Home
News

மஞ்சள் நிறமே.. மஞ்சள் நிறமே.. கிறங்கவிடும் புது நிறத்தில் iPhone 14 & iPhone 14 Plus! விலையில் மாற்றமா?

ஆப்பிள் தனது ஐபோன் 14 சீரிஸ் மாடலை கடந்த ஆண்டு வெளியிட்டது. இப்போது Apple நிறுவனம் ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடல்களில் புதிய மஞ்சள் நிற மாறுபாட்டை அறிமுகம் செய்துள்ளது.

மஞ்சள் நிறமே.. மஞ்சம் நிறமே என்று வர்ணித்துப் பாடும் படி, இந்த புதிய ஐபோன் 14 எல்லோவ் கலர் வேரியண்ட் மாடல் கவர்ச்சிகரமாகக் கண்களைப் பறிக்கிறது. எலுமிச்சம்பழம் நிறத்தில் கிறங்கவிடும் இந்த புதிய iPhone 14 மற்றும் iPhone 14 Plus மாடலில் இந்த புதிய நிறத்தைத் தவிர வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வேரியண்ட் நிறத்திற்குக் கூடுதல் பைசா வசூலிக்கப்படுகிறதா என்று தெரிந்துகொள்ளலாமா?

மஞ்சள் நிறமே.. மஞ்சள் நிறமே.. கிறங்கவிடும் புது நிறத்தில் iPhone 14!

மஞ்சள் நிறமே.. மஞ்சள் நிறமே.. கண்களை கவர்ந்திழுக்கும் புது iPhone 14 மாடல்.!

இந்த புதிய மஞ்சள் நிறம் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய மஞ்சள் வண்ண விருப்பம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் வழக்கமாகத் தனது ஐபோன் தொடரில் ஒரு புதிய வண்ணத்தை லேட்டாக அறிமுகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

உதாரணமாக, ஐபோன் 13 மற்றும் 13 ப்ரோ ஒரு வருடத்திற்கு முன்பு புதிய வண்ணங்களைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐபோன் 12 வரிசை அதற்கு முந்தைய ஆண்டு புதிய வண்ண விருப்பத்தைப் பெற்றது. ஐபோன் 14 ப்ரோ அல்லாத மாடல்களுக்கு ஆப்பிள் புதிய மஞ்சள் வண்ண விருப்பத்தை அறிமுகப்படுத்துவதாக இதற்கு முன்பே நாம் சில தகவல்கள் மூலம் அறிந்திருந்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் நிறமே.. மஞ்சள் நிறமே.. கிறங்கவிடும் புது நிறத்தில் iPhone 14!

மஞ்சள் நிற iPhone 14 மற்றும் iPhone 14 Plus மாடலின் விலையில் மாற்றம் உள்ளதா?

முன்னதாக, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்கள் ப்ளூ, மிட்நைட், பர்ப்பில், ஸ்டார்லைட் மற்றும் ரெட் ஆகிய ஐந்து வெவ்வேறு வண்ணங்களில் கிடைத்தன. இருப்பினும், மஞ்சள் வண்ண விருப்பத்தின் புதிய சேர்க்கை இதன் வரம்பை இப்போது விரிவுபடுத்தியுள்ளது. இவை 128GB, 256GB மற்றும் 512GB என்ற 3 ஸ்டோரேஜ் மாடலுடன் வருகின்றன.

இந்தியாவில், iPhone 14 இன் அடிப்படை மாடலின் ஆரம்ப விலை ரூ. 79,900 ஆக இருக்கிறது. ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் சாதனத்தின் ஆரம்ப விலை ரூ. 89,900 ஆக இருக்கிறது. மஞ்சள் நிற வேரியண்ட் மாடலும் இதே விலையில் வருகிறது. விலையி எந்தவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் முறையே 6.1' இன்ச் மற்றும் 6.7' இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

மஞ்சள் நிறமே.. மஞ்சள் நிறமே.. கிறங்கவிடும் புது நிறத்தில் iPhone 14!

iPhone 14 மற்றும் iPhone 14 Plus பேட்டரி ஆயுள் எவ்வளவு? எது அதிக ஆயுளை கொண்டது தெரியுமா?

இரண்டு சாதனங்களும் ஆப்பிளின் சக்திவாய்ந்த A15 பயோனிக் சிப்செட்டுடன் இயங்குகிறது. இவை சமீபத்திய iOS 16 இல் இயங்குகின்றது. கேமரா விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, iPhone 14 மற்றும் 14 Plus ஆனது 12 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவை உள்ளடக்கிய இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, இரண்டு மாடல்களிலும் 12 மெகாபிக்சல் TrueDepth கேமராவை கொண்டுள்ளது.

இந்த TrueDepth கேமராவின் குறைந்த-ஒளி செயல்திறன் இரண்டு மடங்கு மேம்பட்டுள்ளது. பிரதான கேமராவின் குறைந்த-ஒளி செயல்திறன், மறுபுறம், 2.5 மடங்கு வரை மேம்பட்டதாகக் கூறப்படுகிறது. கூடுதலாக, ஆப்பிள் ட்ரூ டோன் ஃபிளாஷ் அம்சமும் இந்த ஐபோன் 14 வரிசையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இதன் திறன் 10 சதவீதம் பிரகாசமாக உள்ளது என்று கூறியுள்ளது.

ஐபோன் 14 மற்றும் 14 பிளஸ் மாடல்களின் பேட்டரி விவரக்குறிப்புகளை ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அடிப்படை மாடல் 20 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் நேரத்தை வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. அதே நேரத்தில் பிளஸ் மாடல் வீடியோ பிளேபேக் நேரத்தை வழங்க முடியும் 26 மணி நேரம் வரை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 14 and iPhone 14 Plus launched in a new stunning yellow colour
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X