Home
News

இதுதான் லாஸ்ட் சான்ஸ்.. இனி கிடைக்காமல் போகலாம்.. ரூ.20000 பட்ஜெட்டுக்கு இறங்கி வந்த iPhone.. என்ன மாடல்?

பாதி பேர் ஆப்பிளின் புதிய ஐபோன் மாடல்களான ஐபோன் 15 சீரிஸின் அறிமுகத்திற்காக காத்து கிடக்கிறார்கள். மீதி பேர் அதே ஐபோன் 15 சீரீஸ் அறிமுகம் ஆனதும், பழைய ஐபோன்கள் மீது அறிவிக்கப்படும் பெரிய அளவிலான விலை குறைப்புகளுக்காக காத்து கிடக்கிறார்கள்.

அந்த பட்டியலில் நீங்களும் ஒருவரா? அதாவது ஐபோன் 15 சீரிஸின் கீழ் 4 புதிய மாடல்கள் அறிமுகமானதும் பழைய ஐபோன் 14 சீரீஸ், ஐபோன் 13 சீரீஸ் மீதான விலைகுறைப்புகளுக்காக காத்திருக்கிறீர்களா? ஆம் என்றால்.. பிளிப்கார்ட் வழியாக ஐபோன் 13 மினி மீது அறிவிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சலுகையை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரூ.20000 பட்ஜெட்டுக்கு இறங்கி வந்த iPhone.. என்ன மாடல்?

ஏனென்றால் ஆப்பிள் ஐபோன் 15 சீரீஸின் வெளியீட்டிற்கு பிறகு ஆப்பிள் நிறுவனமானது ஐபோன் 13 மினி (iPhone 13 Mini) மாடலின் விற்பனையை நிறுத்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 13 மினி என்பது ஆப்பிளின் இரண்டாம் தலைமுறை மினி ஐபோன் மாடலாகும்.

ஆப்பிளின் மினி மாடல்கள் ஆனது எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெற தவறியதால் ஆப்பிள் நிறுவனம் மினி மாடல்களை தயாரிப்பதை நிறுத்தியது. இதன் விளைவாகவே ஐபோன் 14 சீரீஸின் கீழ் மினி மாடல் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை; மாறாக இந்த பிராண்ட் ஒரு புதிய பிளஸ் மாடலை அறிமுகப்படுத்தியது.

இதே நிலைப்பாடு தான் ஐபோன் 15 சீரிஸிலும் கடைபிடிக்கப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதாவது ஐபோன் 15 சீரீஸின் கீழ் ஐபோன் 15 மினி என்கிற மாடல் எதுவும் வெளியாகாது. இதற்கிடையில், பிளிப்கார்ட் வலைத்தளமானது ஐபோன் 13 மினி மீது பெரிய அளவிலான தள்ளுபடியை அறிவித்துள்ளது. இன்னும் சொல்லப்பினால் இந்த விலையில் ஐபோன் 13 மினி கிடைப்பது இதுவே கடைசி வாய்ப்பாக கூட இருக்கலாம்.

நினைவூட்டும் வண்ணம் ஆப்பிள் ஐபோன் 13 மினி ரூ.69,900 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இது ரூ.7,901 என்கிற நேரடி தள்ளுபடிக்கு பிறகு பிளிப்கார்ட்டில் ரூ.61,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர நீங்கள் எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளின் கீழ் ரூ.2,000 தள்ளுபடியை பெறலாம்.

இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 13 மினியின் விலையை ரூ.59,999 ஆக குறைக்க முடியும். இது தவிர பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.36,100 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸும் கிடைக்கிறது. இப்படியாக பிளிப்கார்ட் வழங்கும் அனைத்து சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகளையும் சரியாக பயன்படுத்தும் பட்சத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மினியை வெறும் ரூ.23,899 க்கு சொந்தமாக்க முடியும்.

ஐபோன் 13 மினி மாடலின் அம்சங்களை பொறுத்தவரை, இது ஐபோன் 13 சீரீஸின் பேஸிக் வேரியண்ட் ஆகும். இது 5.4 இன்ச் அளவிலான சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே, ஆப்பிளின் ஏ15 பயோனிக் சிப்செட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் ரெக்கார்டிங்குடன் கூடிய 12எம்பி டோயல் ரியர் கேமரா செட்டப், நைட் மோட் உடனான 12எம்பி ட்ரூ1டெப்த் செல்பீ கேமரா போன்றவைகளை கொண்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, ஆப்பிளின் புதிய ஐபோன் மாடல்களான ஐபோன் 15 சீரீஸ் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது செப்டம்பர் 12 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கும் ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

புதிய ஐபோன் 15 சீரீஸின் கீழ் ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) அல்லது ஐபோன் 15 அல்ட்ரா (iPhone 15 Ultra)என்கிற 4 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iPhone 13 Mini likely to discontinued By Apple after iPhone 15 Launch Flipkart gives heavy discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X