இதுதான்னு சொல்லல., இப்படியும் இருக்கலாம்: செப்.,14 நடக்கும் ஆப்பிள் நிகழ்வு- ஐபோன் 13 அம்சங்கள் இதுதானா?

|

ஐபோன் 13 சீரிஸ் அடுத்த வாரம் அறிமுகமாகும் என கூறப்படும் நிலையில் இதன் விவரங்கள், விலை மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்கள் லீக் ஆகியுள்ளது.

ஐபோன் 13 வெளியீட்டு நிகழ்வு

ஐபோன் 13 வெளியீட்டு நிகழ்வு

ஐபோன் 13 வெளியீட்டு நிகழ்வுக்கான நேரடி ஒளிபரப்பை எப்படி பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம். ஆப்பிள் நிறுவனத்தின் கலிபோர்னியா ஸ்ட்ரீமிங் நிகழ்வு செப்டம்பர் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வை நேரடியாக பார்க்க ஆர்வமுள்ள பார்வையாளர்கள் இந்த நிகழ்வை ஆப்பிள் நிகழ்வு பக்கத்துக்குசெல்லலாம் (இதை கிளிக் செய்யலாம்). அதேபோல் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஐபோன் 13 சீரிஸ்

ஐபோன் 13 சீரிஸ்

ஐபோன் 13 சீரிஸ் குறித்து முன்னதாகவே ஏணைய கசிவுகள் வெளிவந்தது. கசிவுத் தகவலின்படி ஐபோன் 13 சாதனமானது பிளாக், ப்ளூ, இளஞ்சிவப்பு, ஊதா மற்றும் வெள்ளை ஆகிய வண்ண விருப்பங்களில் வரும் என கூறப்படுகிறது.

64 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

64 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

அதேபோல் ஐபோன் 13 ப்ரோ சாதனமானது பிளாக், சில்வர், கோலட் மற்றும் ப்ரான்ஸ் வண்ண விருப்பங்களில் வரும் என கூறப்படுகிறது. ஐபோன் 13 சாதனமானது 64 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு என இரட்டை வேரியண்ட்களில் வரும் எனவும் ஐபோன் 13 ப்ரோ 128 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்சேமிப்புடன் வரும் எனவும் 512 ஜிபி சேமிப்பு வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது.

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ சாதனங்களானது செப்டம்பர் 14 ஆம் தேதி கலிபோர்னியா ஸ்ட்ரீமிங் நிகழ்வில் வெளிவரும் என கூறப்படுகிறது. அதேபோல் புதிய ஐபோன் குறித்து பல்வேறு வதந்திகள் பரவுகின்றன. சிலர் இது ஐபோன் 12 எஸ் என அறிமுகப்படுத்தலாம் என கூறுகின்றனர். ஆனால் வருகிற சாதனங்களில் பல மாற்றங்கள் இருப்பதால் இது ஐபோன் 13 என்று அழைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதையடுத்து செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியீட்டு நிகழ்வில் சாதனம் பெயர் விவரங்கள் தெரியவரும் என கூறப்படுகிறது.

மிகப் பெரிய மேம்பாட்டு வசதி

மிகப் பெரிய மேம்பாட்டு வசதி

ஐபோன் 12 சீரிஸ் உடன் ஒப்பிடுகையில் ஆப்பிள் தனது ஐபோன் 13 சீரிஸ் சாதனத்தை மிகப் பெரிய மேம்பாட்டுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிறந்த கேமரா, பெரிய பேட்டரி, அதிக புதுப்பிப்பு விகித எல்டிபிஓ டிஸ்ப்ளேக்கள் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பானது அப்படியே இருக்கும் என கூறப்படுகிறது.

செப்டம்பர் 14, 2021 ஆப்பிள் நிகழ்வு

செப்டம்பர் 14, 2021 ஆப்பிள் நிகழ்வு

ஆப்பிள் செப்டம்பர் 14, 2021 அன்று நிகழ்வு நடத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் 13 தொடர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் தொடர்ந்து பல ஆண்டுகளாக செப்டம்பர் மாதத்திலேயே புதிய ஐபோன் தொடரை அறிமுகப்படுத்தி வருகிறது. இது கடந்த ஆண்டு மட்டும் மாறுபட்டு இருந்தது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மட்டும் ஆப்பிள் ஐபோன் வெளியீடு தாமதமானது.

புது சாதனத்தின் பெயர் விரைவில்

புது சாதனத்தின் பெயர் விரைவில்

இதை தவிர ஆப்பிள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் புதிய ஸ்மார்ட்போன் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி செப்டம்பர் 14, 2021-ல் ஆப்பிள் புதிய நிகழ்வை உறுதி செய்திருக்கிறது. ஐபோன் 13 என்பது தற்போது யூகிக்கப்பட்ட பெயராகவே இருக்கிறது. செப்டம்பர் 14 ஆம் தேதி ஆப்பிள் நிகழ்வு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நான்கு சாதனங்கள் இடம்பெறும் என தகவல்

நான்கு சாதனங்கள் இடம்பெறும் என தகவல்

ஐபோன் 13 தொடரில் ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு சாதனங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இருப்பினும் நிறுவனத்தால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. வெளியான தகவலின்படி ஐபோன் 13 சாதனம் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டால் அக்டோபர் மாதம் சந்தைக்கு வரும் என கூறப்படுகிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Iphone 13 Might be Launching With these Specification: How to Watch Apple Event?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X