iPhone 12 Mini வாங்க நல்ல சான்ஸ்.. அசல் விலையில் இருந்து ரூ.48,900 வரை விலை குறைத்து வாங்க முடியும்..
குடியரசு தின விற்பனையை முன்னிட்டு பல ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் ஏராளமான தயாரிப்புகளின் மேல் புதிய தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 12 மினி சாதனம் கடந்த அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், முதல் முறையாக இப்போது நம்பமுடியாத தள்ளுபடியுடன் விற்பனைக்கு வருகிறது. இதை எப்படி மிகக் குறைந்த விலையில் வாங்கலாம் என்று பார்க்கலாம்.

iPhone 12 Mini போன் மீது அபார சலுகை
iPhone 12 Mini போனை முதல் முறையாகக் குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சலுகை மற்றும் எக்ஸ்செஞ்சு சலுகைகள் மூலம் ரூ.48,900 விலையில் புதிய ஐபோன் 12 மினி போனை வாங்கலாம். இந்த சலுகை பற்றிய முழு விபரங்களைப் பார்ப்போம். அமேசானின் பிரைம் குடியரசு தின விற்பனை இன்று தொடங்கப்பட்டுள்ளது. குடியரசு தின விற்பனை நாளை முதல் அனைவருக்கும் திறக்கப்படும்.

ரூ. 12,400 வரை எக்ஸ்சேஞ்சு தள்ளுபடி
அமேசான் இந்தியா மீது, ஐபோன் 12 மினி போன் ரூ. 64,490 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கும். எஸ்பிஐயின் கிரெடிட் கார்டு சலுகை மூலம் பயனருக்கு ரூ. 6,000 இன்னும் குறைவாக ஐபோன் 12 மினி வாங்க முடியும். உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்சு மூலம் ரூ. 12,400 வரை தள்ளுபடி பெற முடியும். இது ஐபோன் 12 மினியின் அடிப்படை 64 ஜிபி மாடலுக்கானது. இந்த சலுகை ஐபோன் 12 மினியின் 128GB மாடலுக்கும் கிடைக்கிறது.

ஐஸ்டோர் சலுகை
இந்தியாவின் ஐஸ்டோர் வழியாகவும் இந்த ஐபோன் 12 மினி சலுகையை நீங்கள் பெறலாம். ஐபோன் 12 தொடர்களில் சலுகைகளையும் கொண்டுள்ளது. இங்கே, எச்.டி.எஃப்.சி வங்கி வாடிக்கையாளர்கள் ஐபோன் 12 மினி மீது ரூ. 6,000 வரை கேஷ்பேக் பெறலாம். இது எக்ஸ்சேஞ்சு சலுகையுடன் கூடுதல் ரொக்கம் இணைந்து ரூ. 9,000 மற்றும் ரூ. 3,000 நன்மைகளை நீங்கள் பெறலாம்.

ரூ. 48,900 வரை விலை குறைத்து வாங்க முடியும்
ஐபோன் 12 மினி ரூ. 63,900 விலையில் கிடைக்கிறது, ஆனால் இந்த சலுகையுடன் ரூ. 48,900 வரை உங்களால் புதிய ஐபோன் 12 மினி போனை வாங்க முடியும். புதிய சலுகைகள் அமேசானின் வலைத்தளத்திலும், இந்தியா ஐஸ்டோரின் வலைத்தளத்திலும் இப்போது முதல் லைவில் உள்ளது.


Click it and Unblock the Notifications