Home
News

அட்ராசக்கை.. iPhone 13 இவ்வளவு குறைத்த விலையிலா? யோசிக்காம அள்ளி போடுங்க.. என்ன விலை?

ஐபோன் 13 (iPhone 13) சாதனத்தை இவ்வளவு குறைந்த விலையில் வாங்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அமேசான் தளத்தில் நாளை துவங்கும் Amazon Great Republic Day Sale 2024 விற்பனையில் ஐபோன் 13 சாதனத்தை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.

அமேசான் இந்தியா தளத்தில் நாளை ஜன.13 முதல் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல்ஸ் 2024 (Amazon Great Republic Day Sale 2024) விற்பனை துவங்குகிறது. இது ஜனவரி 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் பல தயாரிப்புகளை நாம் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் என்றாலும் கூட, ஐபோன் 13 மீது அறிவிக்கப்பட்டுள்ள சலுகை மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.

அட்ராசக்கை.. iPhone 13 இவ்வளவு குறைத்த விலையிலா? அள்ளி போடுங்க..

உண்மையை சொல்ல போனால், ஐபோன் 13 சாதனத்தை நீங்கள் இப்போது ரூ.49,999 என்ற விலையில் வாங்க முடியும். இது அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல்ஸ் 2024 (Amazon Great Republic Day Sale 2024) இல் கிடைக்கும் பெஸ்ட் சலுகை விலையாகும். இந்த சிறப்பு விற்பனைக்கு முன்பு வரை ஐபோன் 13 சாதனத்தின் அசல் விலை ரூ.59,900 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, இப்போது ஐபோன் 13 மீது கிடைக்கும் சலுகை பற்றி முழு விபரத்தை இப்போது பார்க்கலாம். இன்றைய விலை விபரத்தின் படி, ஐபோன் 13 சாதனம் ரூ.52,999 என்ற விலையில் காணப்பட்டுள்ளது. இதற்கு மேல் சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக ஐபோன் 13 ஸ்மார்ட்போனின் மீது ரூ.3000 நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஐபோன் 13 போனின் விலை ரூ.49,999 ஆக குறைந்துள்ளது. இத்துடன், சில வங்கி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் சலுகையாக ரூ.1000 தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், எந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு இது கிடைக்கும் என்பது நாளை சிறப்பு விற்பனை துவங்கி பின்னர் தெரிய வரும்.

ஐபோன் 13 (iPhone 13):

இத்தகைய சலுகைக்கு பிறகு, ஐபோன் 13 அறிமுகம் செய்யப்பட்ட அசல் விலையுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இந்த சாதனத்தின் விலை மீது ரூ.10,000 முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு விலை குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 சந்தையில் விற்பனைக்கு வந்து 2 வருடங்கள் ஆகிவிட்டதினால் சிலருக்கு இதை வாங்கலாமா என்ற சந்தேகம் இருக்கும்.

iPhone 13 ஆனது 2021 ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. iPhone 13 சாதனம் OLED டிஸ்ப்ளே (Display), 12MP டூயல் கேமரா (Dual camera), 5G, A15 பயோனிக் சிப் (Bionic chipset) மற்றும் மேக்சேஃப் (MagSafe) மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றுடன் வருகிறது.

ஐபோன் 13 சாதனத்தை நீங்கள் புதிய iPhone 15 மற்றும் iPhone 14 உடன் ஒப்பிட்டுப் பார்த்தால், லேட்டஸ்ட் மாடல்கள் தான் சிறப்பானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருவேளை உங்களுக்கு ஐபோன் பிராண்டில் இருந்து குறைந்த விலையில் ஒரு போனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஐபோன் 13 சிறந்த தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 13 Gets Rs 10000 Discount In Amazon Great Republic Day Sale 2024 Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X