவரால் யூடியூபில் ஃப்ரண்ட் பேஜ் டெக் சேனலின் ஜான் ப்ரோஸ்ஸர் (@jon_prosser) உடன் இணைந்து டிப் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. கடந்த காலங்களில் ஏற்கனவே கசிந்த தகவல்கள் ஐபோன் 14 சீரிஸ் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

ஐபோன் 14 இன் பஞ்ச் ஹோல் கட் அவுட் வித்தியாசமா இருக்கே!

ஐபோன் 14 இன் பஞ்ச் ஹோல் கட் அவுட் வித்தியாசமா இருக்கே!

ஆப்பிளின் புதிய ஐபோன் 14 மாடல்கள் 30W சார்ஜிங்கிற்கான ஆதரவைப் பெறும் என்று டிப்ஸ்டர் கூறுகிறார். கடந்த ஆண்டு இருந்த அதே பாடி வடிவமைப்பு, ஸ்டோரேஜ் விருப்பங்கள், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு மற்றும் பெரிய மற்றும் கனமான MagSafe பேட்டரி போன்றவற்றை நாம் இந்த புதிய மாடலிலும் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. ஐபோன் 14 தொடரின் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே பேனல்கள் பற்றியும் டிப்ஸ்டர் பேசுகிறார். ஐபோன் 14 இன் பஞ்ச் ஹோல் கட் அவுட்கள் "எதிர்பார்த்தது போல் வித்தியாசமாகத் தெரிகிறது'', என்று அவர் கூறியிருக்கிறார்.

A16 Bionic சிப்செட் எவ்வளவு சக்தி வாய்ந்தது?

A16 Bionic சிப்செட் எவ்வளவு சக்தி வாய்ந்தது?

வரவிருக்கும் புதிய ஐபோன்களில் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே அம்சம் எதிர்பார்க்கப்படுகிறது. A15 பயோனிக் சிப் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அதே 5nm உற்பத்தி செயல்முறையைப் பயன்படுத்தும் A16 Bionic சிப்செட் பற்றிய சில குறிப்புகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது. Ming-Chi Kuo என்ற ஆய்வாளரின் கூற்றுப்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட A16 சிப்செட்கள், தற்போதுள்ள A15 Bonic ஐ விட அதிக செயல்திறன் ஊக்கத்தை வழங்கும் என்று அவர் நம்பிக்கை கூறியுள்ளார்.

Jio தனது 5G சேவையை August 15 ஆம் தேதி துவங்குகிறதா? 10 நாளில் இது சாத்தியமா? மிரட்டும் ஜியோ!Jio தனது 5G சேவையை August 15 ஆம் தேதி துவங்குகிறதா? 10 நாளில் இது சாத்தியமா? மிரட்டும் ஜியோ!

 iPhone 14 இன் விலை என்ன?

iPhone 14 இன் விலை என்ன?

சமீபத்திய அறிக்கையின் படி, iPhone 14 இன் விலை $799 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 63,200 என்ற விலையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது iPhone 13 அறிமுகமான அதே விலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி ஐபோன் 14 தொடர் வெளியீட்டு நிகழ்வை நடத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 உள்ளிட்ட பிற சாதனங்களின் வெளியீட்டையும் நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
iPhone 14 and iPhone 14 Pro Tipped With Purple Colour Option Before Launch On September

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X