Home
News

Apple வச்ச டிவிஸ்டு.. மீண்டும் விற்பனைக்கு வந்த iPhone 12 Mini மாடல்.. ஆனால் 2 கண்டிஷன்!

என்னப்பா காதுல பூ சுத்துறீயா? என்று சிலர் கேட்கலாம். கடந்த செப்டம்பர் 2022 இல் ஐபோன் 14 சீரிஸை அறிமுகப்படுத்திய கையோடு ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோன் 12 மினி மாடலை 'டிஸ்கன்ட்டினியூ' (Discontinue) செய்துவிட்டது, அதாவது அதை தயாரிப்பதை நிறுத்திவிட்டது.

நிலைமை இப்படி இருக்கும் போது.. ஆப்பிளின் லேட்டஸ்ட் மாடல்களாக ஐபோன் 15 சீரீஸே (iPhone 15 Series) அறிமுகமாகிவிட்ட நிலையில்.. பழைய ஐபோன் 12 மினி (Apple iPhone 12 Mini) மாடல் எப்படி மீண்டும் விற்பனைக்கு வர முடியும்? இது நிச்சயம் பொய்யாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால்.. அது முற்றுலும் தவறு!

மீண்டும் விற்பனைக்கு வந்த iPhone 12 Mini மாடல்!

உண்மையிலேயே ஐபோன் 12 மினி மாடலானது மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது தான். ஆனால் இதில் இரண்டு சிக்கல்கள் அல்லது நிபந்தனைகள் உள்ளன. முதலாவதாக, ஐபோன் 12 மினி மாடலானது இந்திய சந்தையில் அல்ல, அமெரிக்க சந்தையில் (US Market) மட்டுமே மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.

இரண்டாவதாக விற்பனைக்கு வந்துள்ள ஐபோன் 12 மினி மாடல்கள் எல்லாமே ரீஃபர்பிஷ்டு (Refurbished) மாடல்கள் ஆகும். அறியாதோர்களுக்கு ரீஃபர்பிஷ்டு என்றால், வர்ணம் பூசுதல், பழுதுபார்த்தல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளால் மீண்டும் புதிய தோற்றத்தை பெற்ற பழைய அல்லது பயன்படுத்தப்பட்ட மாடல்களாகும்.

மீண்டும் விற்பனைக்கு வந்த iPhone 12 Mini மாடல்!

இதற்கிடையில், ​​​​ஒரு வருடத்திற்கு பிறகு ஆப்பிள் தனது அமெரிக்க இணையதளத்தில் (US Website) ஐபோன் 12 மினியின் புதுப்பிக்கப்பட்ட மாடலை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் இந்த ஐபோனின் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் (256GB Storage Option) மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது

ஐபோன் 12 மினியின் 256ஜிபி ஆப்ஷன் $529 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.44,200 க்கு வாங்க கிடைக்கிறது. இது முன்னதாக விற்கப்பட்ட (ரீஃபர்பிஷ்டு ) ஐபோன் 12 மினியின் 128ஜிபி ஆப்ஷனின் விலையை ($579) விட $50 மலிவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் விற்பனைக்கு வந்த iPhone 12 Mini மாடல்!

இந்த செப்டம்பரில் ஐபோன் 15 சீரீஸ் அதிகாரப்பூர்வமாக அறிமுகமான பிறகும் கூட பழைய ஐபோன் 13 மினி (iPhone 13 Mini) மாடல் நிறுத்தப்பட்டது. ஆனால் இம்முறை இது வெறுமனே நிறுத்தப்படவில்லை; கைவிடப்பட்டது. அதாவது ஆப்பிள் இனிமேல் மினி சீரீஸின் (Mini Series) கீழ் எந்த மாடலையும் அறிமுகம் செய்யாது என்று அர்த்தம்; ஐபோன் 13 மினி மாடலின் புதுப்பிக்கப்பட்ட மாடல்கள் கூட தற்போது விற்பனை செய்யப்படவில்லை.

இந்நிலைப்பாட்டில் தான் அனைவரையும் ஆச்சரியப்படும் விதமாக, ஐபோன் 15 சீரீஸ் வெளியான சில மாதங்களுக்கு பிறகு, ஐபோன் 12 மினி மாடலின் 256 ஜிபி வேரியண்ட் "புதுப்பிக்கப்பட்ட அவதாரத்தில்" ஆப்பிளின் அமெரிக்க இணையதளத்தில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது, ​​ஆப்பிள் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக விற்கப்படும் ஒரே ஐபோன் மினி மாடல் இதுவாகும்.

ஒருவேளை உங்களுக்கு ஆப்பிளின் மினி மாடல்கள் மீது எந்த ஆராவமும் இல்லை, அடுத்த ஐபோன் எஸ்இ மாடல், அதாவது ஆப்பிள் ஐபோன் எஸ்இ 4 (Apple iPhone SE 4) எப்போது அறிமுகமாகும் என்று காத்துகொண்டு இருக்கிறீர்கள் என்றால்.. அதுகுறித்து எங்களிடம் சில லேட்டஸ்ட் தகவல்கள் உள்ளன.

ஒரு சமீபத்திய லீக்ஸ் தகவலின்படி, ஐபோன் எஸ் 4 மாடலானது 2 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான ஐபோன் 14 மாடலை போன்ற வடிவமைப்பு (iPhone 14 Like Design) மற்றும் இந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 15 மாடலில் இருந்து சில முக்கிய அம்சங்களை (iPhone 15 Features) ஒருங்கிணைக்கும். இதெல்லம் ஒருபக்கம் இருக்க இது சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 12 Mini Refurbished Available Apple US Website
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X