இனி நாமும் iPhone ஓனர் தான்- ரூ.50,000 வரை குறையும் ஐபோன் 13 விலை..

|

ஐபோன் 14 இன்னும் ஒரு நாளில் அறிமுகமாக இருக்கிறது. இந்த நிலையில் ஐபோன் 13 குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீப காலமாக சில ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஐபோன் 13க்கு தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. ஆனால் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு உண்மையில் தலை சுத்த வைக்கும் வகையில் இருக்கிறது.

கேட்ஜெட்களுக்கு அதீத சலுகைகள்

கேட்ஜெட்களுக்கு அதீத சலுகைகள்

ஆன்லைன் விற்பனை தளங்களில் மிகவும் பிரதானமாக இருப்பது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகும். இரண்டு தளங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகை தினங்களை அவ்வப்போது அறிவிப்பது வழக்கம்.

இந்த நிலையில், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்கள் ஒரே தினங்களில் சலுகைகளை அறிவிக்க இருக்கிறது. இந்த தினங்களில் பல்வேறு கேட்ஜெட்களும் அதீத சலுகையுடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெகா பண்டிகை விற்பனை

மெகா பண்டிகை விற்பனை

இ-காமர்ஸ் ஜாம்பவான்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இம்மாத இறுதிக்குள் மெகா பண்டிகை விற்பனையை நடத்த உள்ளன.

அதாவது பிளிப்கார்ட் பிக் மில்லின் தின விற்பனையானது செப்டம்பர் 23 ஆம் தேதி நேரலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே தினத்தில் அமேசானும் சலுகை தின விற்பனை அறிவிக்க இருக்கிறதுஎன தகவல் வெளியாகி இருக்கிறது.

அதீத தள்ளுபடியுடன் ஐபோன் 13

அதீத தள்ளுபடியுடன் ஐபோன் 13

ஐபோன் 14 இன்னும் ஒரு நாளில் அறிமுகமாக இருக்கிறது. இந்த மாடல் பல்வேறு மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி வருகிறது.இதன் விலையும் அதிகமாகவே இருக்கும் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஐபோன் வாங்க வேண்டும் என்று ஆசை.. ஆனால் ஒவ்வொரு மாடல் விலையும் அதிகமாகவே இருக்கிறது என்று சிந்திப்பவராக நீங்கள் இருந்தால். உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு இருக்கிறது. ஐபோன் 13 அதீத தள்ளுபடியுடன் கிடைக்கப் போகிறது.

ரூ.50,000க்குள் ஐபோன் 13

ரூ.50,000க்குள் ஐபோன் 13

மிகவும் சமீபத்திய மாடலாக இன்று வரை இருப்பது ஐபோன் 13 தான். இந்த ஐபோன் 13 மாடல் ரூ.50,000க்குள் கிடைக்கப் போகிறது என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், இதுகுறித்து வெளியான தகவலை விரிவாக பார்க்கலாம் வாங்க. Flipkart மற்றும் Amazon நிகழ்வுகளில் iPhone 13 இன் விலை ரூ.50,000க்குள் இருக்கும் என கூறப்படுகிறது.

மலிவு விலையில் கிடைக்கும் ஐபோன் 13

மலிவு விலையில் கிடைக்கும் ஐபோன் 13

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஒரே காலக்கட்டத்தில் தள்ளுபடி தினங்களை அறிவிக்க இருக்கிறது.

இந்த காலக்கட்டத்தில் தான் ஐபோன் 13 மலிவு விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் விற்பனையின் போது ஐபோன் 13 இன் விலை ரூ.53,000 ஆக குறையும் என கூறப்பட்டுள்ளது.

இதில் வங்கிச் சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் என அனைத்தையும் உட்படுத்தி பார்த்தால் ஐபோன் 13 ரூ.49,000 விலையில் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இந்தளவு தள்ளுபடியை வழங்குமா?

இருப்பினும் தற்போது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இந்த அளவிலான தள்ளுபடியை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழங்குமா என்பது விற்பனை நேரலைக்கு வரும் வரை காத்திருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

ரூ.50,000க்கு கீழ் எப்படி சாத்தியம்?

ரூ.50,000க்கு கீழ் எப்படி சாத்தியம்?

தற்போது ஐபோன் 13 பிளிப்கார்ட்டில் ரூ.69,999 என பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதேபோல் இதன் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.79,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ரூ.50,000க்கு கீழ் எப்படி தள்ளுபடி வழங்கப்படும் என பார்க்கலாம்.

எச்டிஎஃப்சி கிரெடிட் கார்ட் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கு ரூ.2000 தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் பழைய சாதனத்துக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.19,999 வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் ஐபோன் 13 விலை ரூ.50,000 க்கு கீழ் குறையும் என எதிர்பார்க்ப்படுகிறது.

ஐபோன் 13 வாங்க விருப்பமா?

ஐபோன் 13 வாங்க விருப்பமா?

ரூ.19,999 வரை என்பது எக்ஸ்சேஞ்ச் செய்யும் சாதனத்தின் தன்மையை பொறுத்தது. நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் மாடல் ஐபோன் 11 அல்லது ஐபோன் 12 ஆக இருந்தால் சிறந்த விலை சலுகை கிடைக்கும்.

இவை அனைத்தும் தகவலே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நல்ல சலுகை விலையில் ஐபோன் 13 வாங்க விருப்பம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
iPhone 13 will get huge discounts in Flipkart and Amazon festival sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X