அதிரடி விலை குறைப்பு.! இனி எல்லாரும் iPhone 13 வாங்கலாம் போலயே.!

|

ஆப்பிள் ஐபோன் 13 (iPhone 13) இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் போன்களில் ஒன்றாகும். சமீபத்தில், நிறுவனம் ஐபோன் 14 மாடலை அறிமுகம் செய்து, விற்பனை செய்து வந்தாலும், மக்கள் இன்னும் ஐபோன் 13 டிவைஸை வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதற்கான முக்கிய காரணம், Amazon மற்றும் Flipkart போன்ற தளங்களில் ஏராளமான சலுகைகள் மற்றும் தள்ளுபடியை நிறுவனங்கள் அறிவித்தன.

சிறப்பு விற்பனை ஓய்ந்த பிறகும் சிறப்பு சலுகையா?

சிறப்பு விற்பனை ஓய்ந்த பிறகும் சிறப்பு சலுகையா?

இப்போது இரண்டு தளங்களிலும் சிறப்பு விற்பனைகள் ஓய்ந்த பிறகு, இன்னும் ஒரு தளத்தில் மிகவும் குறைந்த விலையில் ஐபோன் 13 மாடல்கள் வாங்க கிடைக்கிறது.

சமீபத்தில், நடைபெற்ற பிளிப்கார்ட் மற்றும் அமேசான் பெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையின் போது பயனர்கள் ஐபோன் 13 தொடர் சாதனங்களை வாங்க ஆக்ரோஷமாகச் சென்றனர் என்பதே உண்மை.

ஐபோன் 13 (iPhone 13 Sale) விற்பனையின் போது பெரும் தள்ளுபடியில் கிடைத்ததே இதற்கான காரணம்.

ஐபோன் 13 சீரிஸ் இப்போது என்ன விலையில் கிடைக்கிறது?

ஐபோன் 13 சீரிஸ் இப்போது என்ன விலையில் கிடைக்கிறது?

ஆனால் இப்போதும், விற்பனை முடிந்ததும், நீங்கள் அதை அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்கு பிளிப்கார்ட் மற்றும் அமேசான் விலைகள் மாறியுள்ளன.

ஐபோன் 13 சீரிஸ் இப்போது ஆப்பிள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.69,900 விலை முதல் கிடைக்கிறது. ஐபோன் 13 மினி, மறுபுறம், ரூ.64,900 விலையில் தொடங்குகிறது.

இரண்டும் 128ஜிபி வேரியண்ட் மாடல்களின் விலையாகும். நீங்கள் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து வாங்கினால், தனித்தனி முறையில் சிறந்த ஒப்பந்தங்களை பெறலாம்.

இப்படி செஞ்சா ரூ.8000 விலையில் 32இப்படி செஞ்சா ரூ.8000 விலையில் 32" இன்ச் Smart TV வாங்கலாம்.! இது தான் லாஸ்ட் சான்ஸ்.!

இந்த தளத்தில் மட்டும் பெஸ்ட் ரேட்டில் ஐபோன் 13.!

இந்த தளத்தில் மட்டும் பெஸ்ட் ரேட்டில் ஐபோன் 13.!

ஐபோன் 13 தொடர் பல்வேறு தளங்களில் வெவ்வேறு விலைகளில் கிடைக்கிறது. சிறந்த விலையில் என்று பார்க்கையில், இது தற்போது குரோமா (Croma) கிடைக்கிறது.

குரோமா என்பது டாடா குழுமத்திற்குச் சொந்தமான எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்கள் வழியாக விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. ஐபோன் 13 குரோமாவில் ரூ.64,990க்கு கிடைக்கிறது.

இப்படி செய்தால் ஐபோன் 13 விலை இன்னும் குறையும்.!

இப்படி செய்தால் ஐபோன் 13 விலை இன்னும் குறையும்.!

நாம் பேசும் மாடல் 128 ஜிபி வேரியண்ட் மாடல் ஆகும். இதற்கு மேல், நீங்கள் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் ஐபோன் 13 டிவைஸை பர்ச்சேஸ் செய்தால், பயனர்கள் ரூ.3,000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது.

இதன் மூலம் ஐபோன் 13 இன் விலை ரூ. 61,990 என்ற குறைந்த விலையில் வாங்கக் கிடைக்கிறது.

Yes பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஐபோன் 13 வாங்கும் பயனர்களுக்கு ரூ.750 வரை 10% கேஷ்பேக் (Cash Back) நன்மை கிடைக்கும் என்று குரோமா தளம் குறிப்பிடுகிறது.

Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?

இப்போது வாங்க கிடைக்கும் பெஸ்ட் ரேட் இது தான்.!

இப்போது வாங்க கிடைக்கும் பெஸ்ட் ரேட் இது தான்.!

ஐபோன் 13 ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.65,900 விலைக்கு வாங்க கிடைக்கிறது. அதே சமயம் பிளிப்கார்ட்டில் ரூ.66,990 என்ற விலைக்கு வாங்க கிடைக்கிறது.

ஐபோன் 13 ப்ரோ மாடல்கள் ஆப்பிள் மற்றும் அமேசான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.

இதில் சிறந்த சலுகையாக ரூ. 3,000 உடனடி தள்ளுபடியுடன், ஐபோனின் இறுதி விலை குரோமாவில் ரூ.61,990 ஆக குறைகிறது என்பது சிறந்த ஒப்பந்தமாக இருக்கிறது.

ஐபோன் 14 சீரிஸ் வருகைக்கு பிறகும் ஐபோன் 13 வாங்க சிறந்ததா?

ஐபோன் 14 சீரிஸ் வருகைக்கு பிறகும் ஐபோன் 13 வாங்க சிறந்ததா?

நீங்கள் நேரடியாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து ஸ்மார்ட்போனை வாங்கப் போகிறீர்கள் என்றால் நீங்கள் செலுத்த வேண்டிய விலையை விட இது மிகச் சிறந்த விலையாகும்.

EMI விருப்பத்துடன் மிகவும் குறைந்த இன்ஸ்டால்மெண்ட் தொகையில் கிடைப்பதனால் எல்லோரும் ஐபோன் 13 வாங்க கூடிய ஒரு சூழல் உருவாகியுள்ளது.

ஐபோன் 14 சீரிஸ் இப்போது இந்திய சந்தையில் கிடைத்தாலும், ஐபோன் 13 இன்னும் நல்ல முதன்மையாக உள்ளது.

ஐபோனின் ப்ரோ மாடல்களைத் தவிர, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 இல் எந்த பெரிய மாற்றங்களையும் நுகர்வோர் உண்மையில் காணவில்லை என்பதே உண்மையாகும்.

Best Mobiles in India

English summary
iPhone 13 Series Is Available On Croma Platform At Best Ever Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X