Home
News

மஞ்சள் iPhone 14-க்கு ஆரம்பத்திலேயே 7000 ஆயிரம் தள்ளுபடியா? எப்புட்றா? Flipkart-ல் அசத்தல் தள்ளுபடி!

தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கும் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. ஆண்டிற்கு ஒரு மாடல் என்று ஆப்பிள் வெளியிட்டாலும் காத்திருந்து அதனை வாங்குவதற்கு என்றே ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த வகையில் ஆப்பிளின் சமீபத்திய அறிமுகமான ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் மிட்நைட் (Midnight), ஸ்டார்லைட் (Starlight), சிவப்பு, நீலம், பர்பிள் என்ற ஐந்து விதமான நிறங்களில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மஞ்சள் iPhone 14-க்கு ஆரம்பத்திலேயே 7000 ஆயிரம் தள்ளுபடியா? எப்புட்றா?

ஐந்து நிற வேரியண்டுகளுடன் சேர்த்து புதிதாக மஞ்சள் நிற வேரியண்டும் இந்த வரிசையில் இப்போது சேர்ந்துள்ளது. சென்ற வாரம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மஞ்சள் நிற ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு மார்ச் 10ஆம் தேதி ஆரம்பமானது. புதிய ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் 5 கோர் GPUவுடன் சேர்ந்த ஏ15 பயானிக் சிப்செட் (A15 Bionic) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய மஞ்சள் நிற ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ் ஸ்மார்ட்போன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் (Apple Online Store) மற்றும் ப்ளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனை செய்யப்பட்டுகிறது. புதிய அறிமுகமான மஞ்சள் நிற ஐபோன் மற்ற நிற வேரியண்ட்களின் விலையிலேயே விற்கப்படுகிறது. ஐபோன் 14 ரூ. 79,900 என்ற ஆரம்ப விலைக்கும் ஐபோன் 14 ப்ளஸ் ரூ. 89,900 என்ற ஆரம்ப விலைக்கும் விற்கப்படுகிறது.

ஆப்பிளின் பிரத்யேக இணையதளத்தில் இந்த புதிய மஞ்சள் நிற ஐபோன் 14 சீரிஸை பழைய ஐபோனிற்கு எக்ஸ்சேஞ்ச் (Exchange) செய்து வாங்கும்போது சுமார் 57,800 ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மேலும் ஆப்பிளின் பிரத்யேக இணையதளத்தில் மஞ்சள் நிற ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ் ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முன்னணி வங்கிகளில் EMI வசதியும் அளிக்கப்படுகிறது.

ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இந்த புதிய மஞ்சள் நிற ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ் வாங்கும்போது 8% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் எக்ஸ்சேஞ்ச் மூலம் இந்த ஐபோன் வேரியண்டுகளை வாங்குபவர்களுக்கு 20,000 ரூபாய் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

மஞ்சள் iPhone 14-க்கு ஆரம்பத்திலேயே 7000 ஆயிரம் தள்ளுபடியா? எப்புட்றா?

ப்ளிப்கார்ட் இணையதளத்தில் புதிய மஞ்சள் ஐபோன் 14 வேரியண்டுகள் வாங்குபவர்களில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்டு (American Express Credit Card) மூலம் EMI செலுத்துபவர்களுக்கு 10% தள்ளுபடியும், ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டு (Axis Bank Card) மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு 5% கேஷ்பேக்கும் (Cashback) வழங்கப்படுகிறது.

128GB, 256 GB, 512GB என்று மூன்று விதமான ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்ட்களில் வரும் ஐபோன் 14, 6.1 இன்ச் திரையளவும், ஐபோன் 14 ப்ளஸ் 6.7 இன்ச் திரையளவும் கொண்ட சூப்பர் ரெடினா (Super Retina) XDR OLED டிஸ்ப்ளேயுடன் வருகிறது. மேலும், வைட் கலர் கேமெட் (Wide Colour Gamut), 60Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate), HDR, 1200 நிட்ஸ் பிரைட்னஸ் உடன் வருகிறது.

இது ட்ரு டோன் ரெகுலர் நாட்ச் (True Tone Regular notch), முன்பக்க கேமரா, பேஸ்ஐடி சென்சார் (FaceID Sensor) என்று பல சிறப்பான அம்சங்களுடன் வருகிறது. சமீபத்தில் வெளியான ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 5 கோர் GPU கிராபிக்ஸ் மற்றும் 16 கோர் NPU-வுடன் சேர்ந்த ஏ15 பயானிக் சிப்செட் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஐபோன் 14 வேரியண்டுகளும் 4 GB RAM மற்றும் 512GB வரையான சேமிப்பு அம்சம் கொண்டுள்ளது. இத்துடன் சேர்த்து 5G கனெக்டிவிட்டி (Connectivity), வை-ஃபை (Wi-Fi), டுவல் சிம் (Dual Sim), ப்ளூடூத், GPS மற்றும் சார்ஜிங் செய்வதற்கு லைட்னிங் போர்ட் (Lightning port) ஆகியவை உள்ளன.

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ்-ன் ஆப்டிக்ஸ்-ஐ (Optics) பொறுத்தவரை f/1.5 அப்பர்சர் (Aperture), சென்சார் ஷிப்ட் (Sensor shift) கொண்ட 12 MP வைட் ஆங்கிள் பிரைமரி சென்சார் (Wide Angle primary sensor) மற்றும் 12 MP செகண்டரி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் (Secondary Wide Angle Lens) என்று இரண்டு பின்பக்க கேமராக்களைக் கொண்டுள்ளது.

செல்ஃபி (Selfie) மற்றும் வீடியோ சாட்கள் (Video Chat) செய்வதற்கு ஏதுவாக ஆட்டோ ஃபோக்கஸ் (Auto focus) அம்சம் கொண்ட 12 MP ஸ்னாப்பர் கேமராவும் (Snapper Camera) இடம்பெற்றுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 14 and iPhone 14 Plus Yellow Variant Gets Rs 7000 Offer On Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X