Home
News

iPhone 12 மினி விலை இவ்வளவு கம்மி-ஆ! இப்படி குறைந்த விலையில் வாங்க ஒரு வாய்ப்பு-ஆ?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களை வாங்க உலகளவில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். என்ன தான் ஐபோனின் விலை அதிகமாக இருந்தாலும், மக்களின் ஆர்வம் மட்டும் குறையவில்லை. இப்போது, ஐபோனின் மினி வெர்ஷனை குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆம், ஐபோன் 12 மினி (iPhone 12 Mini) மாடலை, இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்த விலையில் வாங்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் முறையாக ஐபோன் 12 மினி மாடல் மீது நம்ப முடியாத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை விலையில் எப்படி புதிய ஐபோன் 12 மினி மாடலை வாங்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

iPhone 12 மினி விலை இவ்வளவு கம்மி-ஆ! இப்படி ஒரு வாய்ப்பு-ஆ?

ஐபோன் 12 மினி ஒரு தரமான கையடக்க பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த சாதனம் OLED டிஸ்பிளேவுடன் A14 பயோனிக் சிப்செட் உடன் வருகிறது. இது 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன் உடன் வருகிறது. இப்போது இந்த அட்டகாசமான சாதனத்தை குறைந்த விலையில் வாங்க பிளிப்கார்ட் தளம் வழியாக கிடைக்கிறது. இத்துடன் கிடைக்கும் சலுகைகள் பற்றிய விபரங்களை பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளம் இந்த ஐபோன் 12 மினி மாடலின் விலையை மிகவும் அதிகமாக குறைத்துள்ளது. இந்த சாதனத்தை வாங்க இதுவே மிகவும் சரியான நேரம். ஐபோன் 12 மினி மாடலின் அசல் விலை ரூ.59,900 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மீது இப்போது ரூ.9,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஐபோன் 12 மினி மாடலின் விலை ரூ.50,900 ஆகி குறைந்துள்ளது.

இதன் மூலம் ஐபோன் 12 மினி சாதனத்தின் மீது 14% சலுகை கிடைக்கிறது. இது மட்டுமின்றி, இந்த சாதனத்தின் மீது கூடுதல் சலுகையாக வங்கியின் ஆஃப்பர்களும், எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது. கூடுதல் சலுகையை பற்றி பேசுகையில், இந்த சாதனத்தின் மீது ரூ.35,000 வரை எக்ஸ்சேஞ் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் நிலைக்கு ஏற்ப, எக்ஸ்சேஞ் வேல்யூ தீர்மானிக்கப்படும்.

iPhone 12 மினி விலை இவ்வளவு கம்மி-ஆ! இப்படி ஒரு வாய்ப்பு-ஆ?

உங்கள் ஏரியாவின் பின் கோடு நம்பரை உள்ளிட்டு, உங்கள் இருப்பிடத்திற்கு எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்குமா என்பதை சோதனை செய்து பாருங்கள். இதற்கு மேல், கூடுதல் வங்கி சலுகையாக, HDFC கிரெடிட் மாற்று டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கு ரூ.1,250 கேஷ் பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பயன்படுத்தி, ஐபோன் 12 மினி சாதனத்தை நீங்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
iPhone 12 mini gets unbelievable offer via flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X