Home
News

இதைவிட சலுகையில் ஐபோன் 13 கிடைக்காது: ரூ.18,000 வரை தள்ளுபடி பாஸ்!

க்ரோமா இணையத்தில் ஐபோன் 13 சாதனத்துக்கு சிறந்த ஒப்பந்த சலுகையை வழங்குகிறது. இந்த அறிவிப்பில் வங்கி சலுகைகள் மற்றும் பரிமாற்ற சலுகை உள்ளிட்டவை அடங்கும்.

க்ரோமா இணையதளத்தில் சலுகை

க்ரோமா இணையதளத்தில் சலுகை

ஐபோன் 13 சாதனத்தை க்ரோமா இணையதளத்தில் ரூ.48,000 என வாங்கலாம். இந்தியாவில் ஐபோன் 13 விலை ரூ.79,900 என இருக்கிறது. ஐபோன் 11 64ஜிபி சாதனத்தின் மூலம் வர்த்தகம் செய்யும் போது புதிய ஐபோன் 13 சாதனத்தை ரூ.49,900 என வாங்கலாம்.

ஐபோன் 13 சாதனத்துக்கு பல்வேறு சலுகைகள்

ஐபோன் 13 சாதனத்துக்கு பல்வேறு சலுகைகள்

ஐபோன் 13 சாதனத்துக்கு தொடர்ந்து சலுகை மழை பொழிந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும். நீங்கள் ஐபோன் சாதனத்தை வாங்க திட்டமிட்டிருந்தால் க்ரோமா இணையதளத்துக்கு செல்லலாம். ஐபோன் 13 சாதனத்துக்கு சிறந்த ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இதில் வங்கி சலுகைகள் மற்றும் பரிமாற்ற சலுகைகள் உள்ளிட்டவை அடக்கம். க்ரோமா இணையதளத்தில் இந்த சாதனத்துக்கு ரூ.10,000 வரை குறைக்கப்பட்டிருக்கிறது. ஐபோன் 13 சாதனமானது கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் 13 தொடரில் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 மினி உள்ளிட்டவை இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சாதனத்தை செப்டம்பர் மாதம் சந்தையில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 13 சாதனத்துக்கு வழங்கப்படும் சலுகைகள்

ஐபோன் 13 சாதனத்துக்கு வழங்கப்படும் சலுகைகள்

ரூ.79,000 விலையில் உள்ள ஐபோன் 13 சாதனம் க்ரோமாவில் ரூ.10,000 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்த ஐபோன் 13 சாதனத்தை ரூ.69,900 என குறைந்த விலையில் வாங்கலாம். இதன்மூலம் நீங்கள் முன்னதாகவே ஐபோன் சாதனம் பயன்படுத்துபவராக இருந்தால் அதை பரிமாற்றம் செய்யப்படும் பட்சத்தில் ஐபோன் 13 சாதனத்தை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். ஐபோன் 11 64 ஜிபி வேரியண்ட் பயன்படுத்தப்படும் பட்சத்தில் இதை பரிமாற்றம் செய்யும் போது ரூ.16,000 வரை தள்ளுபடியை பெறலாம். அதேபோல் ஐபோன் 11 128ஜிபி பயன்படுத்தப்படும் பட்சத்தில் இதை பரிமாற்றம் செய்தால் ரூ.18,420 வரை தள்ளுபடி பெறலாம்.

அதிகளவு தள்ளுபடி

அதிகளவு தள்ளுபடி

அதேபோல் ஐபோன் 12 64ஜிபி சாதனம் பயன்படுத்தப்படும் பட்சத்தில் இதை பரிமாற்றம் செய்தால் உங்களுக்கு ரூ.21,540 வரை தள்ளுபடி கிடைக்கும். இருப்பினும் இந்த தள்ளுபடி பரிமாற்றத்துக்கு பதிலாக உள்ளூர் சில்லறை கடைகளில் விற்பனை செய்தால் கூடுதலாகவே பணம் ஈட்டலாம். ஐபோன் 11 64ஜிபி சாதனத்தை பரிமாற்றம் செய்து புதிய ஐபோன் 13 வாங்கும் போது ரூ.49,900 வரை தள்ளுபடி பெறலாம். கூடுதல் சேமிப்பக வேரியண்ட் பரிமாற்றம் செய்யும் போது ரூ.48,000 என வாங்கலாம். கூடுதலாக எச்டிஎஃப்சி கார்ட்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது.

6.10' இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

6.10' இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

ஐபோன் 13 சாதனம் 6.10' இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 இல் இயக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்த சாதனம் ஆப்பிள் A15 பயோனிக் Apple A15 Bionic (5 nm) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமராக்களைப் பொறுத்தவரையில், ஐபோன் 13 ஒரு இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 12 மெகாபிக்சல் முதன்மை அல்ட்ரா வைடு கேமரா f/1.8 துளையுடனும், மற்றொரு 12 மெகாபிக்சல் கேமரா f/1.8 துளையுடனும் வைடு லென்ஸ் கேமராவை கொண்டுள்ளது.

பின்புற கேமரா அமைப்பில் ஆட்டோஃபோகஸ் அம்சம்

பின்புற கேமரா அமைப்பில் ஆட்டோஃபோகஸ் அம்சம்

பின்புற கேமரா அமைப்பில் ஆட்டோஃபோகஸ் அம்சமும் உள்ளது. வீடியோவை பொறுத்தவரையில் சினிமாட்டிக் மோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் 5ஜி அம்சமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபிக்காக ஒரு ஒற்றை கேமரா அமைப்பு, 12 மெகாபிக்சல் தரத்தில் f/2.2 துளையுடன் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 ஐ அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் பயனர்களுக்கு பிரைவசி முன்பை விட இன்னும் அதிகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மாக் சார்ஜ்ர் உடன் ஆப்பிள் ஐபோன் 13 சாதனம் விற்பனைக்கு கிடைக்கிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

ஐபோன் 13 சாதனமானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த சாதனம் 12 எம்பி மற்றும் 12 எம்பி என்ற டூயல் லென்ஸ் ஆதரவோடு வருகிறது. அதேபோல் முன்புறத்தில் 12 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஐபோன் 13 சாதனமானது 6.1 இன்ச் 1170 x 2532 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் ஹெக்ஸா கோர் செயலி ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் பாதுகாப்பு அம்சத்துக்கு என கொரில்லா கிளாஸ் வசதி, வாட்டர் ப்ரூப் வசதி மற்றும் ரெட்டினா டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Iphone 13 Gets Huge Discount in Croma with Bank Offers and Exchange Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X