Home
News

இந்த விலைனா இதுவே வாங்கலாமே: அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடி- ஐபோன் 13 வாங்க சரியான நேரம்!

என்னதான் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்தினாலும் ஐபோன் பயன்பாடு என்பது பலரின் ஆசையாக இருக்கும். இருப்பினும் ஐபோன் விலைகள் என்பது மிக அதிகமானதாகவே நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கேற்ப அம்சங்களும் வடிவமைப்புகளும் சாதனத்தில் இடம்பெறும். அவ்வப்போது ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் ஐபோன்களுக்கு எதிர்பார்க்க முடியாத அளவிற்கு தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. அதன்படி தற்போது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 சாதனத்துக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் மேம்பட்ட ஐபோன் சாதனத்தை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் ஐபோன் 13 சாதனத்தை ரூ.52,600 என்ற விலைக்கு வாங்கலாம். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு தளங்களும் ஐபோன் 13 சாதனத்துக்கு சிறந்த சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஐபோன் 13 அமேசான் சலுகை

ஐபோன் 13 அமேசான் சலுகை

ஐபோன் 13 128 ஜிபி மாடல் ஆனது ரூ.79,900 என்ற விலையில் பட்டியலிடப்பட்டது. இ-காமர்ஸ் நிறுவனம் கூடுதலாக 19% தள்ளுபடியை வழங்குகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.15,000 வரை சேமிக்க முடியும், இதன்மூலம் இந்த சாதனம் ரூ.64,900 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. பழைய சாதனங்களுக்கு ரூ.12,300 வரை பரிமாற்ற தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. தள்ளுபடி மற்றும் பரிமாற்ற சலுகை உட்பட இந்த ஐபோன் 13 சாதனத்தை ரூ.52,600 என வாங்கலாம். அதேபோல் எக்ஸ்சேஞ்ச் சலுகையானது நீங்கள் பரிமாற்றம் செய்யப்படும் ஸ்மார்ட்போன் நிலையை பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து வேரியண்ட்களுக்கும் தள்ளுபடி

அனைத்து வேரியண்ட்களுக்கும் தள்ளுபடி

அதேபோல் ஐபோன் 13 256 ஜிபி மாடல் ஆனது ரூ.89,900 என்ற விலையில் பட்டியலிடப்பட்டிருந்தது. தற்போது இந்த சாதனமானது தள்ளுபடியுடன் ரூ.79,490 என்ற விலையில் கிடைக்கிறது. அதேபோல் 512 ஜிபி மாடலானது ரூ.1,09,900 என்ற விலையில் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் 9 சாதவீத தள்ளுபடியுடன் ரூ.99,900 என்ற விலையில் கிடைக்கிறது. மேலும் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆகிய இரண்டு மாடல்களுக்கும் ரூ.12,300 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியுடன் வாங்கலாம்.

பிளிப்கார்ட் சலுகை

பிளிப்கார்ட் சலுகை

பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 சாதனம் 128 ஜிபி வேரியண்ட்-க்கு 12 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் இந்த சாதனத்தை ரூ.69,900 என்ற விலையில் வாங்கலாம். கூடுதலாக இந்த ஐபோன் 13 சாதனத்துக்கு ரூ.16,000 வரை பரிமாற்ற சலுகையும் வழங்கப்படுகிறது. தள்ளுபடி மற்றும் பரிமாற்ற சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போனை ரூ.53,900 என்ற விலையில் வாங்கலாம். பரிமாற்ற சலுகையாக நிறுவனம் ரூ.16,000 வரை அறிவிக்கப்பட்டிருந்தாலும் இது எக்ஸ்சேஞ்ச் பழைய சாதனங்களின் நிலையை பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 சாதனத்தின் 256 ஜிபி மாடலை ரூ.79,900 என்ற விலையிலும் 512 ஜிபி மாடலை ரூ.99,900 என்ற விலைப் பிரிவிலும் வாங்க முடியும். இரண்டு மாடல்களும் ரூ.16,000 வரை தள்ளுபடி பரிமாற்ற சலுகையுடன் வாங்கலாம். அதேபோல் மூன்று மாடல்களுக்கும் ரூ.3000 வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

6.10' இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

6.10' இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

ஐபோன் 13 சாதனம் 6.10' இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 இல் இயக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்த சாதனம் ஆப்பிள் A15 பயோனிக் Apple A15 Bionic (5 nm) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமராக்களைப் பொறுத்தவரையில், ஐபோன் 13 ஒரு இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 12 மெகாபிக்சல் முதன்மை அல்ட்ரா வைடு கேமரா f/1.8 துளையுடனும், மற்றொரு 12 மெகாபிக்சல் கேமரா f/1.8 துளையுடனும் வைடு லென்ஸ் கேமராவை கொண்டுள்ளது.

பின்புற கேமரா அமைப்பு

பின்புற கேமரா அமைப்பு

பின்புற கேமரா அமைப்பில் ஆட்டோஃபோகஸ் அம்சமும் உள்ளது. வீடியோவை பொறுத்தவரையில் சினிமாட்டிக் மோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் 5ஜி அம்சமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபிக்காக ஒரு ஒற்றை கேமரா அமைப்பு, 12 மெகாபிக்சல் தரத்தில் f/2.2 துளையுடன் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 ஐ அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் பயனர்களுக்கு பிரைவசி முன்பை விட இன்னும் அதிகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மாக் சார்ஜ்ர் உடன் ஆப்பிள் ஐபோன் 13 சாதனம் விற்பனைக்கு கிடைக்கிறது.

12 எம்பி மற்றும் 12 எம்பி என்ற டூயல் லென்ஸ் ஆதரவு

12 எம்பி மற்றும் 12 எம்பி என்ற டூயல் லென்ஸ் ஆதரவு

ஐபோன் 13 சாதனமானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த சாதனம் 12 எம்பி மற்றும் 12 எம்பி என்ற டூயல் லென்ஸ் ஆதரவோடு வருகிறது. அதேபோல் முன்புறத்தில் 12 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஐபோன் 13 சாதனமானது 6.1 இன்ச் 1170 x 2532 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் ஹெக்ஸா கோர் செயலி ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் பாதுகாப்பு அம்சத்துக்கு என கொரில்லா கிளாஸ் வசதி, வாட்டர் ப்ரூப் வசதி மற்றும் ரெட்டினா டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Iphone 13 Available at Huge Discount Price in Amazon and Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X