Home
News

வெடித்து சிதறிய iPhone 13.. லட்ச ரூபாய் போட்டு வாங்கிய போனின் லட்சணம் இதானா? ஐபோன் பயனர்களே உஷார்..

ஐபோன் (Apple iPhone) என்றாலே நம்பிக்கை.. நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு என்றாலே அது ஐபோன் மட்டும் தான் என்று கூறும் அளவிற்கு, ஆப்பிள் (Apple) நிறுவனம் ஐபோன்கள் மீது ஒரு ஆணித்தரமான நம்பிக்கையை விதைத்துள்ளது. காஸ்ட்லீ போனாக இருந்தாலும், நம்பி வாங்க ஐபோன் தான் பெஸ்ட்.. ஐபோன் இருந்தால் தான் தனி கெத்து என்று பல காரணங்களை சகட்டுமேனியாக மக்கள் மனதில் பதிய வைத்த ஒரு சாதனம் என்றால் அது ஐபோன் (iPhone) மட்டும் தான். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பே இல்லை என்று நம்புகிறோம். ஆனால், இந்த நம்பிக்கை இப்போது உடைக்கப்பட்டுள்ளது.

லட்ச ரூபாய்க்கு நெருக்கமான தொகை கொடுத்து வாங்கிய ஐபோனின் லட்சணம் இது தானா? என்று கேள்வி எழுப்பும் விதமாக ஒரு நிகழ்வு நடந்தேறியுள்ளது. ஆப்பிள் ஐபோன் சாதனத்தின் மீது ஆப்பிள் ரசிகர்களுக்கு இருந்த நம்பிக்கை இப்போது ஆட்டம் காணப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு ஆப்பிள் ஐபோன் சாதனம் வெடித்து சிதறி (iPhone exploded), மிகவும் ஆபத்தான ஒரு பெரும் சேதத்தை அதன் பயனருக்கு ஏற்படுத்தியுள்ளது. இது இப்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

வெடித்து சிதறிய iPhone 13.. லட்ச ரூபாய் போனின் லட்சணம் இதானா?

வெடித்து சிதறிய iPhone 13.. லட்ச ரூபாய் போட்டு வாங்கிய போனின் லட்சணம் இதானா?

உத்திர பிரதேசத்தில் உள்ள அலிகாரில் உள்ள ஒரு நபர் பயன்படுத்தி வந்த ஐபோன் சாதனம், அவருடைய பேண்ட் பாக்கெட்டில் தீப்பிடித்து வெடித்து சிதறியுள்ளது (iPhone blasted in pant pocket). இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடித்து சிதறிய ஐபோன் (iPhone blast) மாடல் ஒரு ப்ளூ நிற ஐபோன் 13 (iPhone 13) சாதனம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. டூயல் கேமராவுடன் பேக் பேணல் மற்றும் முன்பக்க டிஸ்பிளே வெடித்து சிதறிய புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்தியாவில் இப்போது ஐபோன் 16 (iPhone 16 in India) சாதனங்கள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், இன்னும் சந்தையில் ஐபோன் 12 (iPhone 12) மற்றும் ஐபோன் 13 (iPhone 13) போன்ற பழைய மாடல் ஐபோன் சாதனங்களும் கூட குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு தான் வருகின்றன. அதிக காசு கொடுத்து ஐபோன் வாங்க முடியாத, தீவிரமான ஐபோன் வெறியர்கள், இப்போது தங்களிடம் இருக்கும் பணத்தில் சிக்கனமாக செலவு செய்து, ஐபோன் 13 போன்ற மாடல்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

எந்த மாடல் ஐபோன் வெடித்து சிதறியது? எங்கே இந்த நிகழ்வு பதிவானது?

இந்த ஆர்வத்தின் விளைவாகவே உத்திர பிரதேசத்தின் அலிகாரில் உள்ள நபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு ஐபோன் 13 மாடலை புதிதாக வாங்கி பயன்படுத்தி வந்திருக்கிறார். நேற்றைய தினம், வழக்கம் போல அவர் ஐபோனை பயன்படுத்திருக்கிறார். வழக்கம் போல அவர் பேண்ட் பாக்கெட்டில் ஐபோனை வைத்திருக்கிறார். திடீரெனெ அவருடைய பேண்ட் பாக்கெட் வழக்கத்திற்கு மாறாக சூடாவதை அவர் உணர்ந்திருக்கிறார்.

திடீரென அவர் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சூடு பறக்க புகையும் எழுந்துள்ளது. என்னவாக இருக்கும் என்று அவர் கவனிக்க துவங்கிய அடுத்த நொடியே, அவர் பாக்கெட்டில் இருந்த ஐபோன் சாதனம் தீப்பிடித்து எரிய துவங்கியுள்ளது (iPhone burned in pocket). தீப்பிடித்து எரியும் போனை, அந்த நபர் பாக்கெட்டில் இருந்து எடுத்து வெளியில் ஏறிய, அவருடைய போன் சிறிது நேரத்தில் வெடித்து சிதறி இருக்கிறது. தீக்காயங்களுடன் அந்த நபர் மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

அவருடைய தொடை பகுதியில் பலத்த தீக்காயங்கள் மற்றும் அவருடைய கையில் லேசான தீக்காயங்களும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு இப்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஐபோன் 13 வெடித்த காரணம் (iPhone 13 blast reason) இன்னும் தெளிவாக தெரியவில்லை. அதிக சூடு காரணமாக இருக்குமோ, அல்லது வேறேதேனும் காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு ஐபோன் பயனர்களை பீதி அடைய செய்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 13 Blast In Pant Pocket Mobile Exploded Case Went Viral On Internet iPhone Users On Alert
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X